முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே ஆறு நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஏழாவது நேர்க்காணலை வெளியிடுகிறது.
###
இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில் வலுத்துவருகிறது. அரசியலமைப்பின் 16ஆவது அத்தியாயம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் கொண்ட ஒரு சட்ட ஏற்பாடாகக் கருதப்படுவதால் அது நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை, சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி போராடிவருபவர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாயத்தால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு மறுக்கப்படுகின்ற சமத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கிறது.
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 1, 2, 3, 4, 5, 6