பட மூலம், Medico
இந்த அரசியல் யாப்பு யாருடையது என்று என்னுடன் களத்தில் பணியாற்றுபவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. குறித்த ஒரு பெரும்பான்மை சமூகத்தை மட்டும் உள்வாங்கியதாகவும் சிறுபான்மை மக்களை இரண்டாம் தரமாகவும் குறிப்பிட்ட சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு யாப்பாகவுமே எமது நாட்டின் அரசியலமைப்பு இருக்கிறது. ஆகவே, எந்த நாட்டின் யாப்புக்காக, ஏன் நாங்கள் போராடவேண்டும் என்ற நிலை காணப்படுகிறது என்கிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஷ்ரீன் சரூர்.
இலங்கையின் அரசியலமைப்பில் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் அடிப்படை உரிமையாக உள்வாங்கப்படவில்லை. அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், காணியை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்களுக்கு அரசியலமைப்பின் மூலம் தீர்வு வழங்கப்படாத பட்சத்தில் எமது நாட்டில் ஜனநாயகத்தை எவ்வாறு நிலைநாட்ட முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ஷ்ரீன் சரூர்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 58 நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கி டிசம்பர் 10ஆம் திகதியோடு 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், இன்றும் சமத்துவமில்லாமல், சுதந்திரமில்லாமல், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஷெரின் சரூருடனான நேர்க்காணலை நாம் கீழே தந்திருக்கிறோம்.
70ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வௌியாகும் கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.