20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால அடிப்படைவாத பாதுகாவலர்களான அநகாரிக தர்மபால, ஏ.ஈ.குணசேகர மற்றும் சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர ஆகிய மூவரும் பழமைவாதத் தலைவர்களால் “செல்வாக்குக்கு உட்பட்டிருந்ததுடன், அவர்களே ஈற்றில் பிரித்தானியர்களிடமிருந்து ‘சுதந்திரத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிங்களவர்களின் இதயம், ஆன்மா மற்றும் உடலாகவிருந்த 13ஆம் நூற்றாண்டின் ரஜரட்ட கலாசாரத்திலிருந்து விலகி அவர்கள் சுதந்திரத்திற்கு பதிலாக பாதுகாப்பு, மேன்நிலைக்கு பதிலாக நடுத்தரநிலை என்பவற்றுக்கு தங்களை சீரமைத்துக் கொண்டனர். காலனித்துவத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வெளிப்பட்ட பின்னர் 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் சிங்களவர்கள் ஒரு சுய தற்காப்புப் பொறிமுறையை உருவாக்கிக் கொண்டனர். நாம் 21ஆம் நூற்றாண்டுக்கு நகரும் பொழுது இந்தப் பொறிமுறை முழுமையான செயற்பாட்டில் இருக்கிறது. இது குறித்து அனைத்து இலங்கையர்களும் சிந்திப்பது மட்டுமன்றி தீவிரமாக மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.
இவ்விதமாக, இந்தக் காலப் பகுதியில் ஆன்மீக அல்லது பொருண்மை ரீதியாக அவர்கள் ஒரு பகுதியளவிலான முன்னேற்றத்தை அடையும் பொழுது அவர்கள் சாதி, மதத்தின் பாதுகாப்பு அல்லது இன அடையாளம் மற்றும் இனவுறவு என்பவற்றுக்கு மீண்டும் பின்செல்வதற்கு முனைந்தனர். மேன்மை மற்றும் சுதந்திரம் நோக்கி மற்றொரு அடி நகர்வது ஒரு தெரிவாக அங்கு அப்பியாசிக்கப்படவில்லை. சுதந்திரம் என்பது ஓர் அடிப்படை, அது பழமைவாத விழுமியமல்ல. இந்தியாவைப் போலன்றி இலங்கையில் சுதந்திரத்திற்கான கருத்தியல் மதம், சமூகம் மற்றும் அரசியல் போன்றவற்றின் வழமையான எல்லைகளுக்குள் மட்டுப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுதந்திரத்திற்கான அடிப்படைப் பாரம்பரியம் இல்லாததன் காரணமாகவே அநகாரிக தர்மபால, ஏ.ஈ.குணசிங்க மற்றும் சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர போன்ற அடிப்படைவாத பாதுகாவலர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பழமைவாத சமூக மதிப்புடைமையால் பின்னுற்ற ஒரு சமுதாயத்தில் அவர்கள் அநேகம் பொருத்தமற்றவர்களே.
1753 இல் துறவற ஒழுங்குமுறை மறுமலர்ச்சியின் வெளிப்படுதல்களில் இதனை நாங்கள் தெளிவாகவே காணமுடியும், அங்கு சியாம் மதபீடத்திற்கான அனுமதி ‘உயர் பிறப்பான’ கொவி சாதியனருக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே, 19ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கப்பாலுமான நடுத்தர வகுப்பின் தோற்றம், நெருக்கமாகப் பின்னப்பட்ட குடும்பம் மற்றும் சாதிய வட்டத்திற்குள் அவர்களது அடையாளம் மற்றும் செல்வத்தை வரையறுத்துக் கொள்வதற்கு முனைந்தது. 19ஆம் நூற்றாண்டின் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரண்டிலுமிருந்தான மத மறுமலர்ச்சியாளர்கள் சாதிப் பிரிவு என தங்களிடையே இருந்த உள்ளகப் புற்றுநோயைக் கவனம் கொள்வதற்கு பெரிதும் தவறினர். உண்மையில், சாதி அடுக்கில் அமைந்த சியாம் மற்றும் அமரபுர மதபீடங்களுக்குச் சொந்தமான முன்னணி பௌத்த பிக்குகள் கொவி மற்றும் மூன்று கீழ் நாட்டு சாதிகளுடனான சமூக ஒன்றிணைதலுக்கான மத்திய வகுப்புப் போட்டிக்குள் இழுத்து வரப்பட்டுள்ளனர், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கெதிராக தங்களது சொந்த மேலாதிக்கத்தை நிரூபிப்பதற்கு புதிய அச்சு ஊடகம் மூலமாகப் போட்டியிடுகின்றன. சிறிய மதபீடமான – 1863 இல் ஸ்தாபிக்கப்பட்ட ராமண்ய மதபீடம் மட்டும் அனைத்து சாதி வேறுபாடுகளையும் பகிரங்கமாகத் தவிர்த்தது.
இவ்வாறாக, ஆன்மீக அல்லது பொருண்மை ரீதியாக ஈட்டிய எந்த முன்னேற்றங்களும் குறுகிய வேறுபாடுகளின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்பட்டன. அதிகாரத்தின் ஒரு நிலையை அடைந்த அந்த ஆட்களை சுதந்திரம் எச்சரித்துவிட்டது என சுதந்திரம் குறித்தான ஓர் அச்சம் அங்கேயிருந்தது. அவர்கள் கண்டுபிடித்த அதிகாரத்தின் மூலங்களுக்கான கதவுகளை அவர்கள் திறந்து விட முடியும். அதனால் அனைத்துச் சமூகங்களும் நன்மையடைவதற்கு முடியும். அல்லது அவர்கள் ஒரு விரும்பிய வகுப்பினருக்கு மட்டுமே அவற்றை மட்டுப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக எங்கள் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாவது தெரிவையே விரும்பினர் – அதன் மூலம் இந்த நாட்டில் வசதிவாய்ப்பு கொண்டவர்கள் மற்றும் வசதி வாய்ப்பற்றவர்களுக்கிடையிலான சமூக இடைவெளியை அவர்கள் பேணினர்.
அதனால், தங்களது மிகவும் பழமைவாத சகோதர சமூகத்தின் வழிமுறைகளிலிருந்து விலகி, தங்களது தர்க்கரீதியான முடிவுகளுக்கமைய தங்களது ஆன்மீக, சமூக மற்றும் பொருளாதார சுதந்திரங்களை மேற்கொள்வதற்கு போதிய தைரியம் கொண்ட அடிப்படை மற்றும் சிறிய அமைப்புகள் (வன்முறைப் பக்கம் சாராதவை) மீது நாங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும். தேசிய அளவில் இலவசக் கல்வியின் தலைவிதி ஓர் உதாரணமாகும். தமிழர் தரப்பில் 1930இல் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தரப்பில் கலாநிதி. யு.ஆ.யு.அசீஸ் அவர்களின் வாழக்கைப் பணி என்பவற்றை உதாரணங்களாக நாங்கள் கொண்டுள்ளோம். சிந்தனை மற்றும் நடவடிக்கைச் சுதந்திரத்தைக் காண்பித்த இரண்டு முன்னணி சிங்கள புலமையாளர்கள் வணக்கத்திற்குரிய பலாங்கொடை ஆனந்த மைத்திரேய மற்றும் கலாநிதி ஈ. டபிள்யு.அதிகாரம் ஆகியோராவர்.
சுதந்திரத்திற்கான அச்சம் அநேகமான சந்தர்ப்பத்தில் “அபேகம” என்ற அடையாளத்தின் கீழ் மறைந்துள்ளதுடன் இந்தப் பாதுகாப்பின்மை குறிப்பாக (ஆனால் முற்றிலுமாகவல்ல) காலனித்துவ காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் குறுகிய மற்றும் விரோத நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. உண்மையில் “அபேகம” என்பது ஒரு செழிப்பான, உள்ளக கலாச்சார விழுமியத்தைக் குறிப்பிடுகிறது, அது வெளிவாரியான ஒரு அடையாளப்படுத்தலினால் மட்டுப்படுத்தப்படவில்லை. அது சிங்கள கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு வெளிப்படுத்தலாகும், ஆனால் எல்லாக் கலாச்சாரத்திலும் உள்ளது போன்று, அது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, துஷ்பிரயோகிக்கப்பட்டு மற்றும் சுரண்டப்பட்டு விட்டது.
சிங்கள பௌத்தர்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நன்மையை கொண்டாடுவதில் அவசரம் காட்டியதுடன் இலக்கின் வெறுமனே ஓர் அரைப்பகுதியின் அடைதல் மீது தங்களை பலப்படுத்தினர். உண்மையில், எந்தவொரு முன்னேற்றத்திற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதத்தை அளிப்பதற்காக இந்த அரைப் பகுதி எல்லா அளவுகளிலும் தூக்கி எறியப்பட்டது. இவ்வாறு, இந்த அரைகுறை நிலை (பகுதியளவிலான அடைதலைப் பொறுத்தளவில்) கொண்டாடப்பட்டு மற்றும் அதீத கற்பனையுள் நிலைநாட்டப்பட்டுள்ளது. மைதானத்தின் அரைவாசிப் பகுதி வரை பந்தை எடுத்துச் சென்றபின், மைதானத்தின் முடிவிலுள்ள உண்மையான இலக்கை நோக்கி பந்தை அடிப்பதற்கு நகராது பந்தை வேறு எவரினதும் எட்டுதலுக்கு அப்பால் இட்டு விட்டு, ஒரு செயற்கையான இலக்கை நாம் கட்டமைத்துக் கொண்டு நிற்கிறோம்.
உண்மையில், உரிய இலக்கை அடைவதற்குப் பதிலான ஒரு மலிவான மாற்றீடே இதுவாகும். ஆனால், சுதந்திரத்தை அல்லது நூற்றாண்டுகளாக எது உண்மையானது என்பதை நாங்கள் அறியவில்லை.
Sinhalese and their fear of freedom என்ற தலைப்பில் கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
பிரதான படம்: REUTERS/Dinuka Liyanawatte, via Channel 4 News. கட்டுரை உள்ளடக்கப் படங்கள்: The Nation, Wikipedia and again Wikipedia