365 நாட்களாக உறவுகளை ஏந்தியிருக்கும் கைகள்…
365 நாட்கள், வீதியிலேயே கடந்துவிட்டது அந்த அம்மாக்களுக்கு. கடும் வெயிலடித்தும் மழை பெய்தும் காற்றடித்தும் அவர்கள் அசையவில்லை. இயற்கை அச்சுறுத்தலையும் தாண்டி செயற்கையான அச்சுறுத்தல்களுக்கும் ஓய்விருக்கவில்லை. அவற்றுக்கெல்லாம் முகம்கொடுத்து, சமாளித்துவிட்டு ஒரு வருடத்தை ஒரே இடத்தில், கொட்டிலொன்றில் கடத்திவிட்டார்கள். அருகிலிருக்கும் கந்தசுவாமிதான் தங்களுக்குத் துணையாக…