பட மூலம், Selvaraja Rajasegar

2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான் விடயம் எம் காதுகளுக்கு எட்டியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புக்காக நாம் தயாராக இருந்தோம். அவ்வேளையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர யாப்பா திணைக்களத்தின் கீழ் தளத்தில் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பத்து முப்பது மணிக்கு கேட்போர் கூடத்துக்கு வருகை தரும் அமைச்சர் அன்றைய தினம் அமைச்சரவை ஊடக சந்திப்பிற்காக ஒரு தளத்தை ஏறி வருவதற்கு சுமார் 1 1/2 மணித்தியாளத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டார். அவர் வருகை தந்த உடனே எவரும் எதையும் கேட்பதற்கு முன்னதாகவே, எதையுமே நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

லசந்தவின் கொலையானது அரசாங்கத்தால் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு பாரதூரமான ஒரு சம்பவமாகியது. அனைவரும் திகைத்து நின்றனர். அனைவரது முகங்களிலும் பெரும் கவலையும் கோபமும் வெளியாகியது. ராஜபக்‌ஷ அரசாங்கமானது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததொரு இருண்ட யுகத்திற்கு நாட்டை தள்ளிவிடப்போகிறது என அனைவரினது முகங்களிலும் சொல்லாமல் சொன்ன கதையாக இருந்தது. பிரச்சினை என்னவெனில் லசந்த படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கழிந்தபோதும் அத்தீய உருவத்தின் இருள் சூழ்ந்த நிழல் இன்றும் சமூகத்தைச் சூழ்ந்து இருப்பதேயாகும். அந்த இழிநிலையில் இன்றும் சமூகம் தங்கியிருப்பதே. நாம் எவ்வளவு தூரம் ஆற்றலற்றவர்களாக, துஷ்டர்களாக, பின்தங்கியவர்களாக இருக்கின்றோம் என்றால் இன்றைய ஜனவரி 08ஆம் திகதியிலும் கூட நாம் இருப்பது லசந்த கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகிருந்த அதே காலகட்டத்தை ஒத்த இடத்திலாகும். 10 வருடங்கள் கழிந்துள்ள போதும் அந்தக் கொடூரமான கொலையின் உண்மையை வெளிக்கொண்டுவர முடியாத நிலை இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையாக அத்தீய செயலுக்கு எமது மனச்சாட்சியிடமிருந்து கூட மன்னிப்பு கிடைக்கமாட்டாது.

2009 ஜனவரி 08 காலை லசந்தவுடன் தொடர்பு கொண்டிருந்த ஐந்து தொலைபேசி இலக்கங்களை அடையாளம் காண்பதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த போதும், ஜேசுதாசன் என்பவருடைய அடையாள அட்டை இலக்கத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைப் பற்றிய விபரங்களை மட்டுமே அவர்களால் கண்டறிய முடிந்தது. அதுவும் ஜேசுதாசனை விசாரணை செய்த போதுதான். இராணுவ புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பியவன்ச என்பவர் தமது அடையாள அட்டை இலக்கத்தில் தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ததாக யேசுதாசன் அதன் போது தெரிவித்திருந்தார். பியவன்ஸ பற்றிய விசாரணையின் போது மருதானையின் திரிபொலிமார்கட் கட்டடத்தில் நடாத்திச் செல்லப்பட்ட விசேட புலனாய்வு செயற்பாட்டு பிரிவு தொடர்பான தகவல்கள் அறியக்கிடைத்துள்ளன. பியவன்ச என்ற நபர் அவ்விடத்தில் கடமை புரிந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜேசுதாசன் 2012இல் மரணமடைகின்றார். அதுவரையிலும் பியவன்சவிடம் வாக்குமூலமொன்றினைப் பெறுவதற்கு லசந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குழுவானது நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமையிலேயே நீதிமன்றமானது இவ் விசாரணை நடவடிக்கைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கட்டளை இட்டிருந்தது. அதுவும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறைவேறியது.

பியவன்சவிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கான தேவைப்பாடு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இருப்பதாக தெரிவித்தாலும் இராணுவம் அதற்கு இசைவான ஒத்துழைப்பினை வழங்கவில்லை. நீதிமன்றமானது மீண்டும் மீண்டும் கட்டளையிட்டதன் அடிப்படையில் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் இராணுவத்தினரால் பியவன்ச குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவர் மட்டுமல்லாது, உயர் அதிகாரிகள் இருவருடனேயே நிறுத்தப்பட்டார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தின் கிழக்கு பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய இராணுவ பிரதானி ஒருவரால் அது தொடர்பிலான தகவலொன்று வழங்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவலொன்று தமக்குக் கிடைத்துள்ளதாக இராணுவத்தின் உயர் அதிகாரியால் வினவப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததாக செய்திகள் இருந்தன. இராணுவ அதிகாரி இந்தத் தகவலை காலை 9.00 மணியளவில் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது. லசந்த படுகொலை செய்யப்பட்டது அன்று காலை 10.30 மணிக்கேயாகும். ஒன்றிணைந்த செயற்பாட்டு தலைமையகத்தில் இந்தத் தகவலைப் பெற்றுக் கொண்ட அதிகாரியால் லசந்த கொலை விசாரணை இடம்பெற்ற போது மேற்படி தகவல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் தெளிவுபடுத்தியதாகவும் அறியக் கிடைத்துள்ளது. ஆயினும், இந்த எந்தவொரு விடயத்தின் பின்னாலும் செல்லாத அல்லது சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை தவறவிட்டிருக்கும் ஒரு விசாரணையாகவே லசந்த படுகொலை விசாரணையானது இன்று காணப்படுகின்றது.

2016 செப். 27ஆம் திகதி லசந்தவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. முறையானதொரு நீதிமன்ற செயற்பாட்டுக்காகவே அது இடம்பெற்றது. லசந்தவின் உடலை விசாரணை செய்த வைத்தியர் மொஹான் சில்வாவின் அறிக்கையும், விக்ரமதுங்கவின் மரண விசாரணைக்குரிய அறிக்கையும், அரச பகுப்பாய்வு அறிக்கையும் ஒன்றுக்கொன்று முரணான விடயங்களையே சுட்டிக் காட்டின. இவ்வாறு சுட்டிக் காட்டிய வேறுபாடுகள் காரணமாகவே உடல் மீண்டும் விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு மரண விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றின் முன்னிலையில் விடயங்களை தெரிவித்திருந்தனர். லசந்தவை கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதமானது வெளிநாடுகளில் பன்றிகளையும் ஆடுகளையும் அறுப்பதற்காக பயன்படுத்தும் ஆயுதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லசந்தவின் கழுத்துப் பகுதியில் கூரிய வெட்டுக் காயம் ஒன்று காணக்கூடியதாக இருந்தமை அவ் விசேட ஆயுதத்தால் தாக்கியமையினால் ஆகும்.

ஆயினும், இவ் அனைத்தினதும் இறுதியில் லசந்தவின் படுகொலையானது கொலையாளி இல்லாத ஒரு கொலையாகவே காணப்படுகின்றது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதியினது இராணுவப் போற்றல் கூட அதற்கு காரணமாக அமைந்தது. லசந்தவின் படுகொலையானது தற்போது பத்திரிகையில் மாத்திரம் எழுதப்படுகின்ற, எப்போதாவது அரசியல்வாதிகள் ஓரிருவரால் மீண்டும் உச்சரிக்கப்படுகின்ற வசனம் மாத்திரமேயாகும். இக்கொலை இடம்பெறுகின்ற போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டபாய ராஜபக்‌ஷவாகும். சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவிருந்தார். இவ்விருவரிடமும் இன்றுவரையில் லசந்தவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. நல்லாட்சி அரசானது லசந்தவின் உயிரில்லா உடலின் மீதேறியே உருவாக்கம் பெற்றது. லசந்தவின் எழும்புக் கூட்டைக் கூட சிறிது காலம் அரசியல் தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தற்போது மைத்ரிபால சிறிசேன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரையிலான எவரும் லசந்த பற்றி வாய் திறப்பதே இல்லை.

ஜனவரி 08ஆம் திகதி காலை பொரளை மயானத்திற்கு லசந்தவை நினைவுகூருவதற்காக வருகைதரும் பிரபல்யமான சிலர் உள்ளனர். ரவி கருணாநாயக்க அவர்களுள் ஒருவர். லசந்தவின் படுகொலை தொடர்பில் துளியளவேணும் ரவி இதுவரையில் செய்யவில்லை. ரவி கருணாநாயக்க ஒன்றை மட்டும் செய்தார். 2015 ஜனவரி 08இற்கு பிறகு லசந்தவின் தலைமையில் செயற்பட்ட பத்திரிகை இரண்டையும் லாவகமாக தம்வசப்படுத்திக் கொண்டதை மட்டுமே செய்தார். அவர் இரு பத்திரிகைகளினதும் சட்டரீதியற்ற உரித்துடையோன் ஆனார். நல்லாட்சி அரசும் லசந்த படுகொலை விசாரணையை தளர்த்தி விடுகின்றபோது லசந்தவைப் பற்றியதொரு செய்தியை வெளியிடுவதற்கு ரவி தரப்பைச் சார்ந்த இரு பத்திரிகைகளினதும் முகாமையாளர்கள் இடமளிக்கவில்லை. மிகக் கடினமான சூழலில் இந்தச் செய்தியினை பிரசுரித்தது ஆசிரிய குழுவின் பெரும் தேவையின் அடிப்படையிலாகும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 08ஆம் திகதி லசந்தவை நினைவு கூறுவதற்கு பொரளை மயானத்திற்கு வருகைதரும் நண்பர் ரவி கருணாநாயக்க லசந்தவிற்காக அர்ப்பணித்தது இவ்வாறுதான்.

லசந்த ஓர் ஊடகவியலாளராக மிகவும் கடினமான செயற்பாட்டினை மேற்கொண்ட முழுமையான ஒரு தொழில்வாதியாவார். அவருக்குச் செய்திகளை தேடிச் செல்வதில் நித்திரையின்றிய, களைப்பின்றிய கண்களும் தேகமும் பலமாக அமைந்தன. லசந்தவிற்கு என்னவகையிலான அநீதிகள் இடம்பெற்றாலும் அவர் ஊடகத்துறைக்காக அர்ப்பணிப்பு செய்த பணி என்றென்றும் முன்மாதியான ஒரு விடயமாக சதாகாலம் நிலைத்திருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 “දස වසරකට පෙර උදුරා දැමුණු නිදි නැති ඇස ලසන්ත” என்ற தலைப்பில் விமலநாத் வீர ரத்ன எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்