பட மூலம், Article 14

இவை பத்தொன்பதாம் திருத்தத்தின் கடைசி நாட்களாக இருக்கலாம். முழுமையாக இல்லாவிட்டாலும், பத்தொன்பதாம் திருத்தம் பயனுள்ள நிர்வாகத்தைத் தடுக்கிறது. எனவே, அதன் ஒரு பகுதியாவது, அல்லது அதன் கணிசமான பகுதியாவது நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி, குறிப்பாக கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வலுவாக எதிரொலித்தது. இதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஆதரவானவராக இருக்கிறார். எனவே, இது இல்லாது போகலாம்.

பத்தொன்பதாம் திருத்தம் பல காரணங்களால் சாத்தியமானதாக அமைந்தது. வாக்களிக்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அந்த நேரத்தில் நிலவிய அரசியலமைப்பு நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்களைக் கோரினர். நிறைவேற்று ஜனாதிபதி மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்படுவதால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். மேலும், சுயாதீனமான நிறுவனங்களை நிறுவும் ஒரு கட்டமைப்பின் தேவை இருந்தது. குடிமக்களின் உரிமைகளில் சில மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்டன. இத்தகைய கோரிக்கைகள் படிப்படியாக ஒரு பெரிய அரசியல் வாக்குறுதியாக மாற்றப்பட்டன. அதற்கான நேரம் அமைந்து, ​​தேர்தல் நெருங்கி வந்தபோது, ​​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை எதிர்த்த இயக்கங்களால் அவ்வாக்குறுதிகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. அவரை எதிர்த்த இயக்கங்கள் பல உண்டு. அவர்களின் லட்சியங்கள் மாறுபட்டவையாகவும் முரண்பட்டவையாகவும் இருந்தன. ஆனால், பத்தொன்பதாம் திருத்தச் சட்டம் 2015இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மையினரின் சில அடிப்படை நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஓர் வெளிப்பாட்டைக் கொடுத்தது. இம்மக்களின் ஆதரவு இல்லாமல், பத்தொன்பதாம் திருத்தச் சட்டம் அல்லது அது போன்ற எதுவும் சாத்தியமில்லை.

ராஜபக்‌ஷ ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற பெரும்பான்மையினரின் ஆதரவின் காரணமாகவே பத்தொன்பதாம் திருத்தம் சாத்தியமானது. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இழப்பு 2015 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான இடைக்காலத்தில் (பொதுத் தேர்தல் நடைபெற்றபோது) நாடாளுமன்றத்தின் அமைப்பை பாதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ராஜபக்‌ஷவை ஆதரித்ததனால், ராஜபக்‌ஷ ஆட்சியின் ஆதரவு இல்லாமல் பத்தொன்பதாம் திருத்தம் சாத்தியமற்றது என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அதன் ஆதரவு அவசியம் என்பதனால் குறித்த ஆதரவு வழங்கப்பட்டது. இறுதியில், ஒரு நீண்ட விவாதம் இடம்பெற்று வாக்களிப்பு இரவில் நடைபெற்றது. இறுதியாக, நாடாளுமன்றத்தில் 225இல் 212 உறுப்பினர்கள் பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை ஆதரித்தனர். பல பார்வையாளர்களை வியப்பூட்டும் வகையில், பத்தொன்பதாம் திருத்தம் முன்னோடியில்லாத மற்றும் அதிர்ச்சியூட்டும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ராஜபக்‌ஷ ஆட்சி ஏன் அதை ஆதரித்தது? அடிப்படையில், இது மஹிந்த ராஜபக்‌ஷவின் தோல்வியுடன் நிகழ்ந்த தலைமை மாற்றத்தின் விளைவாகும். தோல்வி புறக்கணிக்க முடியாத அளவுக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ராஜபக்‌ஷ ஆட்சி இதை ஒரு சீர்திருத்தவாத நடவடிக்கையைத் தடுக்கும் ஒரே காரணியாக பார்க்க விரும்பவில்லை. எனவே, இது பரவலாக, பெரும்பான்மையான மக்களால் ஆதரிக்கப்பட்டது. ஏப்ரல் 2015 இன் ஹன்சார்ட்டின் ஒரு ஆய்வில், பத்தொன்பதாம் திருத்த ஆட்சியின் ஆதரவை ஈர்க்க முடிந்ததன் காரணம் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆதரவுடன் இருந்ததுடன் மதுலுவ சோபித தேரர் போன்ற ஒரு நபரால் வலுவாக ஊக்குவிக்கப்பட்டதும் ஆகும். சிறிசேனா, எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுடைய ஆட்களில் ஒருவராக இருந்தார். இவற்றிற்கு மேலாக, சோபித தேரர் ஒரு அரசியல் உணர்வுள்ள துறவி (அவர் தேசியவாத அரசியல் கிளர்ச்சியின் சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டவர்) என்பதிற்காகவும் மிகவும் மதிக்கப்பட்டார்.

இம்மாற்றத்தின் அடிப்படையில் 2010இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதினெட்டாம் திருத்தத்திற்கு ராஜபக்‌ஷ ஆட்சியின் சில உறுப்பினர்கள் மௌனமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் தலைவர் அதிகாரத்திற்கு அப்பால் இருந்ததால், பதினெட்டாம் திருத்தத்தின் தவறுகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இது என்று SLFP க்குள் பலர் உணர்ந்தனர். சுவாரஸ்யமாக, பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தைப் பற்றி ராஜபக்‌ஷ ஆட்சியின் முக்கியஸ்தர்கள் கொண்டிருந்த மிக முக்கியமான சந்தேகம், இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரங்களை அதிகரிக்கப் பயன்படுத்தும் உத்தியாகும் என்பதாகும், உண்மையில், இது அப்போதைய பத்தொன்பதாம் திருத்தம் பற்றிய விவாதம். பத்தொன்பதாம் திருத்தத்தைச் சுற்றியுள்ள கருத்து இன்று மிகவும் மாறிவிட்டது, ஆட்சியின் குரல் கொடுக்கும் சிறந்த ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகள் பல அரசியல் பார்வையாளர்களை வியப்படையச்செய்கிறது.

அவ்வாறெனில், பத்தொன்பதாம் திருத்தம் எதேர்ச்சையானதல்ல. அது மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஆட்சியின் பங்களிப்பு மட்டுமன்றி தொடர்ச்சியான பங்குதாரர்களால் எடுக்கப்பட்ட ஒரு நனவான முயற்சி மற்றும் முடிவின் விளைவாகும். இலங்கை மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதை ஆதரித்தனர். மிக முக்கியமாக, ராஜபக்‌ஷ ஆட்சி அதை ஆதரித்தது. ஏனெனில், இது எதை ஆதரிக்கிறது என்பதை அறிந்த ஒரு ஆட்சி.

பத்தொன்பதாம் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து ஏதேனும் பயனடைந்ததா? இது பல முக்கியமான விடயங்களைச் செய்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சர்வவல்லமையுள்ள ஒரு காலத்தில், பத்தொன்பதாம் திருத்தம் வந்து ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு அமைப்பை நிறுவினர். பொது நிறுவனங்களை நிறுவுவதற்கும், உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு ஏறக்குறைய தடையற்ற அதிகாரங்கள் இருந்த நேரத்தில், பத்தொன்பதாம் திருத்தம் ஒரு அரசியலமைப்பு கவுன்சிலுடன் திரும்பியது. மேலும் பொது நலனுக்கு சிறப்பாக சேவை செய்யும் அதிக சுயாதீன நிறுவனங்களையும் பணியாளர்களையும் நிறுவுவதற்கான வாய்ப்பை உறுதியளித்தது. பத்தொன்பதாம் திருத்தம் தகவல்கள் பெற்றுக்கொள்ளும் விலைமதிப்பற்ற உரிமையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்தியது. இது ஜனாதிபதியின் எதிர்ப்பு சக்தியையும் மட்டுப்படுத்தியது. 2018இல் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி சிறிசேனவின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதன் முழு தாக்கமும் இறுதியில் உணரப்பட்டது. பத்தொன்பதாம் திருத்தம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியது.

இருப்பினும், பத்தொன்பதாம் திருத்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; உதாரணமாக, பத்தொன்பதாம் திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழிக்கவில்லை. ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பதை இது தடுக்காது. பத்தொன்பதாம் திருத்தம் இதுபோன்ற அருமையான செயல்களைச் செய்ததாகக் குறிப்பிடுவதில், பத்தொன்பதாம் திருத்தத்தின் ஆதரவாளர்கள் நல்லதை விட அதிக தீங்கு செய்திருக்கலாம். ஏன்? ஏனென்றால், ஜனாதிபதியின் அந்த சில அடிப்படை அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதைக் காண்பிப்பதில், அவை பத்தொன்பதாம் திருத்தத்தை ஒரு அபத்தமாகக் காட்டின, இதன் மூலம் பத்தொன்பதாம் திருத்தத்திற்கு, குறிப்பாக சிங்கள பெரும்பான்மைக்குள் (அறியாமல்) அதிக எதிர்ப்பை உருவாக்க உதவியது. மேலும், பத்தொன்பதாம் திருத்தத்தின் ஒரு முக்கியமான பகுதியின் நோக்கமானது – அதிகாரங்களை ஜனாதிபதியிடமிருந்து பிரதமர்/ அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு மாற்றுவதே. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டில், முந்தையதைப் பின்பற்றி, பத்தொன்பதாம் திருத்தத்தின் இந்தப் பகுதி பயனற்றதாக இருக்கும். நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட தனிப்பட்ட ஆணையாளர்கள் சுதந்திரக் கொள்கையை ஊக்குவிக்கும் வழிகளில் செயல்படாத இடத்தில், பத்தொன்பதாம் திருத்தம் அதிக பயன் பெறாது.

பத்தொன்பதாம் திருத்தம் 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது நமது அரசியலமைப்பு ஆளுகைக்கு ஒரு முக்கியமான மற்றும் அவசியமான திருத்தமாக இருந்தது. அரசியலமைப்பு ஆட்சியின் சில அடிப்படைகளைப் பற்றி மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் எவ்வாறு சிந்தித்தார்கள் என்பதை இது மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அது ஒரு அரசியலமைப்பில் பொருத்தமற்றது, இது அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஒரு வித்தியாசமான வழியை ஊக்குவிப்பதாக இருந்தது, மேலும் அது அரசாங்கத்தை ஆளுவதற்கு வேறு வழிக்கு செல்ல விரும்பும் ஒரு சமூகத்தில் தொடர்ந்து ஆபத்தான முறையில் காணப்படுகிறது. அந்த வழி சாதாரண வழி என்பதை மிக விரைவில் நாம் காணலாம்.

பத்தொன்பதாம் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு ஒரு புதிய அரசியல் தலைவர் இருக்கிறார். மிக விரைவில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ ஒரு புதிய மற்றும் பிரபலமான அரசாங்கத்தை அமைப்பார். தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளராக இருந்துபோது அவர் மேற்கொண்ட பயணத்தில், அவரது நம்பகமானவர்களில் ஒருவர், ஜனாதிபதி ராஜபக்‌ஷவுடன் கருத்தியல் ரீதியாக மிக நெருக்கமானவர்,  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. இவர்  2015 இல், பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார். பத்தொன்பதாம் திருத்தச்சட்டத்திற்கு கை, கால்கள் இருந்திருந்தால், அது ஏற்கனவே வெளியேற தயாராக வாசலில் நின்று கொண்டே இருக்கும். அற்புதமான அரசியல் முரண்பாடுகள் உள்ள நாட்டில், மஹிந்த ராஜபக்‌ஷ மட்டுமே இந்நிலையிலிருந்து அதனை காப்பாற்ற முடியும் என்பதைக் காணலாம்.

கலன சேனாரத்ன

The Last Days of the Nineteenth Amendment? என்ற தலைப்பில் கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.