ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று வரை அறிய முடியவில்லை.

பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 9 வருடங்களாகின்றன. இந்த ஒன்பது வருட காலப்பகுதியில் கணவனுக்கு நீதிவேண்டி கொழும்பு மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், ஹோமாகம நீதவான் நீதிமன்றம், அவிஸ்ஸாவளை நீதவான் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்கள், குற்றத்தடுப்பு பிரிவுகள் என அழைந்தும் குற்றவாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

“2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருளுக்குள்ளிருந்தே போராடிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அப்படியில்லை. பிரகீத்துக்கு என்ன நடந்தது என்ற விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த 9 வருட காலப்பகுதியில் பிரகீத்துக்கு நீதிவேண்டி பல இடங்களுக்குப் போயியிருக்கிறேன். ஆனால், இன்னும் விசாரணை மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை” என்று கூறுகிறார் சந்தியா எக்னலிகொட.

மாற்றத்துக்கு அவர் வழங்கிய நேர்க்காணலை முழுமையாக கீழே காணலாம்.