மாற்றுப் பாலினத்தவர்களை மனித உரிமைகள் கொண்ட ஒரு சமூகமாக இலங்கையின் சட்டத்துறை மற்றும் கலாசாரம் அணுகுவதில்லை. இது இலங்கையின் மனித உரிமையைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவாலை ஏற்படுத்தும். இந்தச் சவாலை நிவர்த்திச் செய்வதற்கு சில பரிந்துரைகளை எங்களால் வழங்க முடியும் என்கிறார் மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் வரதாஸ் தியாகராஜா.

அண்மையில் ஒரு பாடசாலையில் LGBTIQ கொடியொன்றை மாணவியொருவர் கொண்டுசென்றமையாலும், தனது பாலடையாளத்தை வெளிப்படுத்தியமையாலும் பாடசாலை அதிபரின் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார். இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்நோக்கிவரும் வன்முறை மற்றும் பாகுபாடான செயற்பாடுகளுள் இதுவொன்றாகும் என்றும் வரதாஸ் தியாகராஜா குறிப்பிடுகிறார்.

1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 58 நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கி டிசம்பர் 10ஆம் திகதியோடு 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், இன்றும் சமத்துவமில்லாமல், சுதந்திரமில்லாமல், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வரதாஸ் தியாகராஜாவின் நேர்க்காணலை நாம் கீழே தந்திருக்கிறோம்.


70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வௌியாகும் கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.