ஜனவரி 8, 2015 ஜனாதிபதித் தேர்தலானது ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்காக இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை உந்தியது. விசேடமாக, தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்பட்ட #IVotedSL பிரசாரம் பெருமளவு பிரபலமானது. இதன் மூலம் சமூக ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு அதிகரிக்க பங்களிப்பு செலுத்தின. இந்த பிரசார நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

நாட்டை மறுசீரமைப்பதற்கான ஆர்வத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனை தக்கவைத்துக் கொள்வதற்குமான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கீழ் காணும் புதிய பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு புதிய ஜனாதிபதி அல்லது ஒரு புதிய அரசினைத் தெரிவு செய்வதுடன் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான பணி முடிந்து விடவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமூகத்தில் எமது பல்வேறுபட்ட நிலைகள், பாத்திரங்கள் முதலியவற்றின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். இன்று இலங்கையின் எதிர்காலம் நம்பிக்கைகள், தீர்க்கதரிசனம் பற்றி உயிர்ப்புள்ள விவாதங்களும், கலந்துரையாடல்களும் பகிரங்கமாகவும் தனிப்படவும் நாடு முழுவதிலும், நாட்டிற்கு வெளியிலும் நிகழ்கின்றன. இவை தற்போது சமூக ஊடகங்கள், பாரம்பரிய ஊடகங்கள் ஆகியவற்றிலும் வீடுகள், வேலைத்தளங்கள் முதலியவற்றிலும் நடைபெறுகின்றன.

தனிநபர்கள் என்ற வகையில் எங்களால் என்ன செய்ய முடியுமென்பதையும், அதே போன்று ஏனைய பிரஜைகள், அரசு, எதிர்க்கட்சி அரசியல், அரச சேவைகள், வர்த்தகர்கள் அல்லது எங்களது சொந்த அயற்புறங்கள் என்னசெய்ய முடியுமென்பது பற்றியும், நாம் அனைவரும் கவனம் செலுத்துவதற்கு நன்மைக்கான மாற்றத்தைக் கொண்டு வருவது பற்றிய இந்தப் பிரச்சாரம் ஊக்குவிக்கிறது.

உங்களின் செயலொன்றை அல்லது நீங்கள் மேற்கொண்ட ஒரு தீர்மானத்தை அல்லது பின்பற்ற விரும்புவதற்கான ஒரு உதாரணத்தை தெரியப்படுத்த வேண்டுமானால் ‘ஹாஷ்டக்’ என்பதின் மூலம் “என்னால் இலங்கையை மாற்ற முடியும்” இவ்வாறு #icanChangeSL என டைப் செய்யுங்கள். உதாரணம்:

  • “ஒரு அரச அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க நான் மறுத்தேன் #icanChangeSL”
  • “பஸ் வண்டியில் பெண்ணொருவர் தொல்லைப்படுத்தப்படுவதை அடுத்த தடவை கண்டால் நான் அதை எதிர்த்து குரல் கொடுப்பேன் #icanChangeSL”
  • “ஏனைய மத நம்பிக்கைகள் பற்றி நான் கற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கிறேன் #icanChangeSL”

SQUARE PROFILE-03

எங்களது சாதகமான ஒரு சமூக நடவடிக்கை, உந்துதல் தரும் ஒரு செய்தி, எங்களுடைய நண்பர்கள் அல்லது சமூகத்திற்கான ஒரு யோசனை அல்லது நாடு முழுவதற்குமான ஓர் அபிலாசை என்பவற்றிற்கு ஓர் உதாரணமாக “எங்களால் இலங்கையை மாற்ற முடியும்” என்பதனை சுட்டிக் காட்டுவதற்கு ‘ஹாஷ்டக்’ #wecanChangeSL அடையாளத்தை உபயோகிக்கவும். உதாரணமாக:

  • “யார் வேலைவாய்ப்பினைப் பெறுவார் என்பதனை தீர்மானிப்பதில் தனிப்பட்ட செல்வாக்கினை பயன்படுத்தாதிருப்போம், #wecanChangeSL”
  • “அரச சேவைகளை வெறுமனே விமர்சனம் செய்வதற்கு மாறாக (தற்போதுள்ள வளங்களுடன்) அவற்றை எப்படி மேம்படுத்துவது என ஆலோசனை அளிப்போம், #wecanChangeSL”
  • “இலங்கையில் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு இருக்கும் மாணவர்களின் ஒரு தொண்டர் படையை நாங்கள் ஸ்தாபிப்போம்?, #wecanChangeSL”

SQUARE PROFILE-04

ஏற்கனவே, மக்களில் சிலர் நாட்டில் தாங்கள் அவதானிக்கின்ற நன்மைத்தனமான மாற்றங்களை குறிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் ‘ஹாஷ்டக்’ #ChangeSL அடையாளத்தினை உபயோகிக்கின்றனர்.

உங்கள் அபிப்பிராயங்களையும் அவை பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும் பிரஜைகளின் குரலை ஒலிக்கச் செய்வதற்குமான ஒரு சாதனமே இது. எனவே, தயவுசெய்து இதனைப் பயன்படுத்துங்கள்.

நாம் மாற்றுவதற்கு, இந்த நாடு எங்களுடையதே!

Facebook, Twitter, Google Plus மற்றும் இணையதளங்களுக்கான லோகோக்களை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும் அல்லது கீழ் தரப்பட்டுள்ளது.