பட மூலம், Adam Deans, The New York Times

ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது என கூறியுள்ளது. ஆம், இந்தியா போன்று அடிக்கடி கடன் வழங்குவோர் மறுத்திருந்தனர். ராஜபக்‌ஷவின் கீழ் இலங்கையின் கடன் துரிதமாக ஊதிப் பெருத்தது.

சைனா ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியுடன் நிர்மாணம் மற்றும் மீள் பேச்சுவார்த்தை வருடக்கணக்காக மேற்கொண்டதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் சீன அரசுக்குச் சொந்தமான பாரிய நிறுவனங்களில் ஒன்றான இந்தக் கம்பனி அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொண்டிருந்தது. ஆயினும், எதிர்வு கூறப்பட்டதன் பிரகாரம் அது தோல்வி கண்டிருந்தது. உலகின் மிக சுறுசுறுப்பான கப்பல் போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றான இப்பாதையில் பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் கடந்து செல்கின்றன. ஆயினும், 2012 இல் 34 கப்பல்கள் மட்டுமே இத்துறைமுகத்திற்கு வந்துள்ளன.

அதன் பின்னர் துறைமுகம் சீனாவினுடையதாகியது.

2015 இல் ராஜபக்‌ஷ தேர்தலில் தோல்வி கண்டார். ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கம் கடனைச் செலுத்துவதற்குத் திண்டாடியது. அவர் எடுத்த கடன்களை புதிய அரசாங்கத்தால் செலுத்த முடியாமல் இருந்தது. கடுமையான அழுத்தத்தின் கீழ் சீனர்களுடன் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து துறைமுகத்தையும் 15,000 ஏக்கர் காணியையும் 99 வருடங்களுக்கு அரசாங்கம் கடந்த டிசம்பரில் வழங்கியுள்ளது.

இந்தியாவின் கரைகளுக்கு சிலநூறு மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள பகுதி அதன் போட்டியாளரான சீனாவின் கட்டுப்பாட்டிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கேந்திரோபாயமான தடமாகவும் அத்துடன் முக்கியமான வர்த்தக, இராணுவ ரீதியான பாதையாகவும் அது அமைந்திருக்கிறது. சீனாவின் ஆர்வத்துடன் கூடிய கடனைப் பயன்படுத்துதல் மற்றும் செல்வாக்கைச் செலுத்துவதற்கான உதவியை கொண்டிருத்தல் உலகளாவிய ரீதியில் இடம்பெறுவதற்கான உதாரணங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கின்றது.

உலக நாடுகளில் சீனா நிர்மாணித்துவரும் துறைமுகங்கள்

கடன் உடன்படிக்கை தீவிரமடைந்ததுடன், ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கின் “ஒரே மண்டலம் ஒரே பாதை” முன்முயற்சியானது, சர்வதேச முதலீடு மற்றும் உலகளாவிய ரீதியில் நலிந்த நிலையிலுள்ள நாடுகளை கடன்பொறியில் அகப்படுத்தும் கடன்வழங்கும் திட்டமென்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சில காணப்படுகின்றன. இது ஊழலையும் ஏதேச்சாதிகார தன்மையையும் ஜனநாயகங்களுக்கு அதிகரிக்கச் செய்வதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர், இந்தியர், சீனர் மற்றும் மேற்குலக அதிகாரிகள் ஆகியோருடன் பல மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட பேட்டிகள், ஆவணங்களின் ஆய்வுகள், துறைமுகத் திட்டம் தொடக்கம், எவ்வாறு சீனாவும் அதன் கீழுள்ள கம்பனிகளும் தமது நலன்களை நிதிக்கான பெரும் பசியுடன் இருக்கும் சிறிய நாடொன்றில் உறுதிப்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

* 2015 இலங்கைத் தேர்தலின் போது, சீனத் துறைமுக நிர்மாண நிதியிலிருந்தும் பாரிய கொடுப்பனவுகள் நேரடியாக பிரசார உதவி மற்றும் செயற்பாடுகளுக்காக ராஜபக்‌ஷவுக்குச் சென்றிருந்தன. அவர் சீனாவின் நிபந்தனைகளை ஏற்றிருந்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சீனாவின் முயற்சிகளை முக்கியமான நேச அணியாக அவரின் ஆட்சிக்காலத்தில் நோக்கப்பட்டது. தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கிலிருந்தும் சரிவுத்தன்மையேற்பட்டது. கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டதை ஆவணங்களும் காசோலைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் விபரமான விசாரணைகள் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை நியூயோர்க் ரைம்ஸ் பார்த்துள்ளது.

* அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியானதென சீன அதிகாரிகளும் ஆய்வாளர்களும் வலியுறுத்திக் கூறியிருக்கின்ற போதிலும், ஆரம்பத்திலிருந்தே புலனாய்வு மற்றும் கேந்திரோபாய சாத்தியப்பாடுகள் அதாவது துறைமுகத்தின் அமைவிடம் தொடர்பான சாத்தியப்பாடுகள் பேச்சுவார்த்தையின் அங்கமாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* துறைமுகத்திட்டம் தொடர்பான கடனுக்கான ஆரம்ப விதிமுறைகள் மிதமான தன்மையைக் கொண்டிருந்த போதிலும், அது பின்னர் அதிகளவு கடுமையானதாக உருவாகியது. மீளப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கால எல்லையை இலங்கை அதிகாரிகள் கேட்டிருந்தனர். அத்துடன், மேலதிக நிதியை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது. இலங்கை அதிகாரிகள் அண்மைக்காலமாக கடன் சுமையிலிருந்து விடுபடுவது விரக்தியானதாக உருவாகியுள்ளது. சீனர்களின் வலியுறுத்தல் எந்தவொரு இலகுவான விதிமுறைகளிலும் பார்க்க, துறைமுகத்தின் பங்குகளை பெற்றுக்கொள்வதையே மையப்படுத்தியதாக இருந்தது.

* துறைமுகத் திட்டத்திற்கு ஒரு பில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையிலிருந்தும் அளிக்கப்பட்டிருந்த போதிலும், இப்போது இலங்கை சீனாவிற்கு முன்னரிலும் பார்க்க அதிகளவுக்கு கடன்பட்டிருக்கிறது. அத்துடன், ஏனைய கடன்களும் தொடர்கின்றன. ஏனைய சர்வதேச கடன் வழங்குவோரிலும் பார்க்க வட்டி வீதமும் தொடர்ந்தும் உயர் மட்டத்திலிருந்து வருகிறது. கருத்தை அறிந்துகொள்வதற்காக பல தடவைகள் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ராஜபக்‌ஷவும் அவரின் உதவியாளர்களும் பதிலளித்திருக்கவில்லை. சீன துறைமுக அதிகாரிகளும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இலங்கை நிதியமைச்சின் கணிப்பீடுகள் எதிர்மறையான பிரதிமையை கொடுக்கின்றன. இந்த வருடம் அரசாங்கம் 14.8 பில்லியனை வருவாயாகப் பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கின்றது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் அத்தொகை 12.3 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது. நாடொன்றை வாள் மூலம் அல்லது கடன் மூலம் அடக்குவதற்கான வழியென ஜோன் அடம்ஸ் ஒரு தடவை கூறியிருந்தார். சீனா 2ஆவதையே தெரிவு செய்திருக்கின்றது என்று இந்திய அரசாங்கத்திற்கு அடிக்கடி ஆலோசனை வழங்குபவரும் ஆய்வாளருமான பிரம்மா செலானி தெரிவித்திருக்கிறார். புதுடில்லியிலுள்ள புத்திஜீவிகள் அமைப்பான கொள்கை ஆராய்ச்சிக்கான நிலையத்துடன் அவர் செயற்படுபவர்.

குறிப்பாக இந்திய அதிகாரிகள் இலங்கை சீனாவின் கடன் கொடுப்பனவிற்காக திண்டாடிக் கொண்டிருப்பதாகக் கருதுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற சொத்துக்கள் சீனாவின் இராணுவ பாவனைக்கான பரிவர்த்தனையாக கடன் நிவாரணம் மாற்றப்படக்கூடுமென்ற அச்சமும் காணப்படுகின்றது. இலங்கை அழைக்காமல் இராணுவ செயற்பாடு தடுக்கப்படுவதாக இறுதிக் குத்தகை உடன்படிக்கையில் காணப்பட்ட போதிலும், இந்த அச்சம் காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டிலிருந்தே அம்பாந்தோட்டையில் முதலீட்டை நியாயப்படுத்துவதற்கான ஒரேயொரு வழியாகவுள்ளது. அவர்கள் மக்கள் விடுதலை இராணுவத்தைக் கொண்டு வருவார்கள் என்று இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக பணியாற்றிய சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறார். மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர். அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் அவர் இப்பதவியை வகித்திருந்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நீண்டகாலத்தைக் கொண்டது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கம்யூனிச அரசாங்கத்தை இலங்கை ஆரம்ப காலகட்டத்திலே அங்கீகரித்திருந்தது. ஆனால், அண்மையில் முடிவுக்கு வந்திருந்த இலங்கையின் நீண்டகால உள்நாட்டு யுத்த காலத்தில் சீனா விட்டு விலக முடியாத நேச அணியாக உருவாகியிருந்தது. 2005 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த ராஜபக்‌ஷ யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில் தலைமை தாங்கியிருந்ததுடன், மனித உரிமை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் அதிகளவுக்கு இலங்கை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அக்காலத்தில் விளங்கியது. ராஜபக்‌ஷவின் கீழ் இலங்கை அதிகளவுக்கு சீனாவின் பொருளாதார ஆதரவிலும் இராணுவ தளபாடங்கள் மற்றும் ஐ.நாவில் அரசியல் ரீதியான அதாவது தடைகளுக்கான சாத்தியத்தைத் தடுத்தல் போன்ற அரசியல் ரீதியான அனுகூலங்களையும் இலங்கை பெற்றிருந்தது.

2009 இல் யுத்தம் முடிவடைந்து அழிவிலிருந்தும் நாடு மேலெழுந்த போது, ராஜபக்‌ஷவும் அவரின் குடும்பமும் தமது பிடியை இறுக்கிக்கொண்டனர். ராஜபக்‌ஷவின் பதவிக்காலத்தின் உச்சகட்டத்தில் ஜனாதிபதியும் அவரது மூன்று சகோதரர்களும் அரசாங்கத்தில் பல அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தனர். அரசாங்கத்தின் மொத்த செலவீனத்தில் 80% அவர்களின் அமைச்சின் கீழேயே இருந்தன. சீனா போன்ற அரசாங்கங்கள் நேரடியாக அவர்களுடனேயே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுக அமைப்புத் திட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தபோது அவரது சொந்த மாவட்டமான அந்தப் பகுதியில் ஒரு சில வீதிகளே காணப்பட்டன. 2 ஆவது பாரிய துறைமுகத்திற்கான புத்திசாலித்தனம் குறித்து ஆரம்பத்தில் அதிகாரிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். பிரிட்டனிலும் பார்க்க காவாசி பருமனுள்ளதும், 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதுமான இலங்கையின் பிரதான துறைமுகம் தலைநகரத்திலிருக்கின்றது. இதுவே அம்பாந்தோட்டையில் துறைமுகமொன்றை கொண்டிருப்பது பொருளாதார ரீதியில் அனுகூலமானதல்ல என்ற கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“அவர்கள் எம்மை முதலில் துறைமுகத்திற்காக அணுகினர். இந்தியக் கம்பனிகள் வேண்டாமென மறுத்திருந்தன” என்று முன்னாள் இந்திய வெளிவிவகார செயலாளர் மேனன் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் மந்தமானதொன்றாக அப்போது இருந்தது. இப்போதும் பொருளாதார ரீதியில் மந்தமானதாகவே இருக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால், ராஜபக்‌ஷ அத்திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருந்தார். அதன் பின்னர் சீனாவுக்கு அத்திட்டம் வழங்கப்பட்டது.

சீன அரசாங்கத்தின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி அல்லது எக்சிம் வங்கியிடமிருந்து 307 மில்லியன் டொலர் முதலில் பெறப்பட்டது. ஆனால், அக்கடனைப் பெறுவதற்கு பெய்ஜிங்கிடம் முன்னுரிமையளிக்கப்பட்ட கம்பனியான ‘சைனா ஹாபரை’ துறைமுகத்தை நிர்மாணிப்பவராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரப்பட்டது. விக்கிலீக்ஸூக்கு கசிந்திருந்த அமெரிக்க தூதரகத்தின் கேபிள் மூலம் இது வெளிவந்திருந்தது.

உலகளாவிய ரீதியில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக கேள்விகள் காணப்படுகின்றன. திறந்த கேள்வி மனுக்கோரல் நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதிலும் பார்க்க சீன அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிராந்தியம் பூராகவும் சீன அரசாங்கம் பல பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. சீனக் கம்பனிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மற்றும் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவது என்பனவும் முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்களாகக் காணப்படுகின்றன.

இலங்கையின் 2015 தேர்தல் கால இறுதி மாதங்களின் போது, சீனத் தூதுவர் இராஜதந்திர விதிமுறைகளை மீறி வாக்காளர்களிடம் பேசியுள்ளார். ஜனவரி தேர்தல் நெருங்கி வந்தபோது, அதிகக் கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் வட்டாரத்தை நோக்கி வருவதற்கு ஆரம்பித்திருந்தன. சைனா ஹாபரின் கணக்கிலிருந்து ராஜபக்‌ஷவின் பிரசாரத்துடன் தொடர்புபட்ட கணக்கிற்கு 7.6 மில்லியன் டொலர் சேர்க்கப்பட்டதாக ஆவணம் தெரிவிக்கின்றது. அதனை த ரைம்ஸ் பார்த்திருக்கின்றது. அந்த ஆவணம் சைனா ஹாபரின் வங்கிக் கணக்கு இலக்கத்தை விபரமாகக் கொண்டிருக்கின்றது. அந்த கணக்கின் உரிமையாளர் தொடர்பாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் சுமார் 3.7 மில்லியன் டொலர் காசோலையாக வழங்கப்பட்டிருக்கின்றது. ரிசேர்ட் பிரசாரத்திற்கு 6,78,000 டொலரும் ஆதரவாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க பெண்களின் சேலைகள் உட்பட வெகுமதிகளுக்கு 2,97,000 டொலரும் வழங்கப்பட்டது. மற்றொரு 38,000 டொலர் பிரபல்யமான பௌத்த பிக்கு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் ராஜபக்‌ஷவின் தேர்தலுக்கு ஆதரவளித்தவர். அதேவேளை, மொத்தம் 1.7 மில்லியன் டொலர் இரு காசோலைகள் தொண்டர்களினால் அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அனேகமான கொடுப்பனவுகள் சைனா ஹாபரின் கட்டுப்பாட்டில் இருந்து உப கணக்கிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. “எச்.பி.டி.பி. ஸ்பேஸ் 2” (HPDP Phase 2) என்று அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேந்திர ரீதியான கவலைகள்

இலங்கையின் பிரதான துறைமுகத்திலும் சீனா உரிமையைக் கொண்டிருக்கின்றது. புதிய இறங்குதுறையொன்றை சைனா ஹாபர் நிர்மாணிக்கின்றது. கொழும்புத் துறைமுக நகரமென அது அறியப்பட்டதாகும். அதனுடன் சுமார் 50 ஏக்கர் காணியை சீனக் கம்பனியொன்று தன்வசம் கொண்டிருக்கின்றது. அதில் இலங்கை இறைமையைக் கொண்டிருக்கவில்லை. 2014 இல் ராஜபக்‌ஷவின் பதவிக்காலத்தின் இறுதியின் போது அந்தவிடயம் வெளிப்படுத்தப்பட்டது. ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கொழும்புக்கு வருகைதந்த தினமன்று சீன நீர்மூழ்கிகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தன. இதனை பெய்ஜிங்கிடமிருந்து விடுக்கப்பட்ட சமிக்ஞையாக பிராந்தியத்தில் நோக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, சீன நீர்மூழ்கிகள் மீண்டும் வரமாட்டாது என்ற உறுதிமொழி நாடப்பட்டது. குறிப்பாக அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமான விடயமாக இருப்பதும் புலனாய்வு விடயங்களை சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதுமே கவலைக்கான காரணமாகும். ஆனால், இலங்கை அதிகாரிகள் அதில் உண்மையான கட்டுப்பாட்டை சிறிதளவே கொண்டுள்ளனர்.

இப்போது, அம்பாந்தோட்டை சீனர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயன்பாட்டிற்கான சாத்தியப்பாட்டுக் கவலைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனா தென்சீனக் கடலை சூழவுள்ள பகுதிகளில் இராணுவ நிலைகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது. அரசாங்கம் சீனாவின் இராணுவ பயன்பாட்டை நிராகரித்திருப்பதாக இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்ற போதிலும், சீனாவிடம் பெருந்தொகை கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கம் அழுத்தத்தினால் அதற்கு (இராணுவ பயன்பாட்டிற்கு) அனுமதிக்க நேரிடுமென்று கூறுகின்றனர்.

இதேவேளை, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் டி.சில்வா கூறுகையில், அரசாங்கங்கள் மாற்றமடைய முடியுமென்று தெரிவித்திருக்கிறார்.

இப்போது அவரும் ஏனையவர்களும் இலங்கையிலுள்ள சீனாவின் முன்னுரிமையளிக்கப்பட்ட பங்காளியான ராஜபக்‌ஷ அரசியல் ரீதியில் மீள் வருகைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதை மிகக் கவனமான முறையில் அவதானிக்கின்றனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் புதிய கட்சி பாரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றது. அடுத்தாண்டு ஜனாதிபதித் தேர்தலும் அதன் பின்னர் பொதுத்தேர்தலும் இடம்பெறவிருக்கின்றன. பதவிக்காலத்தை வரையறைப்படுத்தியிருப்பதால் ராஜபக்‌ஷ திரும்பப் போட்டியிடுவது தடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவரது சகோதரரான கோட்டபாய ராஜபக்‌ஷ தயாராகி வருவதாகத் தென்படுகிறது.’

இது மஹிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பு. சகோதரர்களில் ஒருவரென அவர் கூறுவாராயின் அது மிகவும் வலுவானதாக இருக்குமென்று ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக விளங்கிய அஜித் நிமால் கப்ரால் கூறியுள்ளார். அவர் இப்போதும் குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குகிறார். “அவர் ஜனாதிபதியாக இல்லாத போதிலும் கூட அரசியலமைப்பு கட்டமைப்பு ரீதியாக இருக்காத போதிலும் மஹிந்தவே பிரதான அதிகாரத்தளமாக இருப்பார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மரியா அபி ஹபீப் எழுதி “நியூயோர்க் ரைம்ஸ்” தளத்தில் How China Got Sri Lanka to Cough Up a Port” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு. நன்றி: தினக்குரல்.