Photo: ALJAZEERA

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலே, அண்மையில் அபாயா அணிந்து வந்த முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை, அவர் சேலை அணிந்து வரவில்லை என்பதற்காக தனது கடமைகளைச் செய்வதனைக் கல்லூரியின் நிர்வாகம் தடுத்த சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். பல்லினங்கள் வாழும் இலங்கையில் இன, மத, கலாசார ரீதியான வேறுபாடுகளை விளங்கிக்கொள்ளுவதும், அவற்றின் ஜனநாயகபூர்வமான‌ வெளிப்படுத்தல்களுக்கு இடம்கொடுப்பதுவும், சமூக நீதியையும், ஜனநாயக விழுமியங்களையும் பேணுவதற்குமான அடித்தளமாகும். மாணவர்கள் மத்தியிலே இவ்விழுமியங்களை வளர்ப்பதே கல்வி சமூகத்தின் தலையாய கடமை. சண்முகா கல்லூரி நிர்வாகத்தின் இச்செயற்பாடு இனங்களுக்கிடையான முரண்பாடுகளை வளர்ப்பதாகவும், கூர்மைப்படுத்துவதாகவுமே அமைகிறது.

2018 காலப்பகுதியில் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு அபாயா அணிந்து வந்த நான்கு முஸ்லிம் ஆசிரியைகளை அபாயா அணியத் தடை எனக் கூறி வெளியேற்றியது கல்லூரி நிர்வாகம். இந்த நடவடிக்கைக்கெதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு  அவர்கள் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டைப் பரிசீலித்த ஆணைக்குழு கல்லூரி நிர்வாகத்தின் முடிவு தவறானதெனவும், மனித உரிமை மீறலெனவும் முடிவெடுத்து ஆசிரியைகளை மீண்டும் கற்பித்தல் பணிகளில் அமர்த்துமாறு பரிந்துரைத்தது. கடந்த 2019 பெப்ரவரியில் வந்த ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு கல்லூரி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவரான பஹ்மிதா ரமீஸ் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.  இவ்வருடம் ஜனவரி 19 அன்று, வழக்கின் நியாயப்பாட்டை உணர்ந்து, இரு தரப்பினரையும் ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர அரசு தரப்பு எடுத்த முயற்சிக்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர். அதன் விளைவாக  ஆசிரியை மீண்டும் சண்முகா கல்லூரிக்குக் கடமைக்குத் திரும்புமாறு கல்வி அமைச்சு கடிதம் மூலம் பணித்தது.

2022 பெப்ரவரி 2ஆம் திகதி அமைச்சின் கடிதத்துடன் கல்லூரிக்குச் சென்ற பஹ்மிதாவிற்கு எதிராக‌ கல்லூரி நிர்வாகத்தின் பக்கபலத்துடன் பெற்றோர் சிலரும் மற்றும் வெளி சக்திகளும் சேர்ந்து மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர் அபாயா அணிந்து கல்லூரிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள மறுத்து தனது பணியைத் தொடரவிடாமல் தடுத்தனர். இதற்கு மேலாக மாணவர்களைத் தூண்டிவிட்டு பஹ்மிதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தையும் நிகழ்த்தியது கல்லூரி நிர்வாகம். தனது பணியைத் தொடர முடியாத ஆசிரியை பஹ்மிதா மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சண்முகா கல்லூரி ஒரு அரச பாடசாலை. அரச சுற்றறிக்கையின் படி பெண்கள் சேலை அணிவது சட்டரீதியாகக்  கட்டாயமானதல்ல. பெண் ஆசிரியர்கள் கலாசாரத்திற்கமைய கௌரவமான உடை அணிதல் வேண்டும் என்கின்ற‌ அரச சுற்றறிக்கை, சேலையை பரிந்துரை செய்கிறது. நடைமுறையில் சிங்கள, தமிழ் பெண் ஆசிரியர்கள் சேலை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இவ்வகையில் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் அபாயா அணிந்து வருவதற்கு சட்ட ரீதியாக தடை ஏதும்  இல்லை.

அபாயா அணிந்து வந்த ஆசிரியர்களை 2018 இல் பணிசெய்ய விடாது தடுத்தது இனக்காழ்ப்புணர்வில் எழுந்த நிர்வாக முறைகேடு. அத்துடன், அரச நியமனக்கடிதத்தை உதாசீனம் செய்து தான் தோன்றித்தனமாக கல்லூரி நிர்வாகம் நடந்துகொண்டு மாணவர்களைத் தூண்டி விட்ட செயல் கலாசார வன்முறை மட்டுமல்ல, மாணவ சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் நிகழ்வுமாகும்.

இலங்கை அரசியலில் இனவாதமும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான கருத்தியலும் கோலோச்சும் இத்தருணத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அவசியமானது. முக்கியமாக சிறுபான்மை இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் ஒருமைப்பாடுமே இன்றைய தேவை. இன, மத தனித்துவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியது. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட மத, இன அடையாளத்திணிப்பாக மாறுவது ஆபத்தானது. இவ்வகையில் கல்விக்கூடங்களிலும் ஏனைய பொது நிலையங்களிலும் நிகழும் ஆடைத் திணிப்பு  நடைமுறை சகவாழ்வுக்கும், ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.

உடை, அலங்கார கலாசார திணிப்பு சண்முகா கல்லூரிக்கு மட்டும்   தனித்துவமானதல்ல. சீருடை என்ற போர்வையில் மத, கலாசார திணிப்பு குறிப்பிட்ட ஒரு மதத்தை முன்னிலைப்படுத்தும் மத சார்  கல்விக்கூடங்களில் பரவலாக நிகழ்கின்றது. இதன் விளைவாக வெவ்வேறு பாடசாலைகளிலே முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ, பௌத்த‌ மாணவர்கள், ஆசிரியர்கள், குறிப்பாக பெண்கள், பாதிப்புக்குள்ளாகின்றனர். வர்க்க வேறுபாடுகள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் ஏற்றத்தாழ்வு உணர்வுகளை சீருடைகள் ஓரளவு குறைக்கும் என்பது யதார்த்தமெனினும், சீருடை என்ற பதாகைக்குப் பின்னாலிருக்கும் மத, கலாசார திணிப்பு ஆபத்தானது. இவ்வகையில் மாணவிகளினதும், ஆசிரியைகளினதும் பல்வகைப்பட்ட‌ கலாசார வெளிப்பாடுகளைப் பாடசாலை நிர்வாகங்கள் கட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதமானது. இந்த ஜனநாயக விரோதச் செயன்முறைக்கு முடிவுகட்டி, பாடசாலைகள் மத, இனப் பன்மைத்துவத்தினை ஆடை, அலங்கார‌ம் உட்பட அனைத்து தளங்களிலும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்களையும், வெளிகளையும் உருவாக்கிக் கொடுப்பது அவசியம்.

எனவே:

  • சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகம் தனது செயலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
  • ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தடையின்றிக் கற்பிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்தி கடந்த கால தவறுகளை மீள் பரிசீலனை செய்து சுமூக நிலையை தோற்றுவிக்க வேண்டும்.
  • சீருடை என்ற பெயரிலே மேற்கொள்ளப்படும் எல்லா விதமான‌ கலாசாரக் கட்டுப்படுத்தல்களும், கலாசாரத் திணிப்புக்களும் இலங்கையின் பாடசாலை மற்றும் கல்விக் கட்டமைப்புக்களில் இருந்து உடனடியாக இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.

அறிக்கையினை ஆதரித்துக் கையொப்பமிடுவோர்:

  1. ஃபைனாஸ் அக்பர், மன்னார்
  2. எஸ். எல். உஸ்மான் அகீல், செய்தி முகாமையாளர், டெய்லி சிலோன்
  3. ஜோர்ஜ் அந்தோனிப்பிள்ளை, மன்னார்
  4. அந்தோனியம்மா, நகர சபை உறுப்பினர், மன்னார்
  5. கலாநிதி தர்சன் அம்பலவாணர், சேவைத் திருப்பணி மன்று, மட்டக்களப்பு
  6. ராகா அல்போன்ஸஸ், மன்னார்
  7. எஸ். எம். அனீஃபா
  8. கை.நிஹால் அஹமட், மனித எழுச்சி நிறுவனம், அம்பாறை மாவட்டம்
  9. ஒடையான் ஆறுமுகம், அரசு சாரா அமைப்புகளின் முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம், களுபோவிளை
  10. சரளா இம்மானுவேல், ஆய்வாளர், மட்டக்களப்பு
  11. நளினி இரட்ணராஜா
  12. நிர்மலா இராஜசிங்கம், தென்னாசிய ஒத்துழைப்புக் குழு
  13. வாசுகி இராஜசிங்கம்
  14. அனுராதா இராஜரெட்ணம், மட்டக்களப்பு
  15. சின்னையா இராஜேஸ்குமார், தென்னாசிய ஒத்துழைப்புக் குழு
  16. எஸ். ஈஸ்வரி
  17. யதுர்ஷா உலகேந்திரன், ஆய்வு உதவியாளர்
  18. கலாநிதி மொரீன் ஏர்னஸ்ட்
  19. லசிந்தா கணேசமூர்த்தி, எழுவாள் இளம் பெண்கள் சமூக மாற்ற கற்கை மாணவி
  20. அகிலன் கதிர்காமர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  21. சர்ஜனா கருணாகரன்
  22. ஹரிகீர்த்தனா கல்யாணசுந்தரம்
  23. ஜீ. கிருசாந்தன்
  24. ஆர். கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம்
  25. தேவசகாயம் பிரான்ஸிஸ் கிளென்டா
  26. எஸ். கிறிஸ்த்தம்மா, பிரதேச சபை உறுப்பினர், நாநாட்டான்
  27. மகேஸ்வரலிங்கம் குணசிங்கராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  28. சிவஸ்ரீ. வீ. சிவபாலன் குருக்கள், பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு
  29. மகாலக்ஷ்மி குருசாந்தன்
  30. டிலானி குறூஸ், நகர சபை உறுப்பினர், மன்னார்
  31. எஸ். கோபிகா
  32. கே. சத்தியசீலன்
  33. ஆர். சத்தியா
  34. எம். சந்திரவதனி, சமாதான நற்தூது பணியகம், மட்டக்களப்பு
  35. டீ. எம். சந்திரிக்கா, பிரதேச ச‌பை உறுப்பினர், நாநாட்டான்
  36. முத்துகிருஸ்ணா சர்வானந்தன், அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆயவகம், பருத்தித்துறை
  37. என். எம். சரூர்
  38. ஷ்ரீன் சரூர்
  39. ந‌. சிவகரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  40. ஆர். சிவதர்சினி, மன்னார்
  41. எஸ். சிவதாசன்
  42. சாம்பவி சிவாஜி, கொழும்பு பல்கலைக்கழகம்
  43. சிவமோகன் சுமதி, பேராதனைப் பல்கலைக்கழகம்
  44. மயில்வாகனம் சூரியசேகரம், யாழ் பிரஜைகள் ஒன்றியம்
  45. சண்முகம் செந்துராஜா, சொன்ட்
  46. காயத்ரி டிவகலாலா, ஆய்வாளர்
  47. வி. தனபாலன்
  48. கே. தஸ்னிமா, பிரதேச ச‌பை உறுப்பினர், முசலி
  49. மகேந்திரன் திருவரங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  50. கலாநிதி மொஹம்மட் முஹைதீன் நயீம், பணிப்பாளர், உயர்கல்விக்கான பாதிஹ் கல்வி நிறுவனம்
  51. விஜி நல்லையா, பிரான்ஸ்
  52. எஸ். நித்திகா
  53. எம். நிர்மலாதேவி
  54. எம். ஏ. நுஃமான்
  55. அப்துல் மஜீத் பாத்திமா இஃப்ராத் நுஹா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  56. ஷகீதா பாலச்சந்திரன்
  57. கல்யாணி பாலதாஸ், மன்னார்
  58. அனீஸா பிர்தௌஸ், ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம்
  59. எம்.பீ.எம். பிர்தௌஸ், பிஸ்மி கல்வி நிறுவனம்
  60. ஜோயல் பிரவீந், சமாதான நற்தூது பணியகம், மட்டக்களப்பு
  61. அகல்யா பிரான்சிஸ்கிளைன்
  62. ஜே. பிரிஸிகா, பிரதேச ச‌பை உறுப்பினர், மாந்தை மேற்கு
  63. ஷஃபான குல் பேகம்
  64. வண. சாமுவேல் ஜே. பொன்னையா
  65. வண. ஜூட் சுதர்சன் மகேந்திரன்
  66. எஸ். மதிவதனி
  67. கோபாலப்பிள்ளை மதீஸ்குமார்
  68. எஸ். மரியரொசலின்
  69. ஃபௌசர் மஹ்ரூஃப், லண்டன்
  70. மு.ம.மு.மஹ்ரூப்
  71. ஏ. ஜே. மஹீஸா, பிரதேச சபை உறுப்பினர், மன்னார்
  72. கே. மிஸ்ரா
  73. பெ. முத்துலிங்கம், சமூக செயற்பாட்டாளர்
  74. எஃப். முலிக்
  75. வண. ஜோன் ஜோசப் மேரி, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு
  76. மோகனதர்சினி பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பு
  77. சித்திரலேகா மௌனகுரு, இளைப்பாறிய பேராசிரியர்
  78. றூபவரன் யசோதரன்
  79. நிர்மலா யேசுதாசன், சமாதான நீதவான், முருங்கன்
  80. வை. ரஞ்சன்
  81. ஏ. ஆர். ஏ. ரமீஸ்
  82. ஏ. டீ. ஜே. ரஜனி
  83. ரஜனி ராஜேஸ்வரி
  84. எம். எஸ். ரினூஸ், திருகோணமலை
  85. எஃப். அலெக்ஸ் ரோச்சே, மன்னார்
  86. ம.வஸீலா
  87. வண. கலாநிதி. ஜே. சி. போல் றொஹான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  88. வண. பி. ராஜன் றோகான், சமாதான நற்தூது பணியகம், சீ. ஏ. சீ. எம்
  89. ஸர்மிளா ஸெய்யித்
  90. வீ. ஷாமினி
  91. உமா ஷானிக்கா, ஜேர்மனி
  92. ஏ. சீ. மீரா ஷாஹிப்
  93. எம்.ஏ.சி.எம். ஜவாஹிர், நல்லிணக்க நிலையம் (Harmony Centre) காத்தான்குடி
  94. ஜீவமுரளி, ஜேர்மனி
  95. வண. எம். லூக் ஜோன், அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
  96. ஐ.எல்.ஹாசிம், சர்வமதக்குழு அம்பாறை
  97. கே. ஹேமலதா

அறிக்கையினை ஆதரித்துக் கையொப்பமிடும் நிறுவனங்கள்:

  1. கிராமிய அபிவிருத்தி நிறுவனம், பாலாவி
  2. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம்
  3. சமதை, பெண்ணிலைவாத குழு, மட்டக்களப்பு
  4. சமாதான நற்தூதுப் பணியகம், சீ. ஏ. சீ. எம்
  5. பெண்கள் அபிவிருத்திப் புத்தாக்கிகள்
  6. பெண்கள் சந்திப்பு
  7. பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
  8. மன்னார் பெண்கள் அபிவிருத்திக்கான சம்மேளனம்
  9. மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு
  10. வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கம்
  11. வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்