Photo, TAMILGUARDIAN

“அரசாங்கத்தின் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் இந்த தொல்பொருள் திணைக்களம் இன்று செயற்பட்டு வருகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை மிக மோசமாக இருக்கும்போது தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை வடக்கு கிழக்கில் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் இயல்பாகவே தமிழர்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை தென்னிலங்கை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஊதிப்பெருப்பித்து உண்மையான வரலாறையும் முழு பின்னணியையும் கூறாது தமிழர்கள் பெளத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்கள் என்று இனவாதத்தைப் பரப்புவார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு கலாசார ரீதியிலான வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது என்ற விடயம் தென்னிலங்கையில் பேசப்பட வேண்டும். தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்கு சக்திகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கல்விஅமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்கள் இந்தக் கலாசார வன்முறைக்கு முக்கியத்துவமான இடத்தை வழங்கி அது தொடர்பான விழிப்புணர்வையும் போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கன்.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள், அதன் பின்னணியில் இருக்கும் அரசாங்கத்தின் சிங்கள பௌத்த தேசியவாத நிகழ்ச்சிநிரல், அதற்கு எதிர்வினையாக தமிழ் தரப்பில் இருந்து எழும் தமிழ் தேசியவாதம் மற்றும் இந்துத்வவாதம், அதன் மூலம் ஏற்படப்போகும் அபாயம் குறித்து மாற்றத்துடன் தன்னுடைய கருத்துக்களை மகேந்திரன் திருவரங்கன் பகிர்ந்துகொண்டார்.

முழுமையான வீடியோவை கீழே காணலாம்.