பட மூலம், Selvaraja Rajasegar
2018ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலப்பகுதியில் போரை காரணம்காட்டி அபகரிக்கப்பட்ட பாணம மக்களின் காணிகள் நல்லாட்சி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்பட்டாமல் இருப்பது குறித்து களத்துக்கு விஜயம் செய்து புகைப்படங்களுடன் மாற்றம் கட்டுரைகள் வெளியிட்டிருந்தது.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு, 365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்… என்ற தலைப்பில் புகைப்படக்கட்டுரை வெளியான அதேவேளை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யோகரதி மற்றும் தர்மராணி ஆகியோரின் கதையை 360 டிகிரியில் சுழலும் வகையிலான வீடியோ வடிவில் (விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம்) பதிவுசெய்திருந்தது.
நுண்நிதிக் கடனால் பெண்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்கள் குறித்து மாற்றம் பல கட்டுரைகளை வெளியிட்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில், தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும், கணவனின் வன்முறையைத் தாங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவும், அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பதற்காகவும், வீட்டைக் கட்டுவதற்காகவும் என நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட, தலைமறைவாக வாழ்ந்துவரும் 6 பெண்கள் அனுபவித்துவரும் இன்னல்களையும் பதிவுசெய்துள்ளது.
கோயிலுக்குள் 3 நாட்களாக தேங்காயும், பழமும் தண்ணீரையும் உணவாகக் கொண்டு வாய்பேச முடியாதவராக நடித்து கொழும்பிலிருந்து சிலாபம் உயிர் தப்பி சென்ற ஜெகதீஸ்வர சர்மாவின் அச்சம் தரும் பதிவை கறுப்பு ஜூலையின் 35 வருட பூர்த்தியை முன்னிட்டு நாம் பதிவுசெய்திருந்தோம்.
அதேபோன்று 70ஆவது சுதந்திர தினம், 35 வருட கறுப்பு ஜூலை பூர்த்தி, 70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினம், சர்வதேச தகவல் அறியும் தினம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் என பல வீடியோ நேர்க்காணல்களும் 2018ஆம் ஆண்டில் வெளிவந்திருந்தது.
கலைஞர் கருணாநிதி மறைவு, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் பற்றிய பார்வை, LGBTIQ சமூகத்தினரின் உரிமை, “டீமன்ஸ் இன் பாரடைஸ்” திரைபடம், தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் 20 இற்கு மேற்பட்ட தரமான தேயிலைத் தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் இதுவரை காலமும் தரம் குறைந்த தேயிலைத்தூள் தொழிலாளர்களுக்கு வழங்குவது போன்ற பதிவுகளை மாற்றம் வெளியிட்டிருந்தது.
மிக முக்கியமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சதி நடவடிக்கை தொடர்பாக மாற்றம் பல கட்டுரைகளையும் வெளியிட்டிருந்ததோடு, எமது சகோதர தளமான கிரவுண்விவ்ஸில் வெளியான கட்டுரைகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.
2018ஆம் ஆண்டு மாற்றம் தளத்தில் வெளிவந்த கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், வீடியோ நேர்க்காணல்கள், ஊடக அறிவு தொடர்பான பதிவுகள் சிலவற்றை கீழே தந்திருக்கிறோம்.
கட்டுரைகள்
2. ஜனாதிபதி சிறிசேனவுக்கு வண்ணத்துப் பூச்சியிடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்
3. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு பகிரங்க கடிதம்
4. விரல்கள்
5. டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல
6. தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை
8. 360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”
9. 360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”
11. மர்சூப் அறிக்கை ஷரிஆ சட்டத்திற்கு முரணானதா?
12. #BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா
13. (Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)
14. கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009
15. மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்
16. இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…
18. 365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…
19. “யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)
20. ராஜபக்ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்
மொழிபெயர்ப்பு கட்டுரைகள்
1. நீதித்துறையின் செய்தி: முதன்மையானவை அரசியலமைப்பும் ஜனநாயகமுமே
2. பிரதமர் பதவி நீக்கம், நாடாளுமன்றக் கலைப்பு: சட்ட ரீதியான பார்வை
3. பேஸ்புக் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ள மார்க் சகர்பர்க்
5. யானைவேலியால் விகாரைக்கு மட்டுமா பாதுகாப்பு? கிராமத்திற்கு இல்லையா?
6. ‘ஜனபலய’ பேரணியும் இலக்கங்களும்
7. இலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது?
8. போருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்
10. “கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”
11. இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்
12. புலப்படாத தடைகள்: ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்
13. பேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு திறந்த மடல்: தங்களது Community Standards ஐ நடைமுறைப்படுத்துங்கள்
14. கண்டி: வன்முறைக்கு அடித்தளமிடும் சிறுபான்மையினர் பற்றிய பிழையான நம்பிக்கைகள்
நேர்க்காணல்கள் (வீடியோ)
1. “LGBTIQ சமூகத்தவரின் உரிமைகள் மனித உரிமைகள் இல்லையா?” – வரதாஸ் தியாகராஜா
2. “இந்த அரசியல் யாப்பு யாருடையது?” – ஷ்ரீன் சரூர்
3. “சமூக ரீதியான பார்வையில் மாற்றம் நிகழவேண்டும்” – ஆரண்யா ராஜசிங்கம்
4. சர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்
5. கறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்?”
6. கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”
7. கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”
8. கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”
9. MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 11)
10. MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 10)
11. MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 9)
12. 70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…”
13. 70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”
14. 70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”
15. 70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”
ஊடக அறிவு தொடர்பான பதிவுகள்
1. INFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
2. INFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்
3. INFOGRAPHIC: புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்
4. INFOGRAPHIC: வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்
அனைவருக்கும் மாற்றத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!