2009 இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களை இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக உறவுகள் நினைவுகூர்ந்தார்கள்.
காலை 10.30 மணிக்கு இறுதிப் போரில் தாயை இழந்த சிறுமி பொதுச் சுடரேற்றி நினைகூரல் நிகழ்வை ஆரம்பித்து வைக்க வந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால் இருந்த சுடரை ஏற்றி கண்ணீர்மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த வருடம் பெரும் தொகையானோர் வருகை தந்தனர் என்று கூறும் ஏற்பாட்டுக் குழுவினர், இம்முறை திடீரென முளைத்த பாதுகாப்புச் சோதனைச் சாவடிகள், அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் போன்றவற்றால் மக்கள் அச்சம் கொண்டு வருகை தரவில்லை என்றும் கூறுகிறார்கள்.
நினைவஞ்சலி செலுத்த வந்த ஒவ்வொரு குடும்பத்துக்கு மரக்கன்றுகளையும் ஏற்பாட்டுக் குழு வழங்கியிருந்தது.
நினைவுகூரல் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்க்கலாம்.
போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.