“இன்று என்னுடைய சகோதரர்களைத் தேடித்தருமாறு தாய்மார்கள் ஒரு வருடத்தைத் தாண்டி போராடிவருகிறார்கள். இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாமல் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டைக்கும் கடவுச் சீட்டுக்கும் மட்டும் இலங்கையின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எவ்வாறு என்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாட முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார் புருஜோத்தமன் தங்கமயில்.
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரை நேர்க்காணல் கண்டுவருகிறது. இன்றைய நேர்க்காணலில் சுதந்திரதினமும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளும் என்ற விடயப் பரப்பில் சுயாதீன ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான புருஜோத்தமன் தங்கமயில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவருடைய முழுமையான நேரக்காணலை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.
ஆசிரியர் குறிப்பு: தொர்புபட்ட கட்டுரைகள், 70ஆவது சுதந்திர தினத்தோடு தொடர்புடைய கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும், “11 கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்“