“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.”

“கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.”

“இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.”

“உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.”

“வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.”

“அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”

இவர்கள் அனைவரும் மரத்திலிருந்து விழவில்லை. இவர்களுக்கு விபத்து நேரவில்லை. உடல் உபாதைகளுடன் பிறக்கவுமில்லை. 30 வருடங்களாக நீடித்த கொடூர போரினுள் சிக்குண்டு தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். காயப்பட்ட நேரமே செத்திருந்தால் இந்த நரக வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க நேர்ந்திருக்காதே என்று ஒவ்வொரு நாளும் அவஸ்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள்.

6 வயதாக இருக்கும்போது தலையில் காயமடைந்த அகழ்விழி உட்பட போரின்போது நேரடி தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி, ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலே மகளை இழந்து இரும்புத்துண்டுகளை சுமந்து வாழும் தாய் என 10 பேரை சந்திக்க முல்லைத்தீவு சென்றிருந்தேன். வயிற்றுப் பசிப் போராட்டத்துக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய குரல்களுக்கு செவிசாயுங்கள்.

Adobe Spark மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அல்லது கீழ் தரப்பட்டுள்ள  ஊடாக வாசிக்கலாம்.

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்


போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.