Photo, Selvaraja Rajasegar
முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே NPP கட்சியும் செல்லப் போகின்றதா? அப்படி இல்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு 18 சிவில் சமூக நிறுவனங்களும் 135 தனிநபர்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழுமையான கடிதம்:
அரசு முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்புடையது. நீங்கள் செயலற்றவர்களாக இருக்கப் போகின்றீர்களா?
அண்மையில் வெளிவந்த காணொளி ஒன்றில், அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் அவர்கள், 1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையுமில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தச் சட்டம் தொடர்பாக கூறப்படும் கருத்துக்களை கருத்துக்களாக மாத்திரம் பார்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கருத்தாழமற்ற இவருடைய பேச்சினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சட்டத்தை திறுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியலமைப்பு உறுப்புரை 12 உப பிரிவு 1 இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சரி சமமானவர்கள் என்று கூறுகின்றது. அத்துடன், இவ்வடிப்படை உரிமையானது எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இந்த நிலையில், அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீதியாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி அரசின் பொறுப்பாகும். இந்த அரசியலமைபினூடான அடிப்படை மனித உரிமை அறிவுறுத்தலானது அரசு ஏற்றுக்கொள்ளாமல் பொறுப்பை அரசாங்கம் மதத் தலைவர்கள் மீது சாட்டுவது அரசு தன் கடமையில் இருந்து விலகுவதாக நாங்கள் கருதுகின்றோம்.
NPP அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை நீக்கும் நிலைப்பாட்டில் இருக்குமாயின் தற்போது அமுலில் இருக்கும் இந்த பாராபட்சமான சட்டத்தின் குறைபாடுகளால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன முறைமைகளைக் கையாளப் போகின்றது?
மேற்குறித்த அரசியலமைப்பு கோட்பாடுகளின் பிரகாரம், சமூகத்தில் உள்ள இளவயது திருமணங்களையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களையும் தடுத்து குடும்ப வாழ்வுகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
மேலும் ஒரு வரைமுறை இல்லாத பலதாரமணக் கோட்பாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவிகளையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது?
மேலும், ஆணாதிக்க கட்டமைப்பை மாத்திரம் முன்நிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது, பெண்களை எந்த வகையிலும் உள்வாங்க முடியாத அளவு பாராபட்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக காதிகள் முறைமை பெரும்பாலானவை ஊழல் நிறைந்ததாகவும் பாராபட்சம் மிகுந்ததாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது மேற்குறிப்பிட்ட இலங்கையின் 1978ஆம் ஆண்டுக்கான யாப்பின் அடிப்படை மனித உரிமை வலியுறுத்தல்களை முற்று முழுதாக மீறுகின்றது. எனவே, இதனை இவ் அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றது? மேலும் காதி முறைமையானது முழுவதுமே அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தினூடாக வரி செலுத்துபவர்களின் வரிப்பணத்தில் இருந்து அமுல்படுத்தப்படுகின்றது. ஆகவே, இதனைக் கேள்விக்குட்படுத்துவது அரசாங்கத்தின் கடமையுடன் இந்நாட்டு மக்கள் எல்லோரதும் பொறுப்புமாகும்.
ஆகவே, முழுமையாக அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டிய விடயத்தை கவனத்தில்கொள்ளாமல், “இது சமூகத்தின் கருத்துச் சுதந்திரம்” என்று தட்டிக் கழிப்பது முறையாகுமா? ஆகவே, அமைச்சவையின் பேச்சாளர் விஜித ஹேரத் பொறுப்பற்ற வகையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் NPP யின் நிலைப்பாடு என்ன? அதாவது, தேர்தல் விஞ்ஞாபனத்தில், “பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு பாகுபாடு காட்டுகின்ற மேலும் அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்ற சட்டங்களைத் திருத்துதல்” என்று கூறியிருக்க, ஏன் NPP யின் அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறான கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்?
NPP கட்சியானது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான மாயையான போக்கைக் கடைப்பிடிக்கின்றதா? கட்டாயம் NPP கட்சியானது பாரிய அளவு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களினது வாக்குகளைப் பெற வேண்டுமாயின் பெண்களாகிய எமக்கு, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் சார்ந்து NPP யின் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தலுக்கு முன்பதாகத் தெரிவிக்கவேண்டும். அப்படி இல்லாமல் நழுவிப் போவீர்களேயானால் முஸ்லிம் பெண்களுக்கு வகைப் பொறுப்புக் கூற முடியாத ஓர் ஆட்சியாகவேதான் உங்களது ஆட்சியும் அமையும்.
NPP கட்சியானது பாராபட்சமான கட்டமைப்புக்களை மறுசீரமைத்து எல்லோருக்கும் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கட்சியாக பிரதிபலித்தமையால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு வாக்களித்தோம்.
கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளும் இந்தச் சட்டத்தை ஆண்களுடன் மாத்திரம் கலந்துரையாடி எந்தத் திருத்ததிற்கும் உட்படுத்தாமல் இருந்தது. இதேபோல் NPP கட்சியும் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே செல்லப் போகின்றதா? அப்படி நடக்குமாக இருந்தால் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு விடிவு காலத்தைக் கொடுக்காத ஒரு ஆட்சி முறையைத்தான் நீங்கள் நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்பது நிரூபனமாகின்றது. அப்படி இல்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கையெழுத்திடுவோர்:
1. Nabeela Iqbal, Sisterhood Initiative, Kotte
2. Fawzul Himaya Hareed, Sisterhood Initiative, Kandy
3. Piyumi Wattuhewa, Sisterhood Initiative, Kiribathgoda
4. Angela Forman, Sisterhood Initiative, Colombo
5. Aqilah Nikhat Naleem, Sisterhood Initiative, Colombo
6. Samiha Mohamed Muhsin, Sisterhood Initiative, Kandy
7. Sumaiya Frahath ,Sisterhood Initiative , Matale
8. Muqaddasa Abdul Wahid, Sisterhood Initiative, Colombo
9. Shifa Najumudeen, Sisterhood Initiative, Matale
10. Amani Raji, Sisterhood Initiative, Colombo
11. Hafsah Muheed, Dehiwala
12. M. A. R Suhaina, Mount Lavinia
13. Shafna Faizer , Dehiwala
14. Naafia Sarifodeen ,Colombo
15. Humaira Akram , Kolonnawa
16. Mohamed Yaseen Minnathul Suheera
17. Abdul Cader Fathima Husna
18. Mohamed Haniffa Jiffriya
19. Sainulabdeen Janeeta
20. G. Rifa Mohamed Musthaffa
21. Abdul Majeed Fathima Murshitha
22. Yoosuf Rinoza
23. Mohamed Sitheeque Fathima Hani Zakkira
24. Bathusha Faroosa
25. Mohamed Caseem Hajara
26. K. Nihal Ahamed
27. M. I. Mohamed Hassan. Puttalam
28. M. S. M. Shazmi. Jaffna
29. A. M. Anfaz. Negombo
30. M. N. M. Muja. Puttalam
31. Bisliya Bhutto, Former Member of Puttalam Pradeshiya Sabha and Social Activist
32. Fathima Amra. Batticaloa
33. Fathima Bisriya. Jaffna
34. Fawzul Rifaya. Puttalam
35. Raseena Thawfeek. Puttalam
36. Fathima Fiyasa. Puttalam
37. Mujeeba Mujeeb. Puttalam
38. Fuad Faroosa. Colombo
39. Fathima Ilma. Puttalam
40. Fathima Risana. Puttalam
41. Sakina Mansoorally, Sisterhood Initiative, Colombo
42. Ahsan Afthar, Paragahadeniya
43. As Buhary Mohamed, Batticoloa, Human Rights Activist
44. S L M. Israth Ali, Ampara, Social activist
45. Jawahir Muhammadu Farhan,Batticoloa, Human Rights Activist
46. Cadar Basha Shaifun, Social activists and Researcher, Ampara
47. M. C. M. Meerasahibu, Manager RDF, Husainiyapuram Puttalam
48. Abdul Ramees, Husainiyapuram Social Activist. Puttalam
49. Fasildeen Muflik, Social Activist, Sooduventhepulavu, Vavuniya
50. Nasar Mohamed Kaffel, Social Activist, Pattanichchoor Vavuniya
51. Bavurtheen Mohamed Basrin, Social Activist, Moor Street, Mannar.
52. Mohamed Baseer Mohamed Safras, Palaviya Social Activist
53. Abdul Salam Mohamed Nafees, Teacher Puttalam
54. Zahira Ismail, Social Activist, Ampara
55. A. P. M. Nafeel, Teacher, Puttalam
56. Mohammad ismail maseen, Teacher, Kanamoolai
57. Kalanther Lebbe Fathima Zahrath (LLB), Addalaichenai, Intern-at Human Rights Commission of Sri Lanka
58. Kalanther Lebbe Fathima Zakeenath, Addalaichenai, LLB Undergraduate at University of Jaffna
59. Kalanther Lebbe Fathima Nafla, Addalaichenai, Development Officer at Ak.AL Muneera Girls High School
60. Zumana Ziyad, Panandura
61. Mihar Misbah, Paragahadeniya
62. Maideen pichai Sahul Hameed, Moulavi Addalaichenai
63. Kaleeullah Thasneema, Former member of pradesiya saba, Social activist and researcher Musali, Mannar
64. Arisha Ahmath, Behaviour Therapist, Puttalam
65. Lafeer Sana, Moulaviya, (Sumaya ladies arabic college), Rahmaniya, kinniya 01
66. M. A. M. Anfas, Ukuwela
67. K. P. Rifkhan, Kalpitiya
68. Ishfaque M – Puttalam
69. M. S. M. Zahir, Sainthamarudhu
70. M. A. M. Aadhil, Paragahadeniya
71. Shydhah Zaara Nizamudeen, Batticaloa, Human Rights Activist
72. Mohamed Fareed, Batticoloa, Social Worker
73. A R Janusa, BA Undergraduate at university of Peradeniya,Trincomalee (kanthela) Inter-at Human Rights trainer commission of Sri Lanka
74. Fathima Nuzaifa Nazeer, Ampara district, Human rights activist
75. Abdul Rauf Rasim Ahamed,Batticoloa, Eravur. Human Rights Researcher
76. M. I. M. Ijlal, Trincomalee, Human Rights Documentary Creator
77. A R Janusa, BA Undergraduate at university of Peradeniya , Trincomalee (kanthela)
78. Ismayil Aaysha banu, Puttalam, Bachelor of Social Work Undergraduate at NISD, Researcher & Social Activist
79. Sadhique Mohamed Ihsan,Trincomalee, Minority Rights Facilitator
80. Hameethu labbai mohemed farees, Trincomalee, Human Rights Trainer
81. R. Naska Pre school teacher, Peace Building Facilitator, Ampara
82. S.I.M.Nifras, Human Rights Journalist, Batticaloa
83. R. M. Shifan, Peace Building Facilitator, Trincomale
84. Murshith Mohamed, Ninthavur
85. A. F. Ramzaniya, Social Activist & Researcher,Puttalam
86. Sulaima lebbe Majitha Social Activist & Researcher, Vallaichenai
87. Akeela, Student, Kottaramulla
88. A. N. Aashiq Mohammed, Social Activist, Writer. At Humanity Sri Lanka.
89. Haizam Aminudeen, Social Activist, At Humanity Sri Lanka
90. Wahid Mohamed Ihmas, Social Activist, At Humanity Sri Lanka
91. Mohamed Shareef Mohamed Aaqeel, Social Activist, At Humanity Srilanka
92. Mazeena Bucker.Politician,Former MMC Member Moratuwa, Colombo District.
93. Juwairiya mohideen – Muslim women’s development trust
95. M.faheema bugum – Muslim women’s development trust
96. H.F.Humaidha – Kalpity Road, aalanguda , eathali
97. Mrs.Habeeba – Muslim women’s development trust
98. Nihla sahani- mullipuram , puttalam
99. N.F.Nasroon – kalpity Road , kandalkuda, Thalawila
100. Miss.sareeka – Muslim women’s development trust
101. Mrs.Ramsiya -Thillayadi, puttalam
102. Mrs. Aska – kalpity Road, vellangarai ,pallivasathurai
103. Miss.Imani – Koththantheevu,palavi
104. Saheeka Banu – k.k.street,puttalam
105. Mrs.Risna -Mannar Road, 2m kattai, puttalam
106. M.F.Musarrath – kalpity Road , janavasal, eathalai
107. Faahima – koththantheevu , palavi
108. Mrs.Samama – puttalam Road , Bathuloya
109. Mrs.Nasrin – Thilalyadi, puttalam
110. A.Lamika – Social Activists – Mullaitivu
111. A.Lamsiya – Social Activists – Mullaitivu
112. Jumana – Women Right Activists – Mullaitivu
113. Rasika – Women Right Activists – Mullaitivu
114. A.S.Naseera – Social Activists – Mullaitivu
115. M.Janusa – Women Right Activists – Mullaitivu
116. N.Nuskiya – Social Activists – Mullaitivu
117. S.Zainab – Social Activists – Mullaitivu
118. S.Anjitha – Social Activists – Mullaitivu
119. M.M.Jansila – Human Right Activists – Mullaitivu
120. K. Hafsa – Social Activists – Mullaitivu
121. A. Hasal – Social Activists – Mullaitivu
122. M. M. Noorul Ismiya, Member of Mediation Board and social Activist. Trincomalee
123. M. Fathima Nazreen, Attorney At-Low, Trincomalee
124. Kaila Nona Rasool, Para journalist, Trincomalee
125. M.Mihraj Mubaahshira, Moulaviya(R.H.G.A College), Kinniya – 03
126. A.B.Fathima Maureen, Trained Teacher , Trincomalee
127. Fakeeha Rizamdeen, Primary Teacher, Muthur
128. Sathakku Nasiyathummah, President- Eastern Province United Women’s Organization, Kinniya
129. M.S.Siththy Aarifa, Vice Secretary, Community Centre, Trincomalee
130. A. Sahana Thasneem, Youth peace Advocate, Kinniya 3
131. Shreen Saroor, Human Rights Activist
132 Nadhiha Abbas Lawyer Puttalam
133. S A.Firthous
134. M. L S. Nihara
135. Aneesa Firthous, Human Rights Activist
Civil Society Organizations:
1. Eastern Social Development Foundation
2. Humanity Sri Lanka
3. Muslim Women’s Development Trust – Puttalam
4. Puttalam District Women’s Self-employment and Coexistence Forum
5. Stand Up Movement
6. Human Elevation Organization Ampara
7. Sisterhood Initiative
8. Mannar Women’s Development Federation
9. Suriya Women’s Development Centre
10. Vallamai Movement for Social Change Jaffna
11. Nisha Development Centre Mullitheevu
12. Aalumai Women’s Team Mullitheevu
13. Sangami Women’s Network Batticaloa
14. Affected Women’s Forum Ampara
15. Centre for Human Rights and Development
16. Islamic Women’s Association for Research and Empowerment
17. Rural Development Foundation
18. Women’s Action Network