இணையத்தள வழிகாட்டல் குறிப்புகள்
உரிமையுடனான, அவமதிக்காத ஒரு தொனியை நாம் ஊக்குவிக்கிறோம். பின்வரும் எதனையும் நாம் வரவேற்கமாட்டோம்:
- அவதூறு கற்பிக்கும் சாத்தியம் கொண்ட கூற்றுகள்
- கீழ்த்தரமான, அப்பட்டமான அல்லது இனவாத மொழிப் பாவனை
- தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள், அவமதித்தல்கள் அல்லது அச்சுறுத்தல்கள்
- வர்த்தகரீதியான உற்பத்திகளின் முன்னேற்றங்கள்
- அனுமதியின்றி மற்றொரு மூலத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்
- சம்மதமின்றி பிரசுரிக்கப்பட்ட பிரத்தியேகமான தனிப்பட்ட தகவல்கள்
- மன்றத்தின் விடயத்திற்கு சம்பந்தப்படாத குறிப்புகள்
- கலந்தரையாடல்களுக்கு நேரடியாக சம்பந்தப்படாத விடயத்துக்கான மிகைத்தொடர்புகள் (Hyperlinks)
தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்
- உங்களது குறிப்பு அல்லது கட்டுரை உடனடியாக தோன்றாதுவிடின், அதனை திரும்பவும் சமர்ப்பிக்கப்படாது.
- தயவுசெய்து மற்றையவர்களை மரியாதையுடன் நடாத்துங்கள். விரோதத்துடன் தாக்குதல் மற்றும் குறை காணுதலும் மாற்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபரைத் தாக்காது விடயத்தைத் தாக்குங்கள்.
- பகைமை உரை, இழிவார்த்தைகள் கொண்ட கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
- களத்தில் பதற்றத்தை மூட்டிவிடுவதற்கு எதிர்பார்க்கும் அல்லது ஓர் அபகீர்த்தி ஏற்படுத்தும் தன்மையிலான கருத்துக் குறிப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது, அல்லது இயலுமான விரைவில் இணையத்திலிருந்து நீக்கப்படும்.
- மாற்றம் சொந்தமான மற்றும் படைப்பாற்றலுடனான எழுதுதலுக்கான இடமாகும், அது திரும்ப எழுதுவதற்கோ அல்லது பின்னேற்றம் செய்வதற்கான இடமல்ல.
ஓர் இடுகைக்கு பதிலாக ஒரு இடுகையை அல்லது குறிப்பை நீங்கள் எழுதும் போது, பின்வரும் பரிந்துரைகளை மனதில் கொண்டு எழுதவும்
- தன்மை வடிவத்தை (உ-ம்: நான், நாங்கள்) உபயோகிக்கவும் மற்றும் குறுஞ்சொற்களை உபயோகிக்க வேண்டாம்.
- பிரதிபலிப்பு உடையவராக இருங்கள், உங்களால் முடிந்த வரை பிரச்சினைகளை முறைமைப்படுத்துங்கள்.
- கருத்துக்கள் மற்றும் மாற்றுக்கருத்துகளை பிரேரிக்கவும்.
- உண்மையைச் சொல்லுங்கள், உண்மையாக இருங்கள். தெரிந்து கொண்டு பொய் கூற வேண்டாம்.
- உங்களது அடையாளம் மற்றும் நீங்கள் எழுதுபவர்களைப் பற்றிய அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இடுகையை அனுப்புவதற்கு முன் சிந்தியுங்கள்!
மாற்றம் பிரதிபலிப்பான மற்றும் சிந்தனையைத் தூண்டிவிடும் பின்வரும் வகையிலான உள்ளடக்கங்களுக்கு திறந்த தன்மை கொண்டது
- பொருட் செறிவானதும் மற்றும் ஆர்வத்தை தூண்டுகின்றதும்
- நீதி, மனித உரிமைகள் என்பவற்றுக்கான மறுப்பு மற்றும் யுத்தநிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்கள் என்பவற்றுக்கு சாட்சிகளைக் கொண்டிருத்தல்
- கட்டாயமாக மனிதத்தன்மை உடையதாக இருத்தல் மற்றும் மோதல்கள் மற்றும் சமாதானத்தை மாற்றுக் கலாச்சாரம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கண்ணோட்டங்கள் ஊடாக விமர்சித்தல்.
பிரஜைகள் ஊடகவியல் பற்றிய எங்கள் கருத்து மற்றும் இங்குள்ள உள்ளடக்கங்கள், பின்வருவனவற்றை கடைப்பிடிக்கின்றன
- நேர்மைத்தன்மை: கடும் உழைப்பு மற்றும் சட்டபூர்வமான தன்மை
- தைரியம்: சுயாதீனமானதும் மற்றும் திறனாய்வு தன்மையானவை, உள்ளடக்கங்கள் பிரதான ஊடகங்கள் கண்டுகொள்ளாத நுணுக்கமான உட்பார்வை கொண்டவை மற்றும் உண்மையை வெளிக் கொணர்பவை.
- உறுதிப்படுத்தக் கூடிய வரை பொறுப்புக்கூறத்தக்கவை, பொறுப்பானவை மற்றும் நம்பகத்தன்மையானவை, ஆகையால் இங்கே கேட்கின்ற குரல்களும் மற்றும் அபிப்பிராயங்களும் தீவிரமானவையாகவும் மற்றும் இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றின் மீது விவாதிப்பதற்கு பங்களிப்பவர்களுடையதாகவும் கருதப்படுகின்றது.
- அறிவு: உண்மைக்கான தொடர்ச்சியான தேடல், உண்மை பன்முகங்களைக் கொண்டது என்பதையும் மற்றும் அவற்றுள் தனியே ஏதேனும் ஒன்றினால் மட்டும் ஆனது பொய் என்பதை அறிதல்.
- நீதி: இலங்கையின் அனைத்து சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களுக்காக மதித்தல் மற்றும் நேர்மையாக இருத்தல்.
- சமத்துவம்: எந்தவொரு அமைதிச்செயன்முறைக்கும் கலாச்சாரப் பன்மைத்துவம் மற்றும் பால்நிலைக் கூருணர்வு என்பன முக்கியமான தூண்களாக உள்ளன என்தை அங்கீகரித்தல்.
எங்களது ஒன்லைன் கலந்துரையாடல்களில் நாங்கள் எதிர்பார்ப்பது உங்களது வேலைத் தலத்தில் இருந்து, நண்பர்கள் குழுவிலிருந்து அல்லது வீட்டிலிருந்து ஒருவருடன் நீங்கள் உரிமையுடன் பரிமாறிக்கொள்ளும் வகைக்கு நெருங்கியதானதையாகும். அது வாதங்களை முன்வைப்பவர்களிற்கு எதிராக விவாதங்களின் பொருள் மீது கவனம் கொள்வதைக் கருதுகின்றது. அத்தோடு, அது அவமதித்தல்கள் மற்றும் தனிப்பட்ட நோக்கிலான கருத்துக்ளைத் தவிர்ப்பதையும் கருதுகிறது. உங்களது தரப்பு வாதத்தை அநாகரீகமான வகையில் இல்லாது இயலுமான வரை உறுதி கொண்டதாக மேற்கொள்வதற்கு நாம் ஊக்குவிக்கிறோம்.
சக இடுகையாளர் ஒருவரினாலான ஒரு குறித்த கட்டுரை அல்லது கருத்துக் குறிப்பு – சிறுபிள்ளைத்தனமானது அல்லது முட்டாள்தனமானது அல்லது விவேகமற்றது எனக் கண்டால், அந்த அடையாளங்களை உபயோகிக்காது உங்களது மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தேவையான மேலதிக பணியை தயவு செய்து செய்யவும். புத்திசாலித்தனமான மட்டந்தட்டுதல்களுடன் வாதத்தை வெல்வதற்கல்லாது வேறுபட்ட பார்வைகளுடன் சகாக்கள் மத்தியில் கலந்துரையாடலை வளர்ப்பது இதன் நோக்காகும்.
பரிகாசம் என்பது அதனை வாசிப்பவர்களை விட அதனை எழுதுபவருக்கு கூடுதல் புத்திசாலித்தனமானது என வழமையில் தோன்றலாம். நிந்திப்போர். அச்சுறுத்துவோர், துஷ்பிரயோகிப்போர் அல்லது வேறுவகையில் இங்கு குறிப்பிட்ட வழிகாட்டல்களுடன் இணங்காதவர்களை நாங்கள் தீவிரமாக பின்தொடர்வோம் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
துஷ்பிரயோகங்களுக்கு எதிரான அனைத்து முறைப்பாடுகளையும் நாம் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். தளம் வேர்ட்பிரஸினால் (WordPress) செய்வதற்கு இயலுமாக ஏற்பாடளித்த முறைக்கு அப்பாற்பட்ட வகையில் இல்லாது, இந்த வலைப் பக்கத்தில் இடுகையிட்டு மற்றும் கருத்துப் பதிவு செய்தவர்களின் விபரங்களை தன்னிச்சையாகவே பதிவுசெய்து கொள்ளும். அது பொது IP முகவரிகைளை உள்ளடக்கியிருக்கலாம். இந்த தகவல், குறை காணுதல், பகைமை உரை மற்றும் வேண்டாத குறிப்புகள் என்பவற்றினால் இந்த்த் தளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு திரும்பத் திரும்ப முயற்சிக்கும் குற்றம்புரிவோர்களின் ISP களை அறிவிப்பதற்கு உபயோகிக்கப் படலாம்.
யாரேனுமொரு பங்களிப்பவரால் இடப்படும் இடுகைகள் மீது குறிப்பிட்ட மட்டுப்படுத்தல்களை விதிப்பதற்கு நாம் தயங்குகிறோம், ஆனால் கட்டுப்பாட்டைப் பிரயோகிப்பதற்கு நாம் உங்களை கேட்டுக் கொள்கிறோம். தனிப்பட்ட பங்களிப்பவர்களின் நிகழ்தகவு அல்லது வார்த்தை திறனினால் ஆதிக்கம் செலுத்தப்படும் கலந்துரையாடல்கள் குறைந்தளவிலான ஆர்வத்திற்கு உரியவையாகவும் மற்றும் எங்களுக்கு குறைந்த பயனுள்ளதாகவும் மாறி வருகிறது. சில சமயங்களில், பின்னூட்டல் பகுதியில் ஓர் உரையாடலை மேற்கொள்வதை விட சக இடுகையாளர் ஒருவருடன் நேரடியாகவே மின்னஞ்சலைப் பரிமாறிக் கொள்வது பொருத்தமாக இருக்கலாம்.
கடந்த காலத்தில் பரவலாக கருத்துக் கூறப்பட்ட ஒரு விடயம் மீது எழுதுகின்ற எழுத்தாசிரியர்களாக இருந்தால், இந்தக் குறிப்புகளை இணைத்து ஒரு புதிய இடுகையை ஆரம்பிப்பது, அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.