Photo, NPP
2024 பொதுத் தேர்தல் எதிர்வரும் இன்று நடைபெறுகிறது. இப் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் 5006 வேட்பாளர்களும் சுயாதீனக் குழுக்களின் சார்பில் 3346 வேட்பாளர்களும் என மொத்தமாக 8352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களுள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது 225 பேர் ஆவர்.
நாடாளுமன்றத்தை திசைகாட்டியினால் நிரப்புதல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் நாடாளுமன்றத்தை ‘திசைகாட்டியால்’ நிரப்ப வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். ‘14ஆம் திகதி நடப்பது பெரும் சிரமதானமே’ என 09 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார். அவருடைய உரையில் இரண்டு பிரதான விடயங்கள் உள்ளடங்கியிருந்தது. முதலாவது, ஊழல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதைத் தடுப்பது. அது சிறந்தவொரு விடயமாகும். இலஞ்சம், ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல், இலஞ்சம், ஊழலை ஒழித்தலுக்கு ஒத்துழைக்கின்ற எவராலும் ஜனாதிபதியின் அக்கூற்றை ஏற்றுக்கொள்வதைத் தவிர அதனை எதிர்க்க முடியாது.
இரண்டாவது விடயம், ஜனாதிபதி மற்றும் திசைகாட்டியின் பிரதான ஸ்லோகமாக இருப்பது நாடாளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவது என்பதாகும். ஜனநாயகம் தொடர்பில் சிறிதளவேனும் கரிசனையுள்ள எந்தவொரு பிரஜையும் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது முழு நாடாளுமன்றத்தையும் ஒரே கட்சியின் உறுப்பினர்களால் நிரப்புவது ஜனநாயகம் அல்ல என்பதாகும். இதை வேறு விதமாக கூறுவதானால், பெரும்பான்மை எண்ணிக்கையில் சேராத, எண்ணிக்கையில் சிறுபான்மையினரை முழுமையான அரசியல் நடவடிக்கையில் கைவிடாமல் முழுமையான அரசியல் நடவடிக்கையில் பங்கேற்க வைப்பதும், இணைத்துக் கொள்வதுமே ஜனநாயகமாகும். பெரும்பான்மை வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு பேராபத்தானது என்பதே வரலாறு எமக்கு உணர்த்தியுள்ள பாடமாகும். அதனால் ஏகபோக உரிமை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மாற்றுக் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் இடம்கொடுப்பது தவிர்க்க முடியாதது. எனவே, ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்தும் ஓர் சமூகத்திற்கு இது ஆபத்தானதாக அமையும்.
குறிப்பாக பன்முகத்தன்மை கொண்டவொரு நாட்டுக்கு இது ஆபத்தானதாக அமையலாம். அதாவது, பன்முகத்தன்மையை ஒரு வளமாகக் கருதி முழுமையான அரசியல் செயற்பாடுகளுக்கு அதனை இன்றியமையாத பகுதியாக இணைத்து செயற்பாடாக மாற்றிக் கொள்வதற்குப் பதிலாக பன்முகத்தன்மை ஏற்றுக்கொள்ளாமல் விடுவது அங்கு இடம்பெறலாம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளாத மற்றும் பன்முகத்தன்மையை ஒரு சொத்தாக ஏற்றுக்கொள்ளாத அரசியல் செயல்முறையானது இலங்கை போன்ற பன்முகத்தன்மை நிறைந்த நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிவிடாது. எமது பிரார்த்தனை என்னவெனில், மேற்படி விதமாகவன்றி பன்முகத்தன்மையை (இனங்கள் – கருத்துக்கள் போன்றவற்றை) வளமாக ஏற்றுக்கொள்ளும் ஆட்சிமுறையொன்றினை எதிர்வரும் 14ம் திகதிக்கு பின்னர் உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு இயலுமை கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்.
பெரும்பான்மைக்குப் பதிலாக பன்முகத்தன்மை
பன்மைத்துவம் என்பது ஒரு சமூகத்தில் நிலவும் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது மற்றும் மதிப்பளிப்பதனைக் குறிக்கிறது. அதாவது, இனங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் அல்லது கருத்துக்கள் போன்ற பல்வேறு குழுக்கள்/கருத்தியல்புகளுக்கு மத்தியில் அவர்களுடைய தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்துக் கொண்டு, சகவாழ்வுடனும் ஒன்றிணைந்து (அரசியல்) தொடர்பு கொள்கின்றன. பன்மைத்துவ சமூகங்களில், குழுக்களிடையே உள்ள வேறுபாடுகள்/ பன்முகத்தன்மைகள் அந்த சமூகத்தை வளப்படுத்தும் காரணியாகக் கருதப்படுகின்றது. இது சகல வழிகளிலும் முன்னேற்றகரமான கலாச்சார பெறுமதிகளை அல்லது எதிர்கால நோக்கங்களை பிரதிபலிக்கின்ற வண்ணமயமான மற்றும் உரிமைகளை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஒரு நிகழ்வில் இருப்பது போன்றதாகும்.
அது வெறும் பொறுமைகளுக்கு அப்பாற்பட்ட, மாற்றுக் கருத்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்கள் தொடர்பில் மிக ஆளமான மத்தியஸ்தத்தை/ நல்லபிப்பிராயத்தை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வளப்படுத்துவதற்கான ஒன்றிணைதலாகும். அது சிந்தனையினதும் பயன்பாட்டினதும் “பன்முகத்தன்மையை” ஆரோக்கியப்படுத்தும், பண்புகளையுடைய மற்றும் ஜனநாயக சமூகத்திற்கான தேவைப்பாட்டினை வலியுறுத்துகின்றது. எனவே, இலங்கைக்கு அவசியப்படுவது அரசியல் பெரும்பான்மைக்குப் பதிலாக ‘அரசியல் பன்மைத்தவம்’ தொடர்பில் செயற்படக்கூடிய அல்லது வாதாடுகின்ற அரசியலாகும். பல்வகைக் கட்சிகள், கருத்துக்கள் மற்றும் தேவைப்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் சகவாழ்வுடன் செயலாற்றக்கூடிய அரசியல் கலாசாரம் அல்லது முறைமை பற்றிய செயற்பாட்டு கருத்தியலாகும். அது தனிக் கட்சி முறைமை அல்லது சர்வாதிகார அரசாங்கம் பற்றிய கருத்திற்கு எதிராக மற்றும் மிக ஆளமாக வேரூன்றி நிற்கின்ற நிலைப்பாடாகும். அதற்கு பதிலாக அரசியல் பன்மைத்துவத்தை அது மேம்படுத்தும்.
“பெரும்பான்மை அல்லது பெரும்பான்மையானோரின் விருப்பம்/அதிகாரம் அல்லது பெரும்பான்மை எனும் பெயரால் ஆரூடம் கொண்டு அல்லது பெரும்பான்மை தரப்பினரின் கருத்து, செயற்பாட்டினூடாக இந்நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள அழிவானது மிகப் பெரியது. அது மட்டுமன்றி, மாற்றுக் கருத்துக்கள், எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களை உள்ளீர்ப்பதற்கு பதிலாக, வரலாற்று ரீதியாக இடம்பெற்று வந்த பெரும்பான்மை கருத்து – அரசியல் நடவடிக்கைகளினூடாக மாற்றுக் கருத்துக்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களை வெளியகற்றும் நடவடிக்கையே இடம்பெற்றுள்ளது. எனவே, பெரும்பான்மைக்கு பதிலாக பன்மைத்துவ கருத்துக்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகளே இன்றும் நாளையும் இலங்கைக்கு அவசியமானதாக அமையக்கூடும்.”
இன்று இந்த நிலைப்பாட்டின் பொருட்டு தமது வாக்கினை/விருப்பினை தெரிவிப்பது இந்நாட்டுப் பிரஜைகளின் கடமையாகும்.
இதனை மேலும் சுருக்கமாகக் கூறுவதாயின், “பெரும்பான்மை விருப்பம்” அல்லது பெரும்பான்மை எனும் போர்வையில் அல்லது ஆரூடம் கொண்டு தமிழ் சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக நாம் செய்துள்ள அழிவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. வரலாற்றினை ஆராய்கின்ற போது மட்டுமின்றி இன்றளவிலும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான நிகழ்வுகள் எமது கண்முன் நடப்பதினூடாக அது தெளிவாகின்றது/ ஊர்ஜிதமாகின்றது.
எனவே, பெரும்பான்மைக்கு பதிலாக பன்மைத்துவத்திற்காக தமது வாக்கினை/விருப்பினை தெரிவிப்பதும் அதற்குப் பிறகு அதற்காக குரல் கொடுப்பதும் – ஒன்றிணைவதும் இலங்கை பிரஜைகளின் பொறுப்பாகும். அவ்வாறில்லையெனில், ‘வளமான நாடு’ என்ற கோஷம் கொள்கைப் பிரகடனத்தில் மாத்திரம் எஞ்சியிருக்கும்.
இலங்கையன்