ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் கட்டுரை

###

(பதுளையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிக்கும் எனக்குமான உரையாடல்)

தேத்தண்ணி குடிக்க தேயிலைத் தூள் எங்க வாங்குவீங்க?

தோட்டத்துல குடுப்பாங்க.

மாசம் சம்பளத்துல கழிச்சிக்குவாங்களா?

இல்ல, சும்மாதான், ஒரு கிலோ குடுப்பாங்க.

மாசம் முழுசா போதுமா?

இல்ல, மாசம் முடியறதுக்கு முன்னாடியே தூள் முடிஞ்சிரும். எங்கர் பக்கட் வாங்கினா பாதி மாசத்திலேயே முடிஞ்சிரும். அதோட காலையில அந்திக்கு, வேலைக்குனு தேத்தண்ணி கொண்டுபோவோம். அதனால மாசம் முழுசா பாவிக்க முடியாது. முடிஞ்சோன கடையிலதான் வாங்குவோம்.

என்ன தேயில குடிக்கிறீங்க?

என்ன தேயிலனு தெரியாது.

அந்த தேயிலை தூள் பெயர் தெரியுமா?

டஸ்ட்டுன்னு சொல்றாங்க.

நீங்க எடுக்குற கொழுந்துல என்னென்ன வகையான தேயிலைத்தூள் செய்றாங்கனு தெரியுமா?

ஒன்னு ரெண்டு தெரியும்.

கண்டிருக்கீங்களா?

இல்ல.

ஒரு நாளாவது குடிச்சிருக்கீங்களா?

(சிரிக்கிறார்)

குடிக்க ஆசை இருக்கா?

(மீண்டும் சிரிக்கிறார்)

இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் மூலமும் புகைப்படக் கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்.

கழிவு

70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வௌியாகும் கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.