பட மூலம், Stuff

இலங்கை நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையொன்றை 2018 மார்ச் 7ஆம் திகதி அங்கீகரித்ததுடன் 2018 ஏப்ரல் 15 முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஒழுக்காற்று விதிமுறைகளின் பிரிவு 8 நாடாளுமன்றத்தில் நல்லொழுக்கம் தொடர்பானது.

ஏற்பாடுகளில் எவற்றையாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீறும் சந்தர்ப்பங்களில் அல்லது ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொள்ளும் பட்சத்தில் எந்த நபரும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு ஒழுக்காற்று கோவை அனுமதியளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் முறைப்பாடு செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை அத்தாட்சிபடுத்தவேண்டும் என்பதே இதில் உள்ள பலவீனமாகும். இந்த நடைமுறை சுமையை நாடாளுமன்றத்தில் உள்ள  வன்முறைகளில் ஆர்வமற்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமப்பார்கள் என  எதிர்பார்க்கின்றோம்.

கிரவுண்ட்விவ்ஸ், சபாநாயகருக்கு அனுப்பிவைப்பதற்கான மாதிரி கடிதத்தை இங்கே வடிவமைத்துள்ளது. அதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.

மாதிரி கடிதம் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஒழுக்காற்று கோவையை மீறிய செயற்பாடுகள் குறித்த முறைப்பாடுகளையும், அது குறித்து படங்களையும் கொண்டுள்ளது.

வாசகர்கள் இதனை தரவிறக்கம் செய்து ஒழுக்காற்று விதிமுறைகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவுசெய்து சபாநாயகருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனுப்பவேண்டிய முகவரி,

சபாநாயகர்

இலங்கை நாடாளுமன்றம்

ஸ்ரீஜெயவர்த்தனபுர கோட்டை

இலங்கை

2018 நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை நடவடிக்கைகளின் வீடியோப் பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மாவட்ட ரீதியாக) தொலைப்பேசி இலக்கங்கள்

ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை Groundview இலும் சிங்கள மொழிபெயர்பை Vikalpa விலும் பார்க்கலாம்.

நன்றி: @groundviews