பட மூலம், Anidda Cartoon

ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அல்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும் அந்தப் போதைப் பொருள் பூமியிலிருந்து கிடைத்துவிடவில்லை. போதைப் பொருள் கன்ரேனர்கள் தோன்றியதும், தோன்றுவதும் பூமியிலிருந்தல்ல.

போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவது துறைமுகத்தினூடாக. அல்லது விமான நிலையம் ஊடாக அல்லது கடல்மார்க்கமாக.

அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு துறைமுக பொலிஸ், விமான நிலைய பொலிஸ், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பொலிஸ், முப்படைகள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பக் கருவிகளும் இருக்கின்றன. நாட்டிற்குள் போதைப் பொருட்கள் கொண்டுவருவதை மற்றும் சிறைச்சாலையினுள் மொபைல் போன்கள் எடுத்துச் செல்வதை தடுத்துநிறுத்தாமல் – அரச பயங்கரவாதத்தை, அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தாமல் – சட்டத்தின் ஆட்சியை, சிவில் பாதுகாப்பை அமுல்படுத்தாமல் மரணதண்டனை நிறைவேற்ற தீர்மானம் எடுத்திருப்பது மூல பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் விளைவுகளுக்கு தீர்வு காண்பது போலாகும்.

மக்களுடைய வரிப்பணத்தைக் கொண்டே இவையெல்லாம் நிறைவேற்றப்படுகிறது. சட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த நீதிமன்றங்களை ஏற்படுத்தி நடத்திச்செல்வது நாட்டு மக்களுடைய இறையாண்மை பலத்தைக் கொண்டேயாகும்.

கிலோ கணக்கில் போதைப் பொருட்களைக் கொண்டுவரும் கோடீஸ்வரர்கள் மாளிகைகளில் இருக்கும்போது, சிலவேளைகளில் மக்களுடைய பணத்தால் நடாத்தப்படும் நாடாளுமன்றில் இருக்கும் போது, 2 கிராம் போதைப் பொருளைக் கொண்டு சென்று காது துப்பரவு செய்யும் கரண்டியளவுக்கு விநியோகம் செய்தது அல்லது அருந்தியதற்குப் பின்னால் சமூக பொருளாதார பிரச்சினை காணப்படலாம். அதேபோன்று சரியான கல்வி, சமூகப் பாதுகாப்பு, பெற்றோரின் அன்பு கிடைக்காத அல்லது எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்களே அந்த மக்கள்.

அவர்களை நாங்களே உருவாக்கி, நாங்களே அவர்களுடைய வழக்குகளையும் விசாரித்து, நாங்களே அவர்களை சிறைச்சாலையினுள் நிர்வகித்து, அவர்களைப் பார்த்துக்கொள்ள நாங்களே சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு வரி செலுத்தி, நாங்களே அவர்களை தூக்கிலிட்டுவிட்டு, அவர்களுக்கு கிலோ கணக்கில் போதைப் பொருட்களைக் கொண்டுவந்தவர்களை ஆட்சிபீடமேற்றுவோமாக இருந்தால் எங்களுடைய கல்வி, சமூகம், எங்களுடைய ஒழுக்கம், கோட்பாடு, சிந்திக்கும் ஆற்றல், அறிவு, சுருக்கமாகச் சொன்னால் எங்களுடைய மனிதாபிமானத்தைப் புதைத்துவிட்டு கடலில் குதித்து சாவது பொருத்தமாக இருக்கும்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் மிலேச்சத்தனமான நாடாக இன்னும் இந்த நாட்டைக் காட்டுவதற்கு முன்பு நாடாளுமன்றில் உள்ள உங்கள் இருவருடைய அமைச்சரவையும், பழைய – புதிய திருடர்களும், குற்றவாளிகளும் என எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கடலில் குதிப்பது சிறப்பாக இருக்கும்.

இவற்றைப் புரிந்துகொள்ளாமல், நாட்டு மக்களின் – நீதியின் நியாயத்தின் பக்கம் நிற்காமல், அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் வெட்டினால் பச்சை, நீலம், சிவப்பு என்று கூறும், மஹிந்த, ரணில், மைத்திரிபால, அனுரவின் பின்னால் செல்லும் மக்கள் இருப்பார்களேயானால் அவர்கள் இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு ஏலியன்கள் வரும்வரை காத்திருப்பதே சிறந்ததாகும்.

கசுன் புஸ்ஸவெல