நச்சுயிரியை வெல்லும் தாய்மையின் அரசியல்
பட மூலம், Reuters/ TheAtlantic ஒரு மருத்துவமனை. தனிமைப்படுத்தப்பட்ட அறை. மூச்சுத்திணறல் உச்சத்தை எட்டுகிறது. அன்பான கணவன் அருகில் வந்து ஆறுதல் சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி. இரு நுரையீரல்களிலும் நச்சுயிரி ஏற்படுத்திய கபம். மரணபயம் இருளாகக் கவிழ்கிறது. குடும்பத்தை நினைக்கிறாள்….