நாங்கள் இங்கு வரும்போது வெறுமனமே கை வீசிக்கொண்டு வரவில்லை. மலையகத்துக்கே உரித்தான கலை, கலாசார அம்சங்களை எடுத்துக்கொண்டே வந்தோம். மலையகக் காமன்கூத்தை எடுத்துக்கொண்டு வந்தோம், தப்படியை எடுத்துக்கொண்டு வந்தோம், ஒப்பாரியை எடுத்துக்கொண்டு வந்தோம். இன்னும் பல பண்பாட்டு அம்சங்களை எங்களோடு சுமந்து வந்தோம் என்கிறார் கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். கருணாகரன்.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கந்தலோயா தமிழ் மகா வித்தியாலயம், மலையகத்தில் கல்வி மற்றும் மலையகக் கலை, பண்பாட்டில் சாதனைகள் படைத்து வரும் ஒரு முன்னணி தோட்டப் பாடசாலையாகும். இப்பாடசாலை உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்துள்ளதோடு, கலை – கலாசார நிகழ்வுகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.
கல்வியை மாத்திரம் மாணவர்களுக்கு புகட்டாமல் – அதன் வழியே மட்டும் முன்னேறி செல்லாமல் மலையகத்துக்கான தனி அடையாளத்தை கொண்டிருக்கக்கூடிய விடயங்களை அவர்கள் மத்தியில் கொண்டுசெல்வதோடு அவற்றை அறிமுகம் செய்யும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகிறோம் என்கிறார் அதிபர் கருணாகரன்.
கந்தலோயா பாடசாலை பிரவேசம், அங்கு மேற்கொண்ட புரட்சி, அதனால் எதிர்நோக்கிய சவால்கள், அர்ப்பணிப்பு, புரிந்த சாதனை மற்றும் மலையகம் என்ற அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் பணிகள் குறித்து அதிபர் எம். கருணாகரன் எம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் அவர் எம்மோடு பகிர்ந்துகொண்ட முழுமையான கருத்துக்களைப் பார்க்கலாம்.
