அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

கறைபடிந்த கடந்த காலத்துக்கு முகங்கொடுப்பதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம்

படம் | SrilankaBrief நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி அதன் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தபோது இலங்கை நிலைமாறுதல் காலகட்டமொன்றின் ஊடாக சென்றுகொண்டிருக்கின்ற நாடு என்ற யதார்த்தம் மீண்டும் ஒரு தடவை முனைப்பாகத் தெரிந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் காரணமாக…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 5)

21 வயது பிறந்து சில தினங்களுக்குப் பிறகு எனக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. கணவர் என்னை திட்டுவதும், அடிப்பதுமாக இருந்தார். இருந்தாலும் பிள்ளைகளுக்காக பொறுமை காத்து வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 4)

படம் | Selvaraja Rajasegar Photo 18 வயதில் நான் திருமணம் முடித்தேன். திருமணம் முடிந்த அன்றே அவர் என்னை விட்டுப் பிரிந்துச் சென்றார். இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால், நான் இங்கு எவருடைய உதவியும் இல்லாமல்…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 3)

படம் | Selvaraja Rajasegar Photo 23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் மனிதத்துவத்திற்கான தேவைகளும்

படம் | Aljazeera இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் புதிய வருடத்தை தமிழ் மக்கள் நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். 2009இல் ஆயுதப்போராட்டம் முடக்கப்பட்ட பின் என்பதனை விட 2002, மாசி, 29ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை…

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இலட்சணம்

படம் | President.gov ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத…

அடையாளம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 2)

படம் | Selvaraja Rajasegar photo ரொம்ப கஷ்டத்துக்கு மத்தியில் நகையெல்லாம் விற்றுத்தான் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தேன். வெளிநாடு சென்றவர் அவரது குடும்பத்தாரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு சில காலம் மட்டுமே எனக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்தவர் வீட்டுக்கு வரவேயில்லை. எந்தவித…