“தொழில் ரீதியாக இந்தத் தேயிலைத் துறையிலே வெற்றிபெற்ற ஒரு துறையாக சிறு தோட்ட உடமை இருப்பதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. நிலப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், இலங்கையில் ஒட்டுமொத்த தேயிலை பயிரிடல் நிலத்தில் 70 சதவீதம் பெருந்தோட்டமாகவும் 30 சதவீதம் சிறுதோட்டங்களாகவும் இருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை, 75 சதவீதமான தேயிலை ஏற்றுமதி வருமானம் அந்த 30 சதவீத சிறுதோட்டங்களில் இருந்துதான் வருகிறது. 25 சதவீத வருமானம் 70 சதவீதமாக இருக்கும் பெருந்தோட்டங்களில் இருந்து வருகிறது” என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

“அதேபோல, 30 சதவீதமான நிலப்பரப்பில் சராசரியாக 4 லட்சம் சிறுதோட்ட உடமையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 99.9 வீதமானவர்கள் சிங்கள மக்களாக இருக்கிறார்கள். மத்திய மலைநாட்டை பார்த்தோம் என்றால், 6 இலட்சமாக இருந்த தோட்டத் தொழிலாளர்கள் இப்போது ஒரு லட்சம் அளவுக்குக் குறைந்திருக்கிறார்கள். அவர்களில் 99.9 வீதமானவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எனவே, தமிழர்கள் இந்த நாட்டில் தொடர்ந்து கூலிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வருமானம் திட்டமிட்ட முறையில் குறைக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம், தென்மாகாணத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து வரக்கூடிய வருமானம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் பாரிய அரசியல் சிந்தாந்தமொன்று இருக்கிறது. மலையகத் தமிழர்களை தொடர்ச்சியாக கூலிகளாக வைத்திருப்பது, வருமானத்தை முடக்குவது, இவர்களுடைய வாழ்வாதாரத்தை அப்படியே வைத்திருப்பது இதன் நோக்கமாகும்” என்றும் அவர் கூறுகிறார்.

‘மாற்றம்’ தளத்துக்கு அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே காணலாம்.