இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிவரும் துயரங்கள் எண்ணிலடங்காதவை.

இராணுவமயமாக்கல், நில ஆக்கிரமிப்பு, காணாமலாக்கப்பட்டோர், பெண்களின் உரிமைகள் மற்றும் கைதிகளின் உரிமைகள் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பாக இன்றும் நாடு முழுவதுமாக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக பெண்கள் அன்றாடம் பலவாறான வன்முறைகளுக்கு முகம்கொடுத்துவருவதோடு, சட்டங்களும் அவர்களது அடிப்படை உரிமைகளை மறுத்துவருவது கவலைக்குரிய விடயமாகவே இருக்கிறது. பெண்களுடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான சட்டங்கள், தீர்மானம் எடுக்க முடியாமல் தடைபோடும் மதச் சட்டங்களை இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியிலிருந்து மதத்தலைவர்கள் வரை அமுல்படுத்திவருகிறார்கள். இந்த நிலையில், இலங்கை 70ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடுவதாக கூறப்படுகின்றபோதிலும் நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேலான பெண்கள் அந்த சுந்திரத்தின் காற்றை இன்னும் நுகர முடியாமல் இருப்பது வேதனையான விடயமாக உள்ளது.

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டிருக்கிறது. மனித உரிமை செயற்பாட்டாளரான சர்மிளா செய்யத் உடனான நேர்க்காணலே இன்று வெளியாகிறது.

“பெண்கள் சமத்துவமாக, கௌரவமாக, சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்ற உணர்வுபூர்வமான கொண்டாட்டத்தை, நினைவுகூறலை செய்யக்கூடிய ஒரு தினமாக இலங்கையின் சுந்திரதினத்தை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை” என்று கூறும் சர்மிளா செய்யத்தின் முழுமையான நேர்க்காணலை இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் மூலமாகவும் பார்க்கலாம்.