படம் | DushiYanthini, Passionparade

 

இன்று இவளும்…

பாசத்தினால் கையேந்திய

போட்டோக்கள்

பயங்கரவாதத்தைப்

புதுப்பிக்குமென்று

பயப்படும் பிராந்துகள் அவர்கள்.

 

இனியும்

புதுவிதைகள்

முளைக்கவோ வளரவோ

விடாதபடிக்கு நச்சு நீர் தூவி

தாம் தெளித்ததை

தண்மழையென கணக்கும்

சொல்லும் கிராதகர்கள்.

 

அரசியல் பிழைக்கும்

கண்களுக்கு பத்தினியும்

பரத்தையும் ஒன்றேதான்.

 

காப்பனற்று தப்பமுடியா

வேடர்களிடம்

அகப்பட்டுக்கொண்டது

பெருவெளிப்பறவைகளின் விதி.

 

கற்றுத்தந்த

பாடங்களின் வரிசையில்

காத்திருக்கிறாள் விபூசிகாவும் இனி.

 

கனவுகளின் தீட்சண்யத்தில்

களங்கப்படாதிருக்கட்டும்

பிரசாந்திகளாய் அவள் பருவம்!!!

 

ஹேமா