பட மூலம், Aljazeera

பழைய காயங்கள். புதிய தெரு.
நடைபாதை இல்லை. குருவிகள் இல்லை.
வெய்யில் காலத்து அதிகாலை.போரில்  வெற்றியைக்  கொண்டாடும் நினைவிடம்.
அதன் மேல்
இரவிரவாக  உதிர்ந்த இலைகளைக்
கூட்டி ஒதுக்கும் படையாள்.
அவனுடைய  பெருங் கொட்டாவி.
உள்வாசலில் சிறுநீர்  பொழியும் இரு நாய்கள்.


சேரன்