“ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தவுடன் மனித உரிமைகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்குமே ஆபத்து நிகழும் என்றே அனைவரும் அச்சம் கொண்டிருந்தார்கள். இது நிகழ்வதற்கான சாத்தியமே அதிகமாக இருந்தது. ஆனால், கொவிட் பெருந்தொற்று இந்நிலைமையை அப்படியே மாற்றியிருந்தது. பெருந்தொற்றைக் கையாளவேண்டி இருந்ததால் அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியாத ஒருநிலை அவருக்கு ஏற்பட்டது” என்று கூறுகிறார் சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன்.

மாற்றத்துக்கு வழங்கிய நேர்க்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். முழுமையான நேர்க்காணலைப் பார்க்க: