Photo, THE HINDU

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இலங்கைக்கு மிகப் பெரிய சர்வதேச ஆதரவு தேவைப்படுகிறது. புவிசார் அரசியல் சூழ்ச்சிக்குப் பதிலாக, இலங்கையின் கடன் வழங்குநர்கள் அனைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து ஒரு வழியை அடைவதற்கு போதுமான அளவு கடன்கள் இரத்துச் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று 182 பேரடங்கிய சர்வதேச பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“இலங்கை, பல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் சேர்ந்து, வெளிப்புற மற்றும் உள் காரணிகளால் தொடர்ச்சியான நிதிசார் அதிர்ச்சிகளை சந்தித்துள்ளது. நாணயம் கணிசமாக மதிப்பிழந்தாலும், உணவு மற்றும் எரிசக்தி இறக்குமதி செலவுகள் உயரவும், வட்டி விகிதங்கள் உயரவும் உலகளாவிய சக்திகள் காரணமாக அமைந்துள்ளன. தவறான கொள்கையைக் கொண்ட நிர்வாகத்தின் வரலாற்றுடன் இந்த அதிர்ச்சிகளும் (குறிப்பாக பொறுப்பற்ற கடன் பெறுதலை ஊக்குவித்த கட்டுப்பாடற்ற மற்றும் திறந்த தன்மை) சட்டவிரோத நிதி பாய்ச்சல்களை நாட்டிற்கு வெளியே செயற்படுத்தியதுடன் அரசியல் ஊழலுக்கு உதவியமை – வெளிப்புற கடன் மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளன.”

“கடந்த தசாப்தத்தில் உலகப் பொருளாதாரத்தில் பணப்புழக்க விரிவாக்கம் மற்றும் குறைந்த வட்டி வீதங்கள் நிலவிய வேளையில் தனியார் கடன் வழங்குநர்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு வழங்குவதை விட அதிக வட்டி வீதத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன்களை வழங்கினர். இத்தகைய நாடுகளில் கடன் திருப்பிச் செலுத்துவதை மிகவும் கடினமாக்கும் அதிக இக்கட்டான நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த அதிக வீதங்கள் நடைமுறையில் இருந்தன. முதலில் உலகளாவிய பெருந்தொற்று மூலமும் பின்னர் 2022ஆம் ஆண்டின் விலை அதிர்ச்சிகள் மற்றும் வட்டி வீத அதிகரிப்பின் மூலமும் அந்த இக்கட்டு நிலை இப்போது நிறைவேறியுள்ளது.”

“தனியார் கடன் வழங்குநர்கள் இலங்கையின் வெளிப்புற கடன் பங்குகளில் கிட்டத்தட்ட 40% இனை வைத்திருக்கிறார்கள் (பெரும்பாலும் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் (ISBs) வடிவத்தில்). ஆனால், வட்டி வீதங்கள் அதிகமாக வழங்கப்படுவதால் 50% க்கும் அதிகமான வெளிப்புற கடன் கொடுப்பனவுகளை அவர்களே பெறுகின்றனர். இத்தகைய கடன் வழங்குநர்கள் தங்கள் அபாயங்களை ஈடுகட்ட இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான பிரீமியத்தை வசூலித்தனர். இது அவர்களுக்கு பாரிய இலாபத்தை ஈட்டிக் கொடுத்ததுடன் ஏப்ரல் 2022 இல் இலங்கையின் முதல் தவணை தவறலுக்கு பங்களித்தது. “இடர் பிரீமியம்” காரணமாக அதிக வருமானத்திலிருந்து பயனடைந்த கடன் வழங்குநர்கள் அந்த அபாயத்தின் விளைவுகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். உண்மையில், சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் இப்போது இரண்டாம் நிலை சந்தையில் கணிசமாக குறைந்த விலையில் வர்த்தகம் செய்கின்றன. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியம் கோருகின்ற கடன் பேச்சுவார்த்தைகளிலும் பரிஸ் கிளப்பிலும் (Paris Club) இறையாண்மை கடனாளிகளுக்கு மேலாக தனியார் பத்திரதாரர்களுக்கு ஒரு மேலிடத்தை வழங்குவது இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது.”

“மேலும் கடன் பேச்சுவார்த்தை செயன்முறையின் வெளிப்படைத்தன்மை இல்லாததும் ISB-களை வைத்திருப்பவர்களின் பொறுப்புக்கூறல் இல்லாமலிருப்பதும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு கடன் வழங்குவதிலுள்ள இடர்மிகு நிலை (இப்போது “மோசமான கடன்” என்று அங்கீகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது) தற்போதைய கடன் நெருக்கடியை உருவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க உறுப்பு என்ற கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ISB-களை வைத்திருப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதோடு, ISB-கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதையும், அந்த நிதிகளின் பயன்பாட்டையும் வெளிப்படுத்துவதும் முக்கியம்.”

“இலங்கையில் கடன் பேச்சுவார்த்தைகள் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன. அனைத்து கடன் வழங்குநர்களும் (இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியார்) மறுசீரமைப்பின் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அண்மைய காலப்பகுதியில் கூடுதல் நிதியுதவியை உறுதிப்படுத்த வேண்டும். எனினும், இலங்கை இதனை உறுதிப்படுத்த முடியாது; அதற்கு மிகப் பெரிய சர்வதேச ஆதரவு தேவைப்படுகிறது. புவிசார் அரசியல் சூழ்ச்சிக்குப் பதிலாக, இலங்கையின் கடன் வழங்குநர்கள் அனைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து ஒரு வழியை வழங்குவதற்கு போதுமான அளவு கடன்கள் இரத்துச் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”

“அதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு அமைப்புகளின், குறிப்பாக சர்வதேச நிதி நிறுவனங்களின் (IFIs) பங்கும் முக்கியமானது. அவை இறையாண்மை நாடுகளுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டன. குறிப்பாக நிதிச் சந்தைகள் உதவாத சூழல்களில், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நிதி நெருக்கடிகளின் தாக்கத்தைத் தடுப்பதற்கும் அல்லது குறைப்பதற்கும், சமூக மற்றும் வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான முக்கியமான முதலீடுகளுக்கான ஆதாரங்களை வழங்குவதற்கும் அவை நிறுவப்பட்டன.”

“அவை மிக அவசரமாக தேவைப்படும் நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்கள் தற்போது இந்த பொறுப்புகளுக்கு ஏற்ப செயற்படவில்லை. இலங்கையில் அவை தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த மிகவும் திறந்த மூலதன கணக்குகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தளர்வு ஆகிய கொள்கைகளை ஊக்குவித்தன. அவை நெருக்கடிக்கு பதிலளிப்பதில் மெத்தனப் போக்கோடு இருந்து வந்துள்ளதுடன் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தாலும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு முதன்மை நிதி உபரிக்கு செல்வது போன்ற கடுமையான கொள்கை மற்றும் நிதி இணக்கங்களை கோருகின்றனர்.”

“இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் இதன் தாக்கங்கள் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. இது நம்பத்தகாத வருவாய் அனுமானங்களைக் கொண்டுள்ளதுடன் அவை பூர்த்தி செய்யப்பட வாய்ப்புகளில்லை. இதன் விளைவாக வரும் வருவாய் குறைபாடுகள் பின்னர் மேலும் “அதிகரித்த செலவுக் குறைப்பு” மற்றும் அத்தியாவசிய பொதுச் செலவினங்களைக் குறைக்க வேண்டிய தேவைப்பாட்டை உருவாக்கும். மூலோபாயக் காணிகள், கடல் வளங்கள், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு உட்கட்டமைப்பு மற்றும் பொது முயற்சியாண்மைகளின் பொதுச் சொத்துக்களை அகற்றுதல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றை இந்த வரவுசெலவுத் திட்டம் முன்மொழிகிறது. இந்தக் கொள்கைகள் இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தீங்கு விளைவிக்கும், வறுமை மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்கும், மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். மாறாக மேம்பட்ட சமூகப் பாதுகாப்பு மீதும் பரிமாற்ற விலை மற்றும் வர்த்தக மிகைப் பட்டியலிடல் மூலம் இடம்பெறும் மூலதனத்தின் சட்டவிரோத வெளியேற்றத்தை தடுத்தல் மற்றும் சூப்பர் பணக்காரர்களின் பணக்குவிப்பு, நுகர்வு மீது வரி விதித்தல் ஆகியவற்றின் மீதிலும் கவனம் செலுத்த வேண்டும்.”

“உலகம் (குறிப்பாக சர்வதேச நிதி அமைப்பு) இறையாண்மை கடன் நிவாரணம் மற்றும் நிலைபேறாண்மை பற்றிய அவசர தேவைப்பாடுகளைக் கையாள்வதற்குப் பொருத்தமானதாக இருக்கின்றதா என்பதற்கான ஒரு முக்கியமான குறிகாட்டியை இலங்கையின் நிலைவரம் வழங்கும் என்பதோடு அது சர்வதேச கடன் பேச்சுவார்த்தைகளில் நீதியின் ஒரு பண்பை உறுதி செய்யும். ஆகவே, ஏற்கனவே அதன் சட்டபூர்வமான தன்மை மற்றும் அடிப்படை நம்பகத்தன்மை இல்லாததால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள ஒரு பலதரப்பு அமைப்பின் மீதான எந்தவொரு நம்பிக்கையையும் (இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல) மீட்டெடுப்பது மிக முக்கியமானது.”

 1. Professor Jayati Ghosh, Professor of Economics, University of Massachusetts-Amherst, USA and India
 2. Professor Dani Rodrik, Ford Foundation Professor of Political Economy, Harvard University, USA
 3. Professor Thomas Piketty, Professor of Economics, Ecole d’economie de Paris/Paris School of Economics, France
 4. Professor Ravi Kanbur, T. H. Lee Professor of World Affairs, Professor of Economics, Cornell University, U.S.A.
 5. Professor Atul Kohli, David Bruce Professor of International Affairs, Princeton University, USA
 6. Professor Sakiko Fakuda-Parr, Professor of International Affairs, The New School, USA
 7. Professor Gary Dymski, Professor of Applied Economics, University of Leeds, UK.
 8. Professor Robert H Wade, Professor of Political Economy and Development, London School of Economics, U.K.
 9. Professor Jomo Kwame Sundaram, Malaysia, former UN Assistant Secretary-General for Economic and Social Affairs.
 10. Professor Jean Dreze, Professor of Development Economics, Delhi School of Economics, India;
 11. Professor Guy Standing, Professorial Fellow, SOAS – University of London, U.K.
 12. Professor Yanis Varoufakis, Professor of Economics, University of Athens, Greece
 13. Professor Irene van Staveren; Professor of Economics, Erasmus University of Rotterdam, The Netherlands
 14. Professor Jane Humphries, Centennial Professor/Professor Emerita of Economic History, London School of Economics/Oxford University, U.K.
 15. Professor Daniela Gabor, Professor of Economics and Micro-Finance, University of West England, U.K.
 16. Professor Ha-Joon Chang, Research Professor of Economics, SOAS – University of London, U.K.
 17. Professor Alfredo Saad Filho, Professor of Economics, Kings College – London, U.K.
 18. Professor Sanjay Reddy, Professor of Economics, New School for Social Research, NY, USA;
 19. Professor Rolph van der Hoeven, Professor of Employment and Development Economics, International Institute of Social Studies, The Netherlands
 20. Professor Jungi Tokunaga, Professor of Economics, Dokkyo University – Tokyo, Japan;
 21. Professor Yavuz Yasar, Professor of Economics, University of Denver – Colorado, USA
 22. Professor Ben Fine, Professor of Economics, SOAS – University of London, U.K.
 23. Professor C. P. Chandrasekhar, Senior Research Fellow, Political Economy of Research Institute, University of Massachusetts-Amherst, USA
 24. Professor Alicia Girón, Director ‘University Studies Program on Asia and Africa’ UNAM-Mexico
 25. Professor Costas Lapavitsas, Professor of Economics, SOAS – University of London, U.K.
 26. Dr Juan Pablo Bohoslavsky, Researcher, CONICET, Argentina, former UN Independent Expert on Debt and Human Rights.
 27. Professor Ipek Ilkkaracan, Professor of Economics, Istanbul Technical University, Istanbul, Turkey
 28. Professor Sergio Cesaratto, Professor of Economics, University of Sienna, Italy.
 29. Professor Lawrence King, Professor of Economics, University of Massachusetts-Amherst, USA
 30. Professor Mahalya Chatterjee, Professor of Economics, Calcutta University, India
 31. Professor Nancy Folbre, Professor Emerita of Economics, University of Massachusetts-Amherst, USA
 32. Professor Ravi Bhandari, Professor of Economics, Skyline Community College, USA
 33. Professor Utsa Patnaik, Professor Emerita of Economics, Jawaharlal Nehru University, India
 34. Professor Sudip Chaudhuri, Professor of Economics, Centre for Development Studies – Trivandrum, India
 35. Professor Yana Rodgers, Professor of Economics, Rutgers University, NJ, USA
 36. Professor Gunseli Berik, Professor of Economics, University of Utah, USA
 37. Professor Prabhat Patnaik, Professor Emeritus of Economics, Jawaharlal Nehru University, India
 38. Professor Lucas Chancel, Co-Director, World Inequality Lab, Paris School of Economics.
 39. Professor Lee Badgett, Professor of Economics, University of Massachusetts-Amherst, USA
 40. Professor Radhika Balakrishnan, Professor of Economics & Women and Gender Studies, Rutgers University, USA
 41. Professor Randy Abelda, Professor Emerita of Economics and Public Policy, University of Massachusetts-Boston, USA
 42. Professor David F Ruccio, Professor Emeritus of Economics, University of Notre Dame, USA
 43. Professor Heidi Hartmann, Professor of Economics and International Development, American University, USA;
 44. Professor Gerald Epstein, Professor of Economics, University of Massachusetts-Amherst, USA
 45. Professor Smriti Rao, Professor of Economics, Assumption University, USA
 46. Professor Naila Kabeer, Professor of Gender and Development, London School of Economics, U.K.
 47. Professor Barbara Harriss-White, Professor Emerita of Development Studies, Oxford University, U.K.
 48. Professor Aaron Schneider, Professor and Leo Block Chair – Development, University of Denver, USA
 49. Professor Kanchana N Ruwanpura, Professor of Development Geography, University of Gothenburg, Sweden
 50. Professor Raj Patel, Research Professor, Lyndon B Johnson School of Public Policy, University of Texas-Austin, USA
 51. Professor Muthucumaraswamy Sornarajah; Professor Emeritus of Law, National University of Singapore, Singapore
 52. Professor Vinay Gidwani, Professor of Geography, Environment and Society, University of Minnesota, USA
 53. Professor Vasuki Nesiah, Professor of Practice in Human Rights and International Law, New York University, USA
 54. Professor Page Fortna, Harold Brown Professor of U.S. Foreign Security and Security Policy, Columbia University, USA.
 55. Professor Shirin Rai, Research Professor of International Development, SOAS – University of London, U.K.
 56. Professor Suzanne Bergeron, Helen M Graves Professor of Women’s Studies and Social Sciences, University of Michigan-Dearbon, U.S.A.
 57. Professor Kanishka Goonewardena, Professor of Human Geography, University of Toronto, Canada;
 58. Professor Dia da Costa, Professor of Social Justice and International Studies, University of Alberta, Canada;
 59. Professor Kanishka Jayasuriya, Professor of Politics and International Studies, Murdoch University, Australia
 60. Professor Kevin Gallagher, Professor of Global Development Policy, The Frederick S Pardee School of Global Studies, Boston University, USA
 61. Professor Arjun Guneratne, Professor of Anthropology, Macalster College, USA
 62. Professor Pasuk Phonpaichat, Professor Emerita of Economics, Chulalongkorn University, Bangkok, Thailand
 63. Professor Roger Jeffrey, Professor of Development Sociology, University of Edinburgh, U.K.
 64. Professor Ben Selwyn, Professor of International Development, University of Sussex, U.K.
 65. Professor Jennifer Olmstead, Professor of Economics, Drew University, U.S.A.
 66. Professor Parthapratim Pal, Professor of Economics, India Institute of Management – Calcutta, India
 67. Professor S Charusheela, Professor of Economics and Interdisciplinary Studies, University of Washington, USA
 68. Professor Philip McMichael, Professor Emeritus of Development Sociology, Cornell University, USA
 69. Professor John Harriss, Professor Emeritus of International Development, Simon Fraser University, Canada
 70. Professor Kendra Strauss, Professor of Labour Studies, Simon Fraser University, Canada
 71. Professor Mritiunjoy Mohanty, Professor of Economics, Indian Institute of Management – Calcutta, India
 72. Professor Pablo Bortz, Professor of Economics, Universidad Nacional de San Martín, Argentina and Researcher at CONICET
 73. Professor Padraig Carmody, Professor of Economic Geography, Trinity College – Dublin, Ireland
 74. Professor John Morrissey, Professor of Geography, National University of Ireland, Ireland
 75. Professor Michele Gamburd, Professor of Anthropology, Portland State University, USA
 76. Professor Elizabeth Dean Herman, Professor of Urbanism and Landscape, Rhodes School of Design, USA
 77. Professor Jonathan Walters, Professor of Religion and Bill Hudson Chair of Humanities, Whitman College, USA
 78. Professor Dip Kapoor, Professor of International Education, University of Alberta, Canada
 79. Professor Maggie Leung, Professor of International Development, University of Amsterdam, The Netherlands
 80. Professor David Hulme, Professor of Development Studies, University of Manchester, U.K.
 81. Professor Adil Najam, Professor of International Relations, Earth and Environment, Boston University, USA
 82. Professor Patrick R Ireland, Professor of Political Science, Illinois Institute of Technology, USA
 83. Professor Rainer Kattel, Professor of Innovation and Public Governance, UCL, U.K.
 84. Professor Roar Høstaker, Professor of Sociology, Inland University of Applied Sciences, Norway
 85. Professor Gustavo Indart, Professor Emeritus of Economics, University of Toronto, Canada
 86. Professor Nirmala Salgado, Professor of Religion, Augustana College, USA
 87. Professor Jonathan Goodhand, Professor of Conflict and Development Studies, SOAS – University of London, U.K.
 88. Professor S Subramanian, Independent Scholar, India
 89. Professor Ann Blackburn, Old Dominion Professor in the Humanities, Cornell University, USA
 90. Professor Sunanda Sen, Levy Economics Institute – Bard College, USA
 91. Professor Namika Raby, Professor of Anthropology, California State University – Long Beach, USA
 92. Professor Maria Heim, Crosby Professor of Religion, Amherst College, USA
 93. Professor Christian Barry, Professor of Political Philosophy, Australian National University, Australia
 94. Professor Alicia Puyana, Professor of Economics, Latin American Faculty of Social Sciences, Mexico
 95. Professor R Ramakumar, Professor of Developing Societies, Tata Institute of Social Sciences – Mumbai, India
 96. Professor Venkatesh Athreya, former Professor of Development Economics, India
 97. Professor Rahula Mukhherji, Professor and Head of Political Science, South Asia Institute, University of Heidelberg, Germany
 98. Professor Kalinga Tudor Silva, Emeritus Professor Sociology, University of Peradeniya, Sri Lanka
 99. Professor Ruvani Ranasinha, Professor of Post-Colonial Studies, Kings College – University of London, U.K.
 100. Professor Sushil Khanna, Professor Emeritus of Economics, India Institute of Management – Calcutta, India
 101. Dr Ishac Diwan, Director of Research – Finance for Development Lab, Paris School of Economics, France
 102. Dr Devaka Gunawardena, Research Scholar, USA
 103. Dr Sirisha Naidu, Associate Professor of Economics, University of Missouri-Kansas City, USA
 104. Dr Karna Basu, Associate Professor of Economics, Hunter College and The Graduate Centre, City University of New York, USA
 105. Dr Mwangi wa Githinji, Associate Professor of Economics, University of Massachusetts – Amherst, USA
 106. Dr Gabriel Zucman, Associate Professor of Economics, University of California – Berkeley, USA
 107. Dr Dean Baker, Senior Economist, Centre for Economics and Policy Research, USA
 108. Dr Mary Wrenn, Senior Lecturer – Economics, University of West England, U.K.
 109. Dr Gabriela Koehler, Economist, UNRISD, Switzerland
 110. Dr Surbi Kesar, Lecturer – Development Economics, SOAS – University of London, U.K.
 111. Dr Lynda Pickburn, Associate Professor of Economics, Hampshire College, USA
 112. Dr Abena Oduro, Associate Professor of Economics, University of Ghana, Ghana
 113. Dr Smita Ramnarain, Associate Professor of Economics, University of Rhode Island, USA
 114. Dr Susan Randolph, Emerita Associate Professor of Development Economics, University of Connecticut, USA
 115. Dr Vamsi Vakulabharanam; Associate Professor of Economics, University of Massachusetts-Amherst, US
 116. Dr Grieve Chelwa, Inaugural Post-Doctoral Fellow, Institute on Race and Political Economy, New School University, USA
 117. Dr Eduardo Strachman, Associate Professor of Economics, Sao Paolo State University, Brazil
 118. Dr Ingrid Kvangraven; Lecturer – International Development, King College, U.K.
 119. Dr Jerome Roos, Fellow in International Political Economy; London School of Economics, U.K.
 120. Dr Paul R. Gilbert, Senior Lecturer – International Development, Sussex University, U.K.
 121. Dr Sheba Thejani, Lecturer – International Development, Kings College – London, U.K.
 122. Dr Joshua Gellers, Associate Professor International Affairs, University of North Florida, USA
 123. Chris Baker, Historian, Political Economist, Author, Bangkok, Thailand
 124. Dr Nachi Mani, Associate Professor of Economics, Erode Arts and Science College, India
 125. Dr Isabella Weber, Assistant Professor of Economics, University of Massachusetts-Amherst, USA
 126. Dr Ram Manikkalingam, Director – Dialougue Advisory Group, The Netherlands and Sri Lanka
 127. Dr Bengi Akbulut, Associate Professor of Geography, Planning and Environment, Concordia University, Canada
 128. Dr Madhumita Dutta, Assistant Professor of Geography, Ohio State University, USA
 129. Dr Alessandra Mezzadri, Reader in Global Development and Political Economy, SOAS – University of London, U.K.
 130. Dr Alicia Y Lamin; Lecturer in Law, Harvard University, USA
 131. Andres Arauz, Senior Research Fellow – Economics, Centre for Economic and Policy Research, USA;
 132. Dr Caroline Shenaz Hossein, Associate Professor of Global Development, University of Toronto, Canada
 133. Dr Alexander da Costa, Associate Professor of Social Justice and International Education, University of Alberta, Canada
 134. Dr Jennifer Cohen, Associate Professor of Global and Intercultural Studies, University of Miami – Ohio, USA;
 135. Dr Steven Jordan, Associate Professor of Integrated Studies, McGill University, Canada
 136. Dr Pratheep Kumar, Assistant Professor of Law and Economics, CVV, India
 137. Dr Sarah Small, Assistant Professor of Economics, University of Utah, USA
 138. Dr Darini Rajasingham-Senanayake, Anthropologist, Independent Researcher, Sri Lanka
 139. Dr Bart Klem, Associate Professor of Peace and Development Studies, School of Global Studies, University of Gothenburg, SWEDEN
 140. Dr Jesim Pais, Director – Society for Social and Economic Research, India
 141. Dr Lenore M Palladino, Assistant Professor of Economics and Public Policy, University of Massachusetts-Amherst, USA
 142. Dr Kalim Siddiqui, Senior Lecturer – Economics, University of Huddersfield, U.K.
 143. Dr Rajni Gamage, Post Doctoral Fellow, National University of Singapore, Singapore
 144. Dr Shanaz Akhatar, Postdoctoral Researcher – International Studies, University of Warwick, U.K.
 145. Dr Dina M Siddiqi, Clinical Associate Professor, New York University, USA
 146. Dr Geethika Dharmasinghe, Visiting Assistant Professor, Colgate University, USA
 147. Dr Eva Ambos, Research Fellow, University of Tubingen, Germany
 148. Dr Susan A Reed, Associate Professor of Women and Gender Studies, Bucknell University, USA
 149. Dr Sankar Varma, Research Scholar, Kerala Council for Historical Research, India
 150. Dr Narayani Sritharan, Fellow – Development Economics, Williams and Mary College, USA
 151. Dr Ayse Arslan, Assistant Professor of Development Studies, Haceteppe University, Turkey
 152. Dr Rohith Jyothish, Assistant Professor of Political Economy, O. P. Jindhal University, India
 153. Dr Giselle Thompson, Assistant Professor – Black Studies in Education, University of Alberta, Canada
 154. Priyanthi Fernando, Executive Director – International Women’s Rights Action Watch-Asia Pacific; Sri Lanka
 155. Dr Deepta Chopra, Research Fellow, Institute of Development Studies, University of Sussex, U.K.
 156. Dr Heloise Weber, Senior Lecturer – International Studies, The University of Queensland, Australia
 157. Dr Bishop Akolgo, Director, International Social Development Centre, Canada
 158. Dr Gilad Isaacs, Lecturer – Economics, Institute of Economic Justice, University of the Witwatersrand, South Africa
 159. Dr Chirashree Das Gupta, Associate Professor – Economics and Political Economy, Jawaharlal Nehru University, India
 160. Dr Joeri Scholtens, Assistant Professor – Geography, Planning and International Development, University of Amsterdam, The Netherlands
 161. Dr Samuel Jamiru Braima, Senior Lecturer, Fourah Bay College – University of Sierra Leon, Sierra Leone
 162. Dr Charles Abugre, Executive Director, International Development Economics Associates, Accra, Ghana.
 163. Dr Samanthi Gunawardana, Senior Lecturer – Gender and Development, Monash University, Australia
 164. Dr Stanley Chitukwi, Chief Executive Officer, AFRES, Malawi
 165. Dr Gregor Semieniuk, Assistant Professor of Economics, University of Massachusetts-Amherst, USA
 166. Sudhanva Deshpande, Managing Editor, Leftword Books, India
 167. Dr Farah Mihlar, Senior Lecturer in Human Rights, Oxford Brookes University, U.K.
 168. Dr Kiran Grewal, Reader in Sociology, Goldsmiths College, U.K.
 169. Dr Himanshu, Associate Professor of Economics, Jawaharlal Nehru University, India
 170. Dr Ajit Zacharias, Senior Scholar, Levy Economics Institute, USA
 171. Dr Sree Padma Holt, Associate Research Fellow, Bowdoin College, USA
 172. Dr Dharshana Kasthurirathna, Senior Lecturer, Sri Lanka Institute of Technology (SLIT), Sri Lanka
 173. Dr Shyamain Wickramasinghe, Postdoctoral Research Fellow, Copenhagen Business School, Denmark
 174. Dr Nimanthi Rajasingham-Perera, Associate Professor of Women’s Studies, Colgate University, USA
 175. Dr Mythri Jegathesan, Associate Professor of Anthropology, Santa Clara University, USA
 176. Bernard Anaba, Policy Analyst, The Integrated Social Development Centre, Ghana
 177. Dr Sharika Thiranagama, Associate Professor of Anthropology, Stanford University, USA
 178. Dr Amitav Ghosh, Novelist/Anthropologist, USA and India
 179. Dhanusha Gihan Pathirana, Independent Economist, Sri Lanka
 180. Agustina Calcagno, South Feminist Futures, Argentina
 181. Dr Roman Rafael Vega Romero, Global Coordinator, People’s Health Movement, Columbia
 182. Dr Iratxe Perea Ozerin, University of the Basque Country, Basque Country, Spain