“ஒரு மாதத்துக்கும் மேலாக நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் நாங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று. இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சாப்பிடுகிறோம்? எங்களுடைய குழந்தைகளுக்கு பால் பக்கட் வாங்கிக் கொடுக்கிறோமா? பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் சூழ்நிலையில் இருக்கிறோமா? என்று பார்ப்பதற்கு யாரும் இல்லை. இது தொடர்பாக தொழிற்சங்கங்களிடம் முறைப்பாடு செய்திருக்கிறோம். அவர்களிடம் இருந்து எதுவித சாதகமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்று கூறுகிறார் மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியான வி. சண்முகநாதன்.

“தொழிலுக்குப் போன காலப்பகுதியில் இருந்து சந்தாப் பணம் கொடுத்து வருகிறோம். தேர்தல் காலப்பகுதியில் அவர்களுக்கு வாக்கும் அளிக்கிறோம். காலாகாலமாக நாங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு பல வருடங்களுக்கு உணவளிக்கலாம். சுமார் 650 குடும்பங்களுக்கு உணவளிப்பதென்பது பெரியதொரு விடயமாக இருக்காது என்று நினைக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.

ஓல்டன் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் மக்களின் தற்போதைய நிலை குறித்தும் வி. சண்முகநாதன் தெரிவிக்கும் கருத்தை கீழ் உள்ள வீடியோப் பதிவில் பார்க்கலாம்.

குறிப்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) அன்று பதிவுசெய்யப்பட்டது வீடியோ இது.