படம் | VIKALPA

பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும் மக்கள் காத்திருக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கம் தனது அமைச்சரவையின் ஊடாக காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவதற்கு உறுதியளித்த போதும், நல்லாட்சியில் அமைச்சராக இருக்கும் தயா கமகே வனப் பாதுகாப்புப் பிரதேசத்தில் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதாகக் கூறிக்கொண்டு மீண்டுமொரு தடவை நில அபகரிப்பில் ஈடுபடுவதாக சூழலியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

பாணமையைச் சேர்ந்த பி. லீலாவதி,

“கடந்த அரசாங்கத்தின்போது மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் நாமல், அவருடைய தம்பி போன்றோர் எங்கள் நிலப்பகுதியில் ஹோட்டல்களை அமைத்தார்கள். அவர்களிடமும் எமது காணியைத் தருமாறு கேட்டுப் போராடினோம், தரவில்லை. இந்த அரசாங்கமும் அவ்வாறே செய்வதாக இருந்தால் எம்மை கொலை செய்துவிட்டு எமது காணியில் வீட்டில், கிராமம் முழுவதுமாக ஹோட்டல்களை கட்டிக் கொள்ளட்டும். நாங்கள் என்னதான் செய்வது…?” – மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எதுவித வித்தியாசம் இல்லையென்பதை லீலாவதியின் விரக்தியான பேச்சு நமக்கு உணர்த்துகிறது.

லீலாவதியின் கருத்தடங்கிய வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

நன்றி: விகல்ப