படம்: Selvaraja Rajasegar

“மலையக சமூகத்தின் இருப்பு தொடர்பான விடயம் இந்த சம்பளப் பிரச்சினையுடன் தொடர்புபட்டது. இக்கால கட்டத்தில் இது தொடர்பாக நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக கூட்டு ஒப்பந்தம் போன்ற ஏற்பாடுகளுக்குள் சிக்குண்டிருக்காமல் இலங்கையின் சம உரிமை கொண்ட சமூகமாக மலையக மக்களும் எப்போது எழுகின்றார்களோ அப்போதுதான் இதற்கான சில தீர்வுகள் கிடைக்கும். தொடர்ந்து தொழிலாளர்களாக இருப்பது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருப்பதையும் தாண்டி இந்த நாட்டின் சம உரிமை கொண்ட பிரஜைகளாக காணியுரிமை சார்ந்தும் முன்னெடுப்புகளை எடுக்காவிட்டால் இந்த இரண்டு, இரண்டரை வருட கூட்டு ஒப்பந்த நச்சு வலைக்குள்ளேயே நாம் சிக்குண்டிருக்கப் போகிறோம். இது குறித்தும் மலையகத் தலைமைகள், மலையக சமூகம் விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது” என்கிறார் சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான கௌதமன் பாலசந்திரன்.

“இலங்கையின் சம பிரஜைகளாக நாங்கள் அங்கீகரிக்கப்படாத வரைக்கும் நாம் முன்கொண்டு செல்லும் இந்த சம்பளப் போராட்டம் எங்களுடைய தொழிலுக்கான ஒரு போராட்டமாக இருக்குமே தவிர எங்களுடைய உரிமைக்கான, பிரஜா உரிமைக்கான, எங்களுடைய இருப்புக்கான ஒரு போராட்டமாக, இருப்புக்கான ஒரு உத்தரவாதமாக ஒரு போதும் இருக்காது.”

மாற்றம் தளத்துக்கு கௌதமன் பாலசந்திரன் வழங்கிய முழுமையான நேரக்காணலை கீழே காணலாம்.