படம் | Selvaraja Rajasegar Photo
நான்:
“அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?”
அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா):
“இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த சேர்ட் மட்டும்தான் இருக்கு. அத கழுவி மடிச்சி வச்சிருக்கன்.”
“இருக்கு தம்பி. மூத்த தம்பி பாவிச்ச கெமரா ஒன்டு இருக்கு. சின்ன தம்பியின்ட சீப்பொன்டும், இவரின்ட சேர்ட்டும் இருக்கு தம்பி.”
“உடுத்த உடுப்போட ஆமின்ர பக்கத்துக்கு போன எங்களிட்ட ஒன்டுமே இல்ல. அவன் வருவான் என்டுதானே ஆமிட்ட குடுத்தோம்.”
“மூத்த மகன்ட கல்யாணத்துக்கு அவன் தச்சு போட்ட கோர்ட் இருக்கு தம்பி. கடைசி வரைக்கும் என்ட பேக்ல வச்சிருந்ததால அவன்ட ஞாபகத்துக்கு இது மட்டுமாவது இருக்கு தம்பி.”
“கணவர் பாவித்த பெட்சீட் இருக்கு. அவரின்ர நினைவு வரும்போது மகள்தான் போத்திக்கொள்றா.”
“இது அவனே தச்ச சேர்ட். எனக்கும் அவன்தான் தச்சுக் குடுப்பான்.”
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுடைய நினைவுகளுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன், அவர்கள் நடந்துதிரிந்த இடங்களுடன், அவர்கள் பழகிய மனிதர்களுடன்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்: புதியதொரு அத்தியாயமா அல்லது இன்னுமொரு வெற்று உறுதிமொழியா?
#WomensDay : இவர்களுக்குமா?
அண்மையில் புகைப்படக்கட்டுரை ஒன்றுக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர்களிடம், “படம் ஒன்டு புடிக்கவேணும், மகன் நினைவா ஏதாவது பொருள் இருக்கா?” என்று நான் கேட்டேன். அதற்கு, கண்ணீர் வெடித்து அவர்கள் அழுத அழுகை, சொற்களுக்குள் அடக்காத துயரமாகும்.
பாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருந்த பொருட்களை கண்ணீரில் நனைத்தவாறே கொண்டு வந்தார்கள். மீண்டும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துப்பாக்கி ரவைகளுக்கு, ஷெல்களுக்கு மத்தியில் காப்பாற்றிவிட்டோமே என்ற பெருமூச்சுடன் கூட்டிச்சென்ற உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள் இன்று பரிதவித்து நிற்கிறார்கள்.
அந்தப் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தியிருக்கும் உறவுகளின் கதையே இது.
செல்வராஜா ராஜசேகர்
சமூக ஊடகங்களில் மாற்றம்:
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்
ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்
இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்