“அடுத்த வருடம் , அதற்கடுத்த வருடங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய பொருளாதாரத்தை முன்னெடுக்காதமையே காரணமாகும். இந்த நாட்டில் விவசாய உற்பத்திகளைச் செய்வதற்குப் போதியளவு வளங்கள் இருக்கின்றன. அதனை நாம் முன்னெடுக்காமல் இருப்பதற்கும், செல்வாக்குள்ள உயர் வர்க்கத்துக்கான ஒரு நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை முன்கொண்டு போவதற்கும் இங்கு ஜனநாயகம் இல்லாததுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது” என்று கூறுகிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்.

கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 வருடங்களானதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரிடம் நேர்காணல் மேற்கொண்டுவருகிறது. அவற்றின் தொடர்ச்சியாக இன்று அகிலன் கதிர்காமரின் நேர்க்காணல் வெளியாகிறது. முழுமையான நேர்க்காணலை கீழே பார்க்கவும்.