இலங்கையில் சமூக ஊடகப் பயன்பாட்டின் பின்னணியில் உள்ள மிக முக்கியமானதொரு பேராபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், மூத்த ஆய்வாளரும் துறைசார் நிபுணருமான கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவவால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் பெண்களின் சுயவிவரங்களை உருவாக்குதல், அவற்றை மிகவும் ஒருங்கிணைந்த முறையில் கையாளுதல் மற்றும் அதன் மூலம் பாரியளவில் நிதி ஈட்டும் இருண்ட வலைப்பின்னல் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் துல்லியமாக ஆராயும் இந்த ஆய்வு அறிக்கை, இலங்கையில் முதன்முறையாக வெளிவரும் ஒரு முன்னோடி முயற்சியாகும். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான பெண் அடையாளங்களைக் கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் உணர்வுகளோடு விளையாடி, இறுதியாக அவர்களைப் பல்வேறு சூதாட்டத் தளங்கள், கிரிப்டோ முதலீடுகள் மற்றும் முதியோருக்கான தனிப்பட்ட அரட்டைப் பக்கங்களை நோக்கித் திசைதிருப்பும் சர்வதேச அளவிலான ஏமாற்று வேலைகளையும், இதற்குப் பின்னணியில் இருக்கும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பையும் இந்த ஆய்வு மிக ஆழமாகப் பகுப்பாய்வு செய்திருக்கிறது.

இந்த ஆய்வு அறிக்கையின் நிறைவேற்று சுருக்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டிருக்கிறது. முழு அறிக்கை – AI profiles of women on Facebook: Identity deception, sexualised engagement, and platform accountability

இந்த அறிக்கை இலங்கையில் முதன்முறையாக வெளிவரும் ஒரு முன்னோடி முயற்சியாகும். பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட பெண்களின் சுயவிவரங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, ஒருங்கிணைக்கப்படுகின்றன, மற்றும் பணமாக்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு முறையான விளக்கத்தை இது வழங்குகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 கணக்குகளின் பின்னணியில் இருக்கும் பெண்களில் ஒருவர்கூட உண்மையானவர்கள் இல்லை. ஆனால், அவற்றின் பின்னால் இயங்கும் அமைப்பானது இலங்கையில் மிக உத்தேசமாகவும், துரிதமாகவும், பரந்த அளவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு, ஜோடிக்கப்பட்ட (fabricated intimacy) நெருக்கமான உரையாடல்கலான 1,706 பதிவுகள் மற்றும் 890,632 engagements ஊடாகக் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. மேலும், தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகப் பயனர்களை பேஸ்புக் தளத்திற்கு வெளியேயுள்ள சூதாட்டம், adult-chat, adult dating, கிரிப்டோ (crypto) மற்றும் பிற சந்தேகத்திற்குரிய நிதி சார்ந்த தளங்களை நோக்கித் திசைதிருப்பி விடுகின்றது.

இந்த ஒருங்கிணைப்பு என்பது ஏதோவொரு ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்டது அல்ல, மாறாக துல்லியமாக அளவிடக்கூடியதாகும். ஏனெனில், இந்த கணக்குகளில் ஐந்து கணக்குகள் ஒரே ஒரு நபரால்/அமைப்பினால் (ஒரே கையால்) எழுதப்பட்டது போல் செயல்பட்டுள்ளன. இவை 10 நாட்கள் பதிவிடும் காலப்பகுதிக்குள் (posting windows), மிகக் குறைந்த நிமிட இடைவெளிகளில் (median gaps) ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குச் சில நிமிடங்களிலேயே பதிவுகளைப் பகிர்ந்துள்ளன. இதன் விளைவாக 113 ஒரே மாதிரியான தலைப்புகளும் (identical captions), 676 போலிப் பதிவுகளும் (near-duplicate pairs) கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றின் Engagement ஆனது ஒரு மைய அச்சு (hub-and-spoke) வடிவில் இயங்குகிறது. இதில் மூன்று பேஜ்கள் (pages) மொத்த கவன ஈர்ப்பில் பாதிக்கும் மேற்பட்டவற்றைத் தன்பால் ஈர்க்கின்றன; அதேவேளை, ஏனைய கணக்குகள் தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியக்கூடிய இருப்புப் பொருட்களாக (disposable inventory) வைக்கப்பட்டுள்ளன.

இதற்காகப் பயன்படுத்தப்படும் தூண்டில், சிங்கள மொழியிலான ‘மனவேதனை/ஏமாற்றம்’ (heartbreak) ஆகும். தனிமையில் இருக்கும், கணவனை இழந்த, விவாகரத்து பெற்ற அல்லது நிதி ரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தனிப்பட்ட தொடர்புகளைத் தேடும் பெண்களைப் போல இந்த போலி நபர் கணக்குகள் தங்களைக் காட்டிக்கொள்கின்றன. அதேநேரத்தில், இவற்றில் பயன்படுத்தப்படும் படங்கள், பேஸ்புக் தளத்தின் உள்ளடக்கக் கட்டுப்பாட்டு விதிகளை (moderation) மீறாத வகையில், தந்திரமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பாலியல் கவர்ச்சிப் பாணியை (மிகைப்படுத்தப்பட்ட மார்பளவு, போலியான வியர்வை, திட்டமிட்டு வெளிக்காட்டப்படும் அக்குள்கள்) இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

பணப் பரிமாற்றத்திற்கான வழிகள் (money trail), சுயவிவரக் குறிப்புகள் (profile bios), shortlinks மற்றும் முதல் பின்னூட்டங்களிலேயே (first comments) வெளிப்படையாக மறைந்து கிடக்கின்றன. இப்பகுதிகளில் பதிவை எடிட் செய்யாமலேயே அதன் இலக்குகளை (destinations) இயக்குபவர்களால் மாற்றியமைக்க முடியும் என்பதோடு, பெருமளவிலான கணக்காய்வுகள் (bulk auditing) இப்பகுதிகளை அரிதாகவே சென்றடைகின்றன. இவ்வாறு கண்டறியப்பட்ட வழிகள் இறுதியாக adult-chat surfaces, சூதாட்டப் பதிவுகள், கிரிப்டோ பதிவிறக்கங்கள் மற்றும் விளம்பர-இலாபப் பக்கங்களில் (advertising-arbitrage pages) போய் முடிகின்றன. இப்பெண்கள் முகப்புப் பக்கத்திற்கும் (feed) இறுதிப் பக்கத்திற்கும் (landing page) இடையில் தங்களது பெயர்களைக் கூட மாற்றிக்கொள்கிறார்கள். மாற்றமடையும் புள்ளியில் (point of conversion) புதிய அடையாளங்களுடன் அவர்கள் மீண்டும் தோன்றுகிறார்கள், மேலும் இந்த மாற்றத்தை முகப்புப் பக்கத்திற்குள் (feed) இருக்கும் எதனாலும் கண்டறிய முடியாது.

இதுவொன்றும் இலங்கைக்கு மட்டுமே உரிய ஒரு தனித்துவமானப் பாதிப்பு அல்ல. ஏனெனில் ஸ்பானிஷ், இத்தாலிய மற்றும் மலையாள மொழிகளில் இயங்கும் கணக்குகள், இதேபோன்ற கட்டமைப்பை ஒரு பதிவிற்கான செயல்திறனை விட மூன்று மடங்குக்கும் அதிகமான அளவில் மறு உற்பத்தி செய்கின்றன. இது உள்ளூர் வலைப்பின்னலை ஒரு சர்வதேச இயக்க மாதிரியின் (transnational operating model) உரிமமாகவே (franchise) காட்டுகிறது; இதில் இந்த செயற்கையானப் பெண்கள் மாற்றியமைக்கப்படக்கூடிய ஒரு பகுதியாக மட்டுமே உள்ளனர்.

இந்தத் தரவுகளில் அரசியல் ரீதியான செல்வாக்குச் செலுத்தும் செயல்பாடுகளுக்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இந்த உள்கட்டமைப்பானது இருவகை பயன்பாடுகளுக்குரியது (dual-use). ஏனெனில், ஏற்கனவே திரட்டப்பட்ட பார்வையாளர்கள், ஏற்கனவே நன்மதிப்பைப் பெற்ற போலி நபர்கள் மற்றும் ஏற்கனவே கண்டறிய முடியாதவாறு மறைக்கப்பட்டுள்ள பின்னணித் தோற்றம் ஆகியவையே அத்தகைய ஒரு பிரச்சாரத்திற்குத் துல்லியமாகத் தேவைப்படும் விஷயங்களாகும். மேலும், இதே அம்சங்கள் இலங்கையில் மெட்டா (Meta) தளங்களில் ஏற்கனவே பரவியிருக்கும் கிரிப்டோ மற்றும் நிதி சார்ந்த மோசடிகளின் தாக்கத்தைப் பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு காரணியாகவும் (force multiplier) செயல்படுகின்றன.

ஏனெனில், ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வழிமுறையும், ஒரு பயனர், உண்மையான ஒரு நபரையும் ஒரு ஏமாற்று வழியையும் (funnel) வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இருக்கும் பேஸ்புக்கின் பொதுவான அம்சங்களின் (affordances) அடிப்படையிலேயே இயங்குகின்றன. இதனால் இந்த அடையாள ஏமாற்று வேலைக்கு எந்தவொரு விதிமுறை மீறல்களும் தேவைப்படவில்லை; மேலும் இந்த வேறுபாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய வெளிப்படைத்தன்மைக் கருவிகள் (transparency tools) ஏதோ விதிவிலக்காக மட்டுமே காணப்படுகின்றன. (பொதுவான உரிமையாளர், இயக்குபவரின் அடையாளம், விளம்பரச் செலவு மற்றும் வருவாய் ஓட்டம் போன்ற) இன்னும் நிரூபிக்கப்படாத விஷயங்கள் அனைத்தும், ஒரு பார்வையாளரோ அல்லது ஒரு ஒழுங்குமுறை அமைப்போ (regulator) இந்தத் தளத்தின் பொதுவான முகப்புப் பக்கங்களின் மூலம் கண்டறியக்கூடிய எல்லைக்கு அப்பால் அமைந்துள்ளன. இந்த வரம்பே, அத்தளத்தின் வெளிப்படையாகத் தெரியும் அடுக்கு எவ்வளவு குறைவான பொறுப்புக்கூறலையே வழங்குகின்றது என்பதற்கான ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாகும்.

முக்கிய சிறப்பம்சங்கள் (Key highlights)

  1. இலங்கையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட இத்தகையதொரு முறையான ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 10 பேஸ்புக் கணக்குகளில் ஒன்று கூட ஒரு உண்மையான பெண்ணுக்குரியது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது: ஒவ்வொரு கணக்கும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஒரு இலங்கை பெண்ணின் பெயர், முகம் மற்றும் வாழ்க்கையை வைத்துப் போலியாக இயங்குகின்றன. இந்தத் தரவு புகைப்பட சான்றுகளின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
  2. இந்த கணக்குகளில் ஐந்து கணக்குகள் ஒரே ஒரு நபரால்/அமைப்பினால் (ஒரே கையால்) எழுதப்பட்டது போல் செயல்பட்டுள்ளன. இதன் விளைவாக 113 ஒரே மாதிரியான தலைப்புகளும், 676 நெருங்கிய போலிப் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளதுடன், சில நிமிடங்களிலேயே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டு முறையானது, தற்செயலாக நிகழ்ந்த ஒரு பாணி என்று எவ்வகையிலும் கூறிவிட முடியாது.
  3. 1,706 பதிவுகள் மற்றும் 890,632 engagements களைக் கொண்டு பார்க்கும்போது, இதன் அளவானது ஏதோ கைவினைத் தொழில் போலன்றி, ஒரு பெரிய தொழிற்சாலை அளவிலான செயல்பாடாகக் காணப்படுகிறது. இதில் மூன்று பேஜ்கள் (pages) மட்டுமே மொத்த கவன ஈர்ப்பில் 9% -ஐத் தன்பால் ஈர்க்கின்றன; அதேவேளை, ஏனைய போலி நபர் கணக்குகள் தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியக்கூடிய இருப்புப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன.
  4. இதற்காகப் பயன்படுத்தப்படும் தூண்டில், சிங்கள மொழியிலான ‘மனவேதனை/ஏமாற்றம்’ ஆகும்: திட்டமிட்டு எழுதப்பட்ட தனிமை, கணவனை இழந்த நிலை, விவாகரத்து மற்றும் நிதி நெருக்கடி போன்ற சூழல்களைக் காட்டி, இரக்கப்படும் ஒரு புதியவரைப் பொதுவான பின்னூட்டப் பகுதியிலிருந்து (public comment) தனிப்பட்ட வாட்ஸ்அப் அரட்டைக்கு (private WhatsApp chat) வரவழைக்கும் வகையில் இவை ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  5. இவற்றில் பயன்படுத்தப்படும் படங்கள், ஒரு கவர்ச்சியான பாணியை விடவும் ஒரு குறிப்பிட்ட பாலியல் ஈர்ப்புப் பாணியை (niche) இலக்காகக் கொண்டு துல்லியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகைப்படுத்தப்பட்ட மார்பளவு, போலியான வியர்வை மற்றும் திட்டமிட்டு வெளிக்காட்டப்படும் அக்குள்கள் போன்ற அம்சங்கள், அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட இலங்கை மற்றும் வெளிநாட்டுப் பக்கங்கள் முழுவதும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த உடலின்ப மொழி (erotic vocabulary), தளத்தின் உள்ளடக்கக் கட்டுப்பாட்டு விதிகள் (moderation), நடவடிக்கை எடுக்கும் வரம்பிற்குள் சிக்காமல் தந்திரமாகத் தப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
  6. பணப் பரிமாற்றத்திற்கான வழிகள் வெளிப்படையாகவே மறைந்து கிடக்கின்றன: முக்கியத்துவம் வாய்ந்த Links சுயவிவரக் குறிப்புகள், Short Links மற்றும் முதல் பின்னூட்டங்களிலேயே அமைந்துள்ளன. இப்பகுதிகளைப் பெருமளவிலான கணக்காய்வுகள் (bulk auditing) அரிதாகவே சென்றடைகின்றன என்பதுடன், இவை இறுதியாக adult-chat, சூதாட்டம் (gambling), கிரிப்டோ மற்றும் விளம்பர-இலாபப் பக்கங்களில் (advertising-arbitrage) போய் முடிகின்றன.
  7. இப்பெண்கள் முகப்புப் பக்கத்திற்கும் (feed) இறுதிப் பக்கத்திற்கும் (landing page) இடையில் தங்களது பெயர்களைக் கூட மாற்றிக்கொள்கிறார்கள் (காவ்யா என்பது குமாரி என்றும், நெத்மி என்பது வாசனா மற்றும் ஹிருணி என்றும் மாறுகிறது). பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தும் ஒரு பயனரால் இந்த மாற்றத்தை எவ்வகையிலும் கண்டறிய முடியாது.
  8. இந்தத் தரவுகளில் அரசியல் ரீதியான செல்வாக்குச் செலுத்தும் செயல்பாடுகளுக்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இந்த உள்கட்டமைப்பானது இருவகை பயன்பாடுகளுக்குரியது (dual-use). ஏனெனில், ஏற்கனவே திரட்டப்பட்ட பார்வையாளர்கள், ஏற்கனவே நன்மதிப்பைப் பெற்ற போலி நபர்கள் மற்றும் ஏற்கனவே கண்டறிய முடியாதவாறு மறைக்கப்பட்டுள்ள பின்னணித் தோற்றம் ஆகியவையே அத்தகைய ஒரு பிரச்சாரத்திற்குத் துல்லியமாகத் தேவைப்படும் விஷயங்களாகும்.
  9. ஸ்பானிஷ், இத்தாலிய மற்றும் மலையாள மொழிகளில் இயங்கும் கணக்குகள், இதே போன்ற கட்டமைப்பை ஒரு பதிவிற்கான செயல்திறனை விட மூன்று மடங்குக்கும் அதிகமான அளவில் (இலங்கையின் சராசரி பயனர் ஈடுபாடான 130 உடன் ஒப்பிடும்போது இவற்றின் சராசரி பயனர் ஈடுபாடு 459 ஆக உள்ளது) மறுஉற்பத்தி செய்கின்றன. இது இலங்கை வலைப்பின்னலை ஒரு சர்வதேச இயக்க மாதிரியின் உள்ளூர் உரிமமாகவே (franchise) காட்டுகிறது.
  10. இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வழிமுறையும் அத்தளத்தின் பொதுவான அம்சங்களின் அடிப்படையிலேயே இயங்குவதாலும், ஒரு பயனர் இந்த ஏமாற்று வேலையைக் கண்டறிவதற்கு பேஸ்புக்கின் பொதுவான முகப்புப் பக்கங்கள் எந்தவொரு வழியையும் வழங்காததாலும், இந்தச் செயல்பாடுகளுக்கு பேஸ்புக்கின் விதிமுறைகளை மீற வேண்டிய தேவை இருக்கவில்லை; மாறாக பேஸ்புக் தளத்தை மிகச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதுமானதாக இருந்துள்ளது.
  11. இந்த அறிக்கையின் வரம்புகளே பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஏனெனில், பொதுவான உரிமையாளர், இயக்குபவரின் அடையாளம், பின்னணியில் இயங்கும் ஆட்டோமேஷன் (backend automation) மற்றும் வருவாய் ஓட்டம் போன்ற விஷயங்கள் அனைத்தும், ஒரு பார்வையாளரோ அல்லது ஒரு ஒழுங்குமுறை அமைப்போ (regulator) இந்தத் தளத்தின் பொதுவான முகப்புப் பக்கங்களின் மூலம் கண்டறியக்கூடிய எல்லைக்கு அப்பால் அமைந்துள்ளன.