பட மூலம், Asian Review
கோட்டபாய ராஜபக்ஷவின் தனித்துவமான அம்சமும், அதேவேளை அவர் தொடர்பான கரிசனைக்கு காரணமாகயிருப்பதும், அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வரை அவர் தேர்தல் எதிலும் வெற்றிபெறவில்லை என்பதே. முதலில் அவர் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார். பின்னர் அவர் மிகவும் வலுவான அதிகாரியாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்தார். அரசியல்வாதிக்கு பதில் ஒரு படைவீரர் 2019 இல், அரசியல்வாதியின் பணிகளை நிறைவேற்றுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இங்கு அரசியல்வாதியின் பணி எனப்படுவது, அவசியமான போது அனைவரையும் உள்வாங்குவதற்கான, கருத்தொருமைப்பாட்டை எட்டுவதற்கான, சமரசம் செய்வதற்கான மற்றும் நாட்டில் காணப்படும் பல்வேறு குழுக்களை ஐக்கியப்படுத்துவதற்கான திறன் குறித்தது. கொள்கையை நடைமுறைப்படுத்தல், கொள்கையை உருவாக்குதல், வடிவமைத்தலையே ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தபோதிலும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியிடம் எதிர்பார்க்கிறோம்.
கோட்டபாய ராஜபக்ஷவிடம் அவர் தனது என தெரிவிக்கக்கூடிய, நெருக்கடியான தருணங்களில், அவரது முன்னாள் சகாக்கள், தற்போது உள்ள முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு அப்பால், அவர் நம்பியிருக்க கூடிய உறுதியான கேள்விக்குட்படுத்த முடியாத தொகுதியொன்றில்லை. அவரது விருப்பத்திற்குரிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் முதிர்ச்சியடைந்த சகோதரர்களுடன் ஒப்பிடும்போது அவரது வியாத்மக, எலியவிடம் அந்த திறமை காணப்படவில்லை. இது அவரது நிர்வாகத்தின் ஆரம்பநாட்களாக உள்ளபோதிலும்,கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்த மக்களின் திறமை தகுதிபோல அது காணப்படவில்லை. அவரது பயிற்சி மற்றும் அவர் படைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அப்பால் சந்தேகம் எழும்போதோ அல்லது கண்ணிற்கு தென்படும் வழிமுறைகள் இல்லாதபோதோ, அதனை படையினரிடம் ஒப்படைப்பது அல்லது முன்னாள் படையினர் செய்வதற்கு வழங்குவது பெரும் வெற்றியை அளிக்கவில்லை. கொரோனா வைரஸினை அவர்கள் முகாமைத்துவம் செய்த விதம் அவர்கள் வைரஸ் பரவுதலையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளனர் போல தோன்றுகின்றது.
நாடாளுமன்றத்தின் ஜனநாயக மரபுகளிற்கு கோட்டபாய ராஜபக்ஷவிடம் இடமில்லை. அவற்றின் மூலம் தனது அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்தலாம் என்றால் மாத்திரமே அவர் அவற்றை ஏற்றுக்கொள்வார். இதன் காரணமாகவே தேர்தலுக்குச் செல்வதற்கும், தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கான குறுக்கீடுகள், கட்டுப்பாடுகளை செயல் இழக்கச்செய்வதற்காகவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான அவசரமும் காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைத்தது மற்றும் புதிய தேர்தல் திகதி ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததன் மூலம் அவர் விரும்பிய விதத்தில் நடப்பதற்கு அனுமதியளித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை போன்று அரசாங்கத்தின் மற்றுமொரு முக்கிய பிரிவாகக் காணப்படுகின்ற நாடாளுமன்றம் இல்லாமல், புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை ராஜபக்சவினால் ஆட்சி செய்ய முடியும் , ஆட்சி செய்கின்றார். புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தெரிவு செய்யப்படலாம்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தவுடன் உடனடியாக கோட்டபாய ராஜபக்ஷ ஒரு சிறந்த நல்லொழுக்கமுள்ள சட்டபூர்வமான சமூகத்தை உருவாக்குவதற்கும், கிழக்கின் தொல்பொருள் முகாமைத்துவத்திற்கும் என இரு செயலணிகளை உருவாக்கினார். இந்த இரண்டிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்றமேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகள், புலனாய்வு அதிகாரிகள், பதில் பொலிஸ்மா அதிபர், இரண்டு பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தில் தற்போது குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கும் முன்னாள் படை அதிகாரிகள் ஆகியோர் முதலாவது செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது செயலணி முற்றுமுழுதாக சிங்களவர்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அரச புலனாய்வு துறையின் இயக்குநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலி இடம்பெற்றிருக்காவிட்டால் முதலாவது செயலணியும் அவ்வாறானதாகவே காணப்படும். இரண்டாவது செயலணியில் இரண்டு பௌத்த மதகுருக்கள் காணப்படுகின்றனர். இவர்களில் ஒருவர் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தலைமை மதகுரு. இரண்டு செயலணிகளிலும் இலங்கையின் சனத்தொகையில் பன்மைத்துவத்தை குறிப்பிடும் விதத்தில் ஒரு உறுப்பினரோ, ஒரு பெண்ணிற்கோ இடமளிக்கப்படவில்லை,
இந்த செயலணிகள் அவசியம்தானா?அப்படியானால் செயலணிகளில் முன்னாள் மற்றும் தற்போதைய படை அதிகாரிகளும் பொலிஸாரும் இடம்பெறுவது ஏன் அவசியமான விடயம்? அரசமைப்பு பேரவையிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் சிவில் சமூகத்தினருக்கான வெற்றிடம் காணப்படுவது வெளிப்படையான விடயம். ஓய்வு பெற்ற ஜெனரல்கள் தூசி தட்டப்பட்டு அரசமைப்பு பேரவையின் உறுப்பினர்களாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படப்போகின்றார்களா? எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் முடிவுகளை எடுக்கும் உயர்மட்டத்தில் ஒரு சிறந்த நல்லொழுக்கமுள்ள சட்டபூர்வமான தேசத்தை உருவாக்குவதற்கு இராணுவ பின்னணி அவசியம் என யாரோ ஒருவர் தீர்மானித்துள்ளார். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் இது குறித்து என்ன சொல்வார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஜனாதிபதி செயலணியின் சில உறுப்பினர்கள் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
நான் இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் பயங்கரமான நிலையே செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் கொலை மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவெறி குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி காணப்படுகின்றன. சில டுவிட்களில் வெற்றி மற்றும் ஆணவத்தினையும், 2009இல் விடுதலைப் புலிகளிடம் சிக்கிய பொதுமக்களை மீட்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் எங்கள் படையினர் எவ்வளவு சிறப்பாக செயற்பட்டனர் என்ற செய்தியையும் காணமுடிகின்றது. ஜோர்ஜ் ஃபிளொயிட்டிற்கு இடம்பெற்றதை, ஐந்து வயது சிறுவன் உட்பட பொதுமக்களின் கழுத்துக்களை சார்ஜன்ட் ரத்நாயக்க துண்டித்த சம்பவத்துடன் ஏன் தொடர்புபடுத்திப் பார்க்க கூடாது என கேள்வியை கேட்பது நான் மாத்திரம் தானா? எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு துயர சம்பவங்கள் தொடர்பிலும் டிரம்பும் ராஜபக்ஷவும் செயற்பட்ட விதங்களின் தராதரத்தில் வித்தியாசம் காணப்படவில்லை. டிரம்ப் அவசியம் ஏற்பட்டால் கூட மன்னிப்பு வழங்காத ஒரு அரசியல்வாதி.
தராதரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்தும், நேர்மை மற்றும் ஒழுக்கநெறிகள் இன்மை குறித்தும், பொதுவாழ்க்கையின் சிதைவு குறித்தும் எங்களில் பலர் நிச்சயமாக புலம்புகின்றோம். எனினும், அவர்களுள் மிகக்குறைவானவர்களும் எதனையாவது செய்வதற்கு தயாராக உள்ளனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிதளவு புரிந்துணர்வும் இல்லாததே எனக்கு குறிப்பாக ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் ஆழ்ந்த கரிசனையையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை, இதுவே நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். கடந்த நாடாளுமன்றம் பல விடயங்களில் ஏமாற்றம் அளித்ததன் காரணமாக பொதுவான இழிவும் வெறுப்பும் காணப்படுகின்றது.
எனினும், நாங்கள் ஜனநாயகமாக தொடரவேண்டுமா? நாடாளுமன்ற ஜனநாயகம் வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கவேண்டும், தெளிவாகத் தீர்மானிக்கவேண்டும். மேலும் தெரிவிற்கான நடைமுறையை சுத்தம்செய்யவேண்டும். உண்மையான பிரதிநிதிக்கு வழிவகுக்கும் நியாயமான மற்றும் திறமையான ஆட்சி மற்றும் அரசாங்கத்திற்கு வழிவகுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் நாங்கள் ஜனரஞ்சகவாதிகளாக, பெரும்பான்மை மற்றும் சர்வாதிகாரமாக காணப்படுவோம். கடந்த கால மற்றும் நிகழ்கால இராணுவத்தின் களியாட்டங்கள் மாத்திரம் காணப்படும்.
முதலில் அடுத்த நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரத்தினை கட்டுப்படுத்தும் குறுக்கீடு செய்வதை கொண்டதாகக் காணப்படுவதை உறுதிசெய்வோம். அது தொடர்ந்து காணப்படுவதாகவும், எங்கள் அரசியல் கட்டமைப்பிற்குள் உறுதியாக உறுதிப்பட்டதாகவும் அது காணப்படுவதை உறுதிசெய்வோம்.
ஆரோக்கியமான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்கட்சியும், மாற்றுக் கருத்துகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் உயிர்ப்புடனும் விருத்தியடைவதாகவும் வைத்திருப்பதற்கான வலுவான எதிர்விவரணமும் அவசியம். மேலும் குறுக்கீடுகள் கட்டுப்பாடுகள் தொடர்பில் சில புதியனவும் காணப்படுகின்றன, அவற்றையும் அறிமுகப்படுத்தவேண்டும்.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
Government without Parliament and Government by the Military? என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.