கலைஞர்கள் மீதான தாக்குதல், ஊடக அடக்கு முறை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும் ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின.
அநுராதபுரம் எப்பாவல பகுதியில் வீதி நாடக எதிர்ப்புப் போராட்டத்தின் போது அரச குண்டர்களினால் சிரேஷ்ட பாடகர் ஜயதிலக பண்டார மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல், ‘ஹிரு’ ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் திசர சமந்த மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவருடைய கமராவுக்கு சேதத்தை ஏற்படுத்தியமை, ‘ராவய’ பத்திரிகை ஆசிரியர் சிஜடி பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை போன்ற அரச அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்றுக் கொண்டிருக்க அரச ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தாங்கள் எதற்காக இங்கு கூட்டிவரப்பட்டிருக்கிறோம் என்பதையே அறியாமல் தடுமாறியமையை காணக்கூடியதாக இருந்தது. “எங்களை வரச்சொன்னார்கள், அதனால் வந்தோம்” என ஒருவர் எம்மிடம் கூறினார்.
ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
அரச ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம்
ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் முழுமையான படங்கள்