படம் | Selvaraja Rajasegar Photo

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன்.

அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு புடிக்கவேணும், மகன் நினைவா ஏதாவது பொருள் இருக்கா?” என்று கேட்டேன். அதற்கு, கண்ணீர் வெடித்து அவர்கள் அழுத அழுகை, சொற்களுக்குள் அடக்காத துயரமாகும்.

பாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருந்த பொருட்களை கண்ணீரில் நனைத்தவாறே கொண்டு வந்தார்கள். மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துப்பாக்கி ரவைகளுக்கு, ஷெல்களுக்கு மத்தியில் காப்பாற்றிவிட்டோமே என்ற பெருமூச்சுடன் கூட்டிச்சென்ற உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள் இன்று பரிதவித்து நிற்கிறார்கள்.

அந்தப் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியிருக்கும் உறவுகளின் கதையே இது.


உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1)


 

செல்வராஜா ராஜசேகர்


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்