யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் அதனையொட்டிய உரையாடல்களும்
படம் | @garikaalan யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களின் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு கருத்தாடல்களும் பதிவுகளும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்செயல் கண்டிக்கப்பட…