பட மூலம், IBTimes

இறுதியாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பில் சந்தேகம் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனான எந்தக்  கூட்டரசாங்கத்தின் கருத்தியல்வாதம் நாட்டின் அரசியல் விதியினை தீர்மானிக்கப் போகின்றது என்பது மாத்திரமே ஒரே ஒரு சந்தேகமாகும். ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகாரத்துவ ஆட்சி வடிவமொன்றை கொண்டு செல்வதோடு, கூட்டரசாங்கத்தில் இருக்கின்ற ஏனையோர் வழமையான சார்புவாத தேர்தல் அரசியல் என்பதனையே விரும்புகின்றனர். தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்ற பாரம்பரிய அரசியல் மீதான அதிருப்தி நிலையானது அதிகாரத்துவ வடிவ ஆட்சியொன்றினை ஏற்படுத்தியுள்ளது. இவ் கட்டுரையானது, அதிகாரத்துவம் சார்ந்த எந்த ஆட்சி வடிவமும் இலங்கையின் காயப்பட்ட ஜனநாயத்திற்கான ஒரு அறிவார்த்தமான மாற்றீடு அல்ல என்பது தொடர்பில் விவாதிக்கின்றது.

னநாயக ஆட்சியுடனான சமூகத்தின் அதிருப்தி நிலை 

கடந்த பல வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிப்பிராய ஆய்வுகளானவை நாட்டினது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களின் அதிருப்தியானது அதிகரித்து செல்வதை வெளிப்படுத்தி வருகின்றன.

உதாரணமாக, 2012ஆம் ஆண்டு சமூக விஞ்ஞானிகள் சங்கம் மேற்கொண்ட ‘தென்னாசிய அரசுகளின் ஜனநாயகம்’ தொடர்பான அபிப்பிராய ஆய்வில் நாட்டில் 24.4% மான சிங்களவர்கள் வலிமையான ஒரு தலைவரை  விரும்புகின்றனர் எனவும், 91.1% மான சிங்களவர்கள் “சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலொன்றின் மூலம் தலைவரொருவர் தெரிவு செய்யப்படல் வேண்டும்” எனவும் குறிப்பிட்டனர். கடந்த இரு வருட காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மிகவும் குழப்பகரமான அரசாங்க பின்னணியில்; வலிமையான ஒரு தலைவர் என்பதன் மீதான மக்களின் விருப்பானது தீவிரமடைந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் அபிப்பிராய ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டர், 2018ஆம் ஆண்டு நடாத்திய, 70 வருட சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையினது பெறுமதிகள் மற்றும் மனப்பான்மைகள் தொடர்பான ஆய்வு முடிவுகளில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 52.1% மானவர்கள் வலிமையான ஒரு தலைவரின் ஆட்சியினை விரும்புவதாகவும், 52.7% மானவர்கள் ‘துறைசார் வல்லுனரின் ஆட்சியினை’ விரும்புவதாகவும், 80.9% மானவர்கள் “தேர்தலொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவரின் ஆட்சியினை” விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். அதாவது, பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அதேசமயம் வலிமையான மற்றும் துறைசார் வல்லுனரான தலைவர் ஒருவரின் ஆட்சியை விரும்புவதை ஆய்வு முடிவுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.

இது சிங்கப்பூர் மாதிரியான ஜனநாயகமாக அமைவதுடன் வலிமையான மற்றும் துறைசார் வல்லுனரான தலைவர் மீதான விருப்பமும் நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கை வீழ்ச்சியும் நேர்மாறாக இடைதொடர்புறுகின்றது. சோஷல் இன்டிகேட்டர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான அபிப்பிராய ஆய்வு முடிவுகளின்படி, சிங்கள சமூகத்தில் நாடாளுமன்றம் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான நம்பிக்கையின் அளவானது, 2011-2018 காலப்பகுதியில் சீராக குறைவடைந்து வந்துள்ளதுடன், இராணுவம் மீதான நம்பிக்கை தொடர்ந்து உயர்வாகவும் மற்றும் நிலையானதாகவும் இருந்து வருகின்றது.

இராணுவம், பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான சிங்கள மக்களின் நம்பிக்கை

தற்போதைய அதிகாரத்துவவாதத்தை நோக்கிய ஆதரவின் அரசியல் இலாபம்

இவ் அதிகாரத்துவ வடிவ ஜனநாயகத்திற்கான தற்போதைய தூண்டற் காரணிக்கு அதற்கேயுரிய அரசியல் இலாபம் உண்டு. புதிய உயர்குடி குழுமத்தைச் சேர்ந்த குழுவிலுள்ளவர்கள் அவ்வாறான அரசாங்க வடிவத்தினூடாக நன்மை பெறுகின்றனர். மறுபுறத்தில், புதிதாக உருவாகி வரும் இராணுவ வகுப்பினர் மூன்று தசாப்த யுத்தத்தின் விளைவாக குறிப்பிடத்தக்களவு செல்வம் மற்றும் அந்தஸ்தினை அனுபவித்து வருகின்றனர். மறுபுறத்தில், நவ தாராண்மைவாத சேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமானது கடந்த முப்பது வருடமாக புதிய வகுப்பொன்றினை உருவாக்கியுள்ளது. அவ் வகுப்பானது வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், மேலாண்மையாளர்கள் போன்ற தொழில் வல்லுனர்களையும் மற்றும் அதிகார வர்க்கத்தினரையும் உள்ளடக்கியது. நாட்டில் செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைக் கொண்டு இவர்களும் ஒரு வகுப்பாக உருவாகியுள்ளனர். சுவாரஸ்சியமான விடயம் என்னவெனில், இவ் இரு குழுக்களும் ஒத்த இயல்புடைய சமூக மற்றும் கலாசார பின்புலங்களிலிருந்து வந்தவர்கள். அதாவது, பிரதானமாக சிங்கள-பௌத்த சமூகத்தைச் சேர்ந்த மற்றும் கொழும்பிற்கு வெளி பிரதேசத்தினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்புதிய வகுப்பினரில் பெரும்பான்மையானவர்கள் சிங்கள-பௌத்த இனத்துவ தேசியவாத அனுதாபம் கொண்டவர்களாவதுடன், நவ தாராண்மைவாத பெறுமானங்களை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

பிரதானமாக, 2010ஆம் ஆண்டு தொடங்கி இவ் புதிய உயர்குடியினர் தாம் அடைந்த புதிய செல்வம் மற்றும் அந்தஸ்து போன்றவற்றோடு மட்டும் திருப்தியடையாததுடன், வெளிப்படையாகவே அரசியல் அதிகாரத்தில் விருப்பம் கொண்டவரகளாக இருக்கின்றனர். வம்சாவளி மற்றும் அரசியல் ஆதரவு அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பாராம்பரிய அரசியல்வாதிகளை போல் இராணுவ உயர்குடி மற்றும் தொழில் வல்லுனர்கள் ஆகிய இரு வகுப்பினரும் அவர்களுக்கான சொந்த வாக்காளர்களைக் கொண்டவர்கள் அல்ல. இவ்வாறான பின்புலத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷவினது அதிகாரத்துவ வடிவ ஜனநாயக கருத்து இவ் புதிய உயர்குடிகளுக்கு மிகப் பொருத்தமான ஒன்றாக பொருந்தியுள்ளது. ஏனெனில், அவர்களுக்கு போட்டிமிக்க நாடாளுமன்ற அரசியலை அடைவதற்கு ஒப்பீட்டளவில் இது இலகுவாக அமைகின்றது என்பதினாலாகும். இதனாலேயே பெரும்பான்மையான தொழில் வல்லுனர்கள், இராணுவம் மற்றும் அதிகாரவர்க்கத்தினர் அதிகாரத்துவ வடிவ ஜனநாயகமாக எமது சமூகத்தை நிலைமாற்றுவதற்கு ஜனாதிபதியுடன் அணி வகுத்து நிற்கின்றனர்.

அதிகாரத்துவ னநாயகத்திற்கான பிளவுபட்ட நிலைமைகள்

ஜனாதிபதி, அவரது அரசியல் சகபாடிகள் போலன்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பிருந்தே அவர் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க வடிவம் தொடர்பில் மிகவும் வெளிப்படை தன்மை கொண்டவராகவே செயற்பட்டார். உண்மையில், இவ் நிபந்தனைகளின் பெயரிலேயே அவரது தேர்தல் தளமானது ஒழுங்கமைக்கப்பட்டதுடன் வளைந்து கொடுக்கத் தேவையற்ற அல்லது அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நியமங்களையும் விதிகளையும் கைவிடுவதற்கு தயங்காத ‘வலிமையான தலைவர்’ என்ற தேவைப்பாட்டினை முன்னிறுத்தியே செயற்பட்டார்.

இந்த நிறைவேற்று ஜனாதிபதி பாரம்பரிய அரசியல் கட்சி ஒழுங்கமைப்புகளுக்கு வெளியிலான ஒரு வகையில் அதிகாரத்திற்கு வந்ததுடன், உண்மையில் இலங்கைக்கு அதிகாரத்துவ வடிவ ஆட்சியொன்று தேவையென்ற நம்பிக்கையுடையவராகவும், மக்களின் ஆட்சிமுறை தொடர்பான எதிர்பார்ப்புக்களை சிறந்த முறையில் பூர்த்தி செய்கின்றவராகவும் இருக்கின்றார். அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வழங்குதல் தொடர்பில் இராணுவம் மற்றும் தொழில்சார் வல்லுனர்கள் சிறந்த திறன்களைக் கொண்டுள்ளனர் என்ற அவரின் நம்பிக்கையானது அவருக்கு முன்னர் வெளிப்படையில் ஜனநாயக அரசாங்கங்கள் என்று கூறிக்கொண்ட அரசாங்கங்களின் மோசமான பதிவுகளால் நிரூபணமாக்கப்பட்டது. மேலும், கடந்த காலத்தை போலன்றி, இன்றைய சுதந்திர உலகில் அதிகளவான நாடுகளின் தலைவர்கள் வலதுசார் கருத்தியல்வாதங்கள் மீது ஆர்வமுடையவர்களாக இருப்பதினால், இலகுவான அதிகாரத்துவவாதத்தை நோக்கிய தள்ளுகை தொடர்பில் சர்வதேச சமூகத்திடமிருந்து பெரியளவில் விமர்சனம் எதுவும் வரப்போவதில்லை. தற்போதைய கொவிட்-19 தொற்றுகை ஆட்சிலுள்ள அரசாங்கத்திற்கு அதிகாரத்துவ வடிவ அரசாங்கத்தினை கொண்டு செல்வதனை இலகுவாக்கியுள்ளது. ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து இதனை எதிர்க்காதுவிடின், ஜனநாயக அரசாங்க பண்பியல்புகள் மேலும் அழிவடைவதை நாம் எதிர்கொள்ள நேரிடும். 70 ஆண்டு கால ஜனநாயக ஆட்சி தொடர்பிலான விரக்தி என்பது நியாயமானது, எனினும் அது அதிகாரத்துவ வடிவ ஆட்சியை சகித்துக்கொள்வதற்கான நியாயமாகாது.

அதிகாரத்துவவாதம் தொடர்பான கட்டுக் கதைகள்

ஜனநாயகம் தொடர்பில் அநேகமான கட்டுக்கதைகள் புனையப்பட்டுள்ளது போலவே, அதிகாரத்துவவாதத்தை பிரச்சாரம் செய்யவும் நியாயப்படுத்தவும் அநேகமான கட்டுக் கதைகள் உள்ளன. தேசியவாதத்தினைப் போன்று அதிகாரத்துவவாதமும் அச்சத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்கிறது. அதிகாரத்துவ ஆட்சி பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது என்பதாக மக்களை நம்பச் செய்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளின் ஜனநாயக அரசாங்கம் மீதான வசைப்பாடல் ஆரம்பமானதுடன், உறுதியான இராணுவ ஆட்சிக்கான ஆதரவும் ஆரம்பமானது. உண்மையில், நிகழ்கால உலக அரசியலில், அதிகாரத்துவ அரசுகளுக்கும் தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான திறன் இல்லை என்பதற்கு போதுமானளவு ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜனநாயகங்கள் உள்ளக சவால்களைப் போலவே வெளிப்புற சவால்களையும் சிறந்த முறையில் வெற்றி கொண்டதற்கான அநேகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போலன்றி, இன்று வெளிப்புற சவால்களை விடவும் தமது சொந்த சமூக சவால்களுக்கே உலக அரசுகளில் பெரும்பான்மையானவை முகம் கொடுக்கின்றன. ஆட்சி செயன்முறையில் குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு பாகுபாடு காட்டல் அல்லது விலக்குதல் என்பது எப்பொழுதும் அரசுகளை பலவீமாக்குவதுடன், உள்ளக கிளர்ச்சியினை உண்டு பண்ணும். அரசியல் அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் மாத்திரம் குவிக்கப்படுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் போன்றவை தடைபடுதல் மற்றும் பிரஜைகளுக்கு பொறுப்புகூறாத வல்லுனர் குழுவினால் ஆட்சி நடாத்தப்படல் போன்றவை நிச்சயமாக பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதுடன் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையையும் உருவாக்கும். ஆகவே, ஆட்சி வடிவமைப்பில் விவாதிக்கக்கூடிய வகையில் அதிகாரத்துவ வடிவ ஆட்சி ஜனநாயக ஆட்சியினை விடவும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த வாய்புள்ள ஒன்றாக காணப்படுகின்றது.

சீனாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சிங்கப்பூரின் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி போன்றன அதிகாரத்துவ வடிவ ஆட்சிக்கு பிரபல்யமான சார்புநிலையை வழங்கக்கூடிய விடயங்களாகும். 1980களில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் பொது மக்கள் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் சிங்கபூர் ஆகும் கனவை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்ததுடன், ஆட்சியை அதிகாரத்துவ வடிவ ஆட்சியாக மாற்றியமைத்தார். இன்று தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்துவ இலட்சியத்தினை நியாயப்படுத்துவதற்கு அதே மந்திரத்தை ஓதுவதை நாம் கேட்கின்றோம். அபிவிருத்தித் திட்டங்களை இலகுவாகவும், ஒழுங்கானதாகவும் செயற்படுத்துவதற்கு அதிகாரத்துவ ஆட்சி சில சந்தர்ப்பங்களில் உதவும் என்பது உண்மையாகும். அவ்வாறான ஆட்சியில் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் போறவற்றிற்கு பெரும்பான்மை விருப்பு அல்லது பல குழுக்களின் ஆலோசனை என்பது தேவையற்ற ஒன்றாகும். எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் பாரிய ஊழல் மற்றும் தகுதியடிப்படை இன்றி தாம் தீர்மானிப்பவருக்கு சலுகைக்கே வழங்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும். தாராண்மைவாத ஜனநாயகத்தில் குறைந்தபட்சம் ஊடகம் மற்றும் ஏனைய ஆர்வக் குழுக்கள் ஆட்சியாளர்களின் ஊழலை வெளிப்படுத்துவதுடன், தவறான செயல்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் செய்யவும் முடியும். அதிகாரத்துவவாதத்தின் கீழ் பாரியளவான ஊழல் மூலம் சிறிய குழுக்கள் நன்மையடைவதுடன் முறையற்ற அரசாங்கத்திற்கு எதிராக சமாதான வழிமுறைகளை கையாளவும் முடியாது போகும். ஆக, அதிகாரத்துவ ஆட்சி அபிவிருத்தியினை உறுதிப்படுத்தும் என்பது நிச்சயமற்றதாகும்.

சிவில் விவகாரங்களை கவனிப்பதற்கு இராணுவ உத்தியோகஸ்தர்களை நியமிப்பதினால் ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுங்கு முறையினை பேணலாம் என்று கூறப்படுகின்ற மற்றுமொரு கட்டுக் கதையாகும். அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவில் அதிகமான இராணுவ உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்கள் நடைமுறைப்படுத்த முயலும் ஒழுக்கம், ஒழுங்கு மற்றும் நல்லொழுக்கம் என்பன ஆழமான விமர்சன பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஒரு எடுத்துக்காட்டாக ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச் சடங்கை எடுத்துக் கொண்டால், இது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு சீர்தன்மை, ஒழுக்கம் மற்றும் ஒழுங்கு என்பதாக அடையாளப்படுத்தப்படும் விடயத்திற்கு மாறாக இருக்கும் விதிவிலக்குகளில் தெளிவாக வெளியில் தெரியும் ஒன்று.

இலங்கையின் ஜனநாயக பின்னடைவுகளுக்கு பரிகாரமாக அதிகாரத்துவ வடிவ ஆட்சியை விரும்புவதானது சமூக பகுத்தறிவு தொடர்பான முதிர்ச்சியின்மை மற்றும் புராதன பழங்குடியினராகும் நாட்டம் மட்டுமே ஆகும். ஜனநாயகம் என்பது பரிபூரணமானது அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். உண்மையில், ஜனநாயகம் நாட்டினை யுத்தங்களுக்கு இட்டுச் சென்றது, வினைத்திறனற்ற மற்றும் ஊழல் மிகுந்த தலைவர்களை உருவாக்குகின்றது, மற்றும் கோமாளிகள் ஆட்சி செய்ய வழிவகுத்தது. எனினும், ஆளப்படுபவர்கள் ஆட்சியாளர்களை அமைதியான முறையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு இயலுமான ஒரே முறைமை ஜனநாயகமே ஆகும். ஆகவே, காயப்பட்ட நாட்டின் ஜனநாயகத்திற்கான பரிகாரம் அதனை அதிகாரத்துவ வடிவ ஆட்சியாக மாற்றுவது அல்ல, மாறாக பிரஜை மற்றும் அரசுக்கு இடையிலான ஒப்பந்தத்தினை மீள்சமரசம் செய்து, பிரஜைகளின் தீவிர பங்குபற்றலை ஊக்குவிப்பதே ஆகும்.

கலாநிதி பிரதீப் பீரீஸ், சகீனா மொயீனுதீன் மற்றும் மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி