முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற பால்நிலை சமத்துவமற்ற குறைபாடுகளைக் கொண்டிருக்கும் இச்சட்டம் திருத்தப்படவேண்டும் என்பதில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னின்று செயற்பட்டுவருகிறார்கள்.

இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டத்திருத்த விடயத்தில் தீவிரமாக செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை.

அதேபோன்று 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஆறு மாதங்களுக்குள் குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்க வேண்டியிருந்த போதிலும், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஜனவரி 22ஆம் திகதி அறிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்துள்ளது. எனினும், இதுவரை குறிப்பிட்ட அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத போதிலும் எமது சகோதர தளமான கிரவுண்விவ்ஸ் நம்பகத்தன்மை மிக்க தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை வெளியிட்டது. அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

அறிக்கையில் சில சாதகமான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்தும் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகம் போராடிவரும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

###

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்களை ஏற்கனவே ‘மாற்றம்’ நேர்க்காணல் கண்டிருந்தது. “நீதியைத் தேடும் பெண்கள்” என்ற தலைப்பில் வெளியான 11 நேர்க்காணல்களின் தொடர்ச்சியாக இன்று 12ஆவது நேர்க்காணல் வெளியாகிறது.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 12345678910, 11