படம் | Selvaraja Rajasegar, MAATRAM FLICKR
“போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் இல் வெளியிடப்பட்டது).
###
சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றியமை எனக்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஏனெனில் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. காணாமல்போகச் செய்தல்களுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பங்கள் எப்பொழுதுமே மையமாக விளங்கியதுடன், தொடர்ந்துமே மையமாக விளங்கும். அவர்கள் தொடர்ந்துமே எனது ஆரம்பநிலையிலான உந்துசக்தியாக விளங்குவார்கள். அனேகமாக நான் அடிக்கடி கைவிட வேண்டும் என உணர்ந்தபோது கூட என்னால் அதைக் கைவிட முடியவில்லை என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.
சூழமைவு
இரு வருடங்களுக்கு முன்னர், வண. பிரவீன் என்ற இன்னொரு நண்பருடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் இருந்தேன். காணாமல்போகச் செய்யப்பட்ட மகன் ஒருவரின் தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரியினதும் (காணாமல்போகச் செய்யப்பட்டோருக்கு உண்மையையும், நீதியையும் நாடும் செயற்பாட்டாளர்) வடக்கில் வேறு தமிழர்களின் கைதுகள் குறித்து போராடியதற்காகவும் நாம் தடுத்து வைப்பதற்குக் கிட்டிய காரணமாக இருந்திருக்கலாம். “நல்லாட்சி” அமைக்கப்பட்டு ஒரு வருடத்தின் பினனர் ஜெயகுமாரியும், வண. பிரவீனும், நானும் இன்னுமே பங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றோம்.
“பயங்கரவாத சந்தேகநபர்” ஒருவராக இன்னும் இருக்கின்றபோதும், அத்துடன் எனது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நீதிமன்ற உத்தரவொன்று உள்ள போதும், அரசாங்கத்தின் பலதரப்பட்ட கூட்டங்களுக்கும், நிலைமாறுகால நீதி தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவொன்றின் அங்கமொன்றாக இருப்பதற்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு மாதங்களின் பின்னர் நிபந்தனையின் பேரில் ஜெயக்குமாரி விடுவிக்கப்பட்ட போதிலும், “நல்லாட்சியின்” கீழ் கடந்த வருடம் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாக பாரதூரமான சமூக தனிமைப்படுத்தலுக்கும், வாழ்வாதாரத்தைக் கண்டறிவதற்குமான போராட்டங்களுக்கு அவர் முகங்கொடுப்பதுடன், விடுதியொன்றில் தனது இளம் மகளை வைத்திருப்பதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரது காணாமல்போகச்செய்யப்பட்ட மகன் பற்றி இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அரசாங்கப் புனர்வாழ்வு முகாமொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் தனது மகன் இருப்பதாக ஜெயக்குமாரி குறிப்பிடுகின்றார்.
2011 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான இரு செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிட்டவில்லை.
ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் நாம் அனுபவித்த தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் போன்று காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும் தற்போது முகங்கொடுப்பதில்லை. ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போகச்செய்யப்பட்டோரினதும், செயற்பாட்டாளர்களினதும் குடும்பங்களைக் கண்காணிப்பது தொடர்கின்றது. கடந்த காலத்தில் நாம் முகங்கொடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுள்ளது.
இச் சூழமைவிலேயே காணாமல்போகச்செய்யப்பட்டோர், அரசாங்கத்தின் நிலைமாறுகால நீதியின் வாக்குறுதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் வகிபங்கு ஆகியன பற்றி நான் பேசுகின்றேன்.
காணாமல்போகச்செய்தல்களின் சூழமைவில் நிலைமாற்று நீதியின் வாக்குறுதிகள்
உண்மை, குற்றவியல் நீதி (வழக்குத் தொடுத்தல்/ தண்டனை வழங்குதல்), இழப்பீடுகள் மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. மேற்கூறிய நான்கு அம்சங்களும் காணாமல்போகச்செய்யப்பட்டோரது குடும்பங்களின் உரிமைகளாகும்.
நிலைமாறுகால நீதி தொடர்பான குறிப்பாக நான்கு நிறுவனங்களை அமைப்பதற்கான அர்ப்பணிப்பினை அரசாங்கம் கொண்டிருப்பதுடன், இந்நிறுவனங்களை அமைப்பது தொடர்பில் நாடுபூராவும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக செயலணியொன்றையும் நியமித்துள்ளது. காணாமல்போகச்செய்தல்கள் மீது தனியாக ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிறுவனமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகம் திகழும். இலங்கையில் காணாமல்போகச் செய்தல்களின் தன்மையை புரிந்துகொண்டால் ஏனைய மூன்று முன்மொழியப்பட்டுள்ள பொறிமுறைகள் (உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு, நீதித்துறைப் பொறிமுறை மற்றும் இழப்பீடுகளின் அலுவலகம்) அனேகமாக சம்பந்தப்பட்டதாக இருக்கும். காணாமல்போகச் செய்தல்களைக் குற்றவியலாக்குவதற்கு அரசாங்கத்தினாலான அர்ப்பணிப்புகள், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தை இலங்கையில் வலுவாக்கம் பெறச் செய்தல், “காணாமற்போனோர் காணவில்லை” என உத்தியோகபூர்வமாக சான்றுப்பத்திரங்களை வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன காணாமல்போகச்செய்தல் தொடர்பில் அரசாங்கத்தின் ஏனைய முக்கியமான நிலைமாற்றுகால நீதி தொடர்பான வாக்குறுதிகளாகும்.
நிலைமாறுகால நீதியின் வாக்குறுதிகளிள், நிலைமாறு கால நீதியின் அணுகுமுறை மீது நாம் எமது கவனத்தைக் குவிமையப்படுத்திக் கொண்டிருக்கையில், முன்னைய அநீதிகளையும் மற்றும் வர்க்கம், சாதி, பால்நிலை போன்ற யுத்தத்திற்குப் பிந்திய சமமின்மைகளையும் கவனத்தில் எடுத்தல் உட்பட அதன் மட்டுப்படுத்தல்களையிட்டு நாம் கவனமாகவும் இருக்கவேண்டும்.
காணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் சிவில் சமூகத்தின் வகிபங்கு
காணாமல்போகச்செய்தல்களைத் தடுப்பதற்கும், நிகழ்ந்துள்ள காணாமல்போகச் செய்தல்களைக் கவனத்திற்கெடுப்பதற்குமான ஆரம்பநிலையிலான பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது. ஆனால், இது குறித்து நான் விவரிக்கமாட்டேன் என்பதுடன், சிவில் சமூகத்தின் வகிபங்கு மீது குவிமையப்படுத்திய கவனத்தைக் கொண்டிருப்பதைத் தொடர்கின்றேன். வழக்கறிஞர்களையும், கலைஞர்களையும், கல்வியலாளர்களையும், மதகுருமார்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், தொழிற்சங்கங்களையும் உள்ளடக்குவதற்கு சிவில் சமூகத்தின் பரந்த வரைவிலக்கணமொன்றை நான் எடுக்கின்றேன். சில தனிப்பட்ட அனுபவங்களையும், பன்னிரண்டு சவால்களாக நான் நோக்கும் விடயங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்
இலங்கையில் பல்வேறுபட்ட இடங்களிலும், கடல்கடந்த நாடுகளிலும், காணாமல்போகச்செய்தல்கள் தொடர்பில் அதிகளவு உரைகளை நிகழ்த்தியுள்ளேன். நான் பெருமளவு கட்டுரைகளை{1} எழுதியுள்ளதுடன், நேர்முகங்காணல்களையும் வழங்கியுள்ளேன். தனிப்பட்ட கதைகள்{2}, புள்ளிவிபரங்கள், பொதுவான போக்குகள், அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் ஆகியவை பற்றிய அனுபவங்களை பரிமாறியுள்ளேன். ஆனால், கடந்த இரவு, இன்று நான் என்ன கூறப்போகின்றேன் என்பதையிட்டு நினைத்துப் பார்ப்பதற்கு கஷ்டப்பட்டேன். சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றுவதற்கு என்னைக் கேட்டதனாலும், சிவில் சமூகத்தின் அங்கமாக என்னை நான் கருதுவதனாலும் அனேகமாக கஷ்டமாக விளங்குகின்ற சில தனிப்பட்ட தன்னறிவு ஆய்வினை அது சம்பந்தப்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன்.
எனது குடும்ப உறுப்பினர்கள் எவருமே காணாமல்போகச்செய்யப்படவில்லை. ஆனால், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் ஒரு சில குடும்பங்களுடன் நான் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதுடன், ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்படுவதற்கும், மேலும் பலருடன் இணைவதற்குமான சந்தர்ப்பங்களைக் கொண்டிருந்தேன். அவர்கள் தமிழர்களையும், சிங்களவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியுள்ளனர்.
2015 முதல், கடந்த காலத்தின் காணாமல்போகச்செய்யப்பட்டோரைக் கவனத்திற்கெடுப்பதற்காக சில புதிய சாத்தியக்கூறுகள் வெளிப்பட்டுள்ளன. சவால்கள் குறித்து நான் பேசும்போது அவற்றில் சிலவற்றையிட்டு கலந்துரையாடுவேன்.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவராக நாம் சில நேரங்களில் யார் பாதிக்கப்பட்டவர்கள்? யார் குற்றமிழைத்தவர்கள்? என்ற தெளிவற்ற தொடர்புகளுடன் பணியாற்ற வேண்டியுள்ளது. 2012 ஓகஸ்டில், வவுனியாவில் காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிராகப் போராட்டமொன்றை நாம் ஒழுங்குசெய்தபோது பெருமளவு காணாமல்போகச்செய்தல்களுக்கும், அத்துடன் வேறு பெருமளவு குற்றங்களுக்கும் மற்றும் உரிமை மீறல்களுக்கும் இராணுவத்தினரே பொறுப்பாகவும் குற்றவாளிகளாகவும் இருக்கின்றபோது, காணாமல்போயுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களுடன் நாம் ஏன் இணைய வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்களுடன் நான் வாதாட வேண்டியிருந்தது. 2010இல் சிறுவர் ஆட்சேர்ப்புக்கும், வேறு குற்றங்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கியமான எல்.ரி.ரி.ஈ. தலைவராக விளங்கிய ஒருவர் இராணுவத்தில் சரணடைந்த பின்னர், காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவிக்கு நான் ஏன் ஆதரவளிக்கின்றேன்? என்பதற்காக சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடம் நான் கருத்தியல் ரீதியாகப் போராடவும், நெருங்கிய சகபாடிகளுடன் விவாதிக்கவும் வேண்டியிருந்தது.
சில வழிகளில், பின்னோக்கிப் பார்க்கையில் அபாயகரமானதாகவும், விவாதத்திற்குரியதாகவும் இருந்த போதிலும், ராஜபக்ஷே ஆட்சியின்போது காணாமல்போகச்செய்தல்கள் மீது எமது பணி இலகுவாக விளங்கியது. யுத்தத்தின் உச்ச கட்டத்தின்போது அவர்களது தேடல்களின் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கும், முகாம்களுக்கும் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் துணைக்குச் செல்வதில் கணிசமானளவு நேரத்தை எனது சகபாடிகளும், நானும் செலவழித்தோம். அவர்களது வீடுகளில், அலுவலகங்களில், தேவாலயங்களில் அவர்களுடன் பேசுவதில் நேரத்தைச் செலவழித்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், ஜெனிவா ஆகியவற்றில் உள்ள வீதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். சமய வழிபாடுகளிலும் அவர்களுடன் நாம் இணைந்திருந்தோம். அரசாங்க அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சந்திப்பதற்காக நாம் அவர்களுடன் சென்றோம். அவர்களுடன் நீதிமன்றங்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் பலதரப்பட்ட வேறு விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் சென்றோம். கடிதங்களையும், அவர்களின் அனுபவக்கதைகளையும் எழுதுவதற்கு நாம் அவர்களுக்கு உதவியதுடன், சில வேளைகளில் அவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவினோம். அவர்களது உரைபெயர்ப்பாளர்களாகவும் செயற்பட்டோம். அவர்களுக்கு உதவக்கூடிய வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவ செயற்பாட்டாளர்கள், இராஜதந்திரிகள், ஐ.நா. அதிகாரிகள் ஆகியோருக்கும், சர்வதேச மற்றும் பிராந்திய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தினோம். நாமும் அவர்களது கதைகளை சாத்தியமானளவு – அதிகளவு மக்களுக்குக் கூறியுள்ளோம்.
ஆனால், அண்மித்த கடந்த காலத்தில் காணாமல்போகச்செய்தல்களைக் கையாள்வதில் மையமாகவுள்ளதாக நான் நம்புகின்ற காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நாம் செய்யக்கூடிய இலகுவான விடயங்களைக் கூட செய்வது கஷ்டம் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
இப்போது நன்கு அறியப்பட்டுள்ள சந்தியா எக்னலிகொட எனது மிகப் பலமான உந்துசக்திகளில் ஒருவராவார்{3}. சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தில் பணியாற்றியபோது அவர் அங்கு அடிக்கடி வருவதுடன், அவருடன் நான் நிறைய நேரத்தைச் செலவழித்துள்ளேன். ஆனால் பின்னர் முன்னரைப்போல அதிகளவு நேரத்தை அவருடன் செலவழிக்க முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன், சந்தியா ஒழுங்குபடுத்திய மத வழிபாடொன்றில் என்னால் இணைந்துகொள்ள முடியவில்லையே எனத் துயரப்பட்டேன். ஒரு சில நாட்களின் பின், சர்வதேசப் பெண்கள் தினத்தன்று சந்தியா தனியாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டியிருந்தது என்பதை அறிந்தபோது துயரப்பட்டேன். இரு நாட்களிலும் அவருடன் இணைந்து கொள்ளுமாறு எனது நண்பர்களை அல்லது சகபாடிகளை வழிப்படுத்த முடியாமைக்கான எனது இயலாமையையிட்டும் நான் துயரப்பட்டேன்.
ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் தனது காணாமல்போகச்செய்யப்பட்ட கணவர் தொடர்பில் என்னிடம் வந்து, தனது இரு இளம் பிள்ளைகளுக்குப் பால் உணவு வாங்குவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், கட்டணமின்றி ஆஜராவதற்கு இணங்கக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை கண்டறிவதற்கு என்னால் இயலாமல் இருந்தது. கடந்த இரு மாதங்களில் நான் சந்தித்த வேறு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைப் பொறுத்தளவில், என்னால் அவர்களது வழக்குகளைச் சரிவர தொடர முடியாமல் இருந்தது. அண்மைய காலங்களில் ஐ.நாவுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடொன்றை அல்லது கடிதமொன்றை வரைவதற்கு அல்லது மொழிபெயர்ப்பொன்றைச் செய்வதற்கு குடும்பமொன்றுக்கு உதவக்கூடிய யாரேனும் ஒருவரைக் கண்டறிவது கஷ்டமாக இருக்கின்றது.
கடந்த காலத்தைப் போலன்றி மிகவும் கிட்டிய மாதங்களில் நாம் சந்தித்த காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் நீண்டகால உறவுகளை எனது சகபணியாளர்களினாலும், என்னாலும் பேண முடியாமலிருந்தது. நாம் கிரமமாக தொடர்பாடலைக் கொண்டிருக்கத் தவறியுள்ளதுடன், ஒன்றுக்கு மட்டுப்பட்டிருந்த அல்லது இடையிடையே நடந்த கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கூட சந்திக்க முடியவில்லை. குடும்பங்களின் குறிப்பான தேவைகளை பூர்த்திசெய்ய நாம் தவறியுள்ளதுடன், வாய்ப்புக்களும், சாத்தியக்கூறுகளும் நிலவிய போது கூட, உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மால் இயலவில்லை.
உண்மையான சவால்களும், உண்மையான ஏமாற்றங்களும் இருந்துள்ளன.
எவ்வாறு “வீட்டில் அழுதிருக்கிறோம், வீதிகளில் சண்டையிட்டிருக்கிறோம்” என்பதை அர்ஜென்ரீனாவில் உள்ள “பிளாஸா டீ மயோவின்” சேர்ந்த ‘எஸ்ரெலா கார்லொட்டா’ இவ்வாறு விபரித்தார். இக்கூற்று நான் நெருக்கமாகப் பணியாற்றிய மிகத் துணிவும், திடசங்கற்பமும் கொண்ட காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கும், அனேகமாக உண்மையாக இருக்கும். இது எனக்கும் உண்மையானதாகும். காணாமல்போகச்செய்யப்படுதலுக்கு எதிராகப் பணியாற்றுவது மனவதிர்ச்சி கொண்டது என்பதுடன், சில வேளைகளில் ஒரு தனித்த பயணமுமாகும். அதிகாரமின்மையும், உதவியின்மையும் உயர்வான உணர்வுகளாகும். நான் அதிகளவு நேரத்தையும், அதிகளவு சக்தியையும் செலவழித்துள்ளேன். அதிகளவு ஆபத்துக்களை எதிர்நோக்கி, அதிகளவை இழந்து, ஒரு சிறிதளவையே சாதித்துள்ளேன். காணாமற்போதல் தொடர்பான நடவடிக்கைகளை அனேகமாக கைவிட்டுவிடுவேன் என்ற உணர்வு இருந்த போதிலும், நான் என்ன செய்தேன் என்பதையிட்டு நான் மனவருத்தப்படுவதில்லை.
பன்னிரண்டு சவால்கள்
ஆரம்பநிலையாக, எனது தனிப்பட்ட அனுபவங்களின் மீதான அடிப்படையிலும், தற்போதையை சூழமைவைக் கரிசனைக்கெடுத்தும் காணாமல்போகச்செய்தல்களைக் கவனத்திற்கெடுப்பதைப் பொறுத்தளவில் சிவில் சமூகம் முகங்கொடுக்கும் பன்னிரண்டு சவால்களைக் கலந்துரையாட விரும்புகின்றேன்.
- அதிகளவு அரசியலாகவும், சட்டப் பரிமாணங்களைக் கொண்டதாகவும் திகழும் ஆழமான தனிப்பட்ட துன்பியல்ரீதியான சோகத்தை அங்கீகரித்தலும், கவனத்திற்கெடுத்தலும். உணர்வுபூர்வமான நிதிசார் மற்றும் சட்டபூர்வ ஆதரவும், ஆதரித்துவாதாடுதலும் உட்பட, முற்றுமுழுதான அணுகுமுறையொன்றைச் சம்பந்தப்படுத்துகின்றது.
- காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிலைத்திருக்கத்தக்க துணையாகச் செல்லுதலும், ஆதரவளித்தலும் (ஒன்றுக்கு மட்டுப்பட்டுள்ள நிகழ்வுகள் இல்லை என்பதுடன், தொடர்பாடலின்றி நீண்ட இடைவெளிகள்).
- அவர்களது போராட்டங்களில் ஒரு சில குடும்பங்களுக்குத் தீவிரமான ஆதரவைச் சமநிலைப்படுத்துதலும், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான பரந்த போராட்டங்களும்.
- சக செயற்பாட்டாளர்களினதும், வழக்கறிஞர்களினதும், ஊடகவியலாளர்களினதும், கல்வியியலாளர்களினதும், மத குருமார்களினதும், அரசியல்வாதிகளினதும் ஆதரவைப் பெறுதல்
- ஊக்கத்துடன் இயங்குதலையும், குடும்பங்களின் நிமித்த காரணத்தை அங்கீகரித்தலும், அவர்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்குக் கவனமாக இருத்தல்.
- போராட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நாம் ஆரம்பிக்கின்றபோதும், ஒழுங்குபடுத்துகின்றபோதும் மேற்படி செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு நாம் குடும்பங்களிடம் கேட்கின்றபோது, அவர்கள் அறிவூட்டப்பட்ட தீர்மானங்களை எடுப்பதை உறுதிப்படுத்தல். நிகழ்ச்சியொன்றை யார் ஒழுங்குபடுத்துகிறார்? நிகழ்ச்சியொன்றின் தன்மை, நிகழ்ச்சியொன்றின் நோக்கங்கள், போராட்டமொன்றில் எதிர்க்கப்படவுள்ள பிரச்சினைகள், கோரப்படும் கோரிக்கைகள் ஆகியன உட்பட அவர்களது ஈடுபாடு ஏன் கோரப்படுகின்றது? என்பது பற்றிய தெளிவான தகவல் குடும்பங்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகும்.
- அரசியல்வாதிகளின், அரச சார்பற்ற நிறுவனங்களின் கைப்பாவையாகக் குடும்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என நாம் உணர்கின்ற போது, ஆராய்ந்தறிகின்ற விதத்தில் நோக்குதலும், வெளிப்படையாகப் பேசுதலும்.
- தெரிந்துகொள்வதற்காக மற்றும் சொந்தத் தேவை காரணமாக வெறுமனே பகடைக்காய்களாக காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களைக் குறைத்து மதிக்காமல் இருப்பதற்கு கவனமாக இருத்தல்.
- காணாமல்போனோரின் குடும்பங்களுடனான சிவில் சமூக அமைப்பினரின் தொடர்பு – எந்தளவு தலைமைத்துவத்தையும், செல்வாக்கினையும் நாம் பொறுப்பேற்றுக்கொள்கின்றோம். அத்துடன் குடும்பங்கள் எந்தளவைக் கொண்டிருக்கின்றன, சந்தியா என்ன செய்துகொண்டிருந்தார்? என்பன போன்று சில நடவடிக்கைகளை காணாமல்போகச்செய்யப்பட்டவரின் குடும்பமொன்று அல்லது குடும்பங்களின் குழுவொன்று ஆரம்பிக்கும் போது சிவில் சமூகத்திலிருந்து எந்தளவு ஆதரவுள்ளது?
- குடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிக்காத வழியொன்றின் மூலம் உண்மைக்கும், குற்றவியல் நீதிக்கும், இழப்பீடுகளுக்கும் ஆதரித்துவாதாடுவதற்காகவும், பேரம்பேசுவதற்கான அவசியத்தைக் குறைந்தபட்சமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிதல். மேற்படி உரிமைகள் தொடர்பில் வேறுபட்ட குடும்பங்களின் வேறுபட்ட கரிசனைகளை கவனத்திற்கெடுக்க வேண்டும். காணாமற்போகச் செய்யப்பட்டோர் பற்றிய அலுவலக நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்குக் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் ICRCஇன் அவசியங்கள், மதிப்பீட்டு அறிக்கையைக் கிடைக்கச்செய்தால், மதிப்பிடுவதில் உபயோகமான கருவியாக திகழக்கூடும். சிறுவர்களுக்கு புலமைபபரிசில்கள், வயது மூப்பானவர்களுக்கும், காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களில் உள்ள வலதுகுறைந்தோருக்கும், விசேட உதவி, வீடமைப்பு மற்றும் தொழில் போன்ற இடைக்கால நிவாரணங்களுக்கு (குற்றத்திற்கு இழப்பீடு அல்ல) ஆதரவளித்தலும், ஆதரித்து வாதாடுதலும். உண்மைக்கும், நீதிக்கும் குடும்பங்களின் உரிமைகளைக் குறைத்து மதிப்பிடாமல், அவற்றின் ஆற்றலளவை மேம்படுத்தும் தன்மையொன்றில் மனப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.
- உண்மையை நாடுவதற்கு பல் எண்ணிக்கையிலான அணுகுமுறைகளை ஆராய்தல்.
- குற்றவியல் விசாரணைகள். எனது நண்பர் பட்டாணி ராஸிக்கின்{4} உடலைக் கண்டுபிடித்தமை மற்றும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான கைதுகள் மற்றும் தகவல் போன்றன மீதான அடிப்படையில் உண்மைக்கு நாம் நெருக்கமாகவுள்ள சில சம்பவங்கள் எனக்குத் தெரியும்.
- யார் குற்றமிழைத்தவர்கள் என்பதைக் காட்டும் பலமான சான்று இருக்கும் போதும், கைதுகள், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை மீதான கடுமையான அபராதங்கள் ஆகியன உடனடியாக நிகழக்கூடியன என்று இருக்கும் போதும் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து ஊக்குவிப்புக்களை (குறைக்கப்பட்ட அபராதங்கள் போன்ற) வழங்குவதன் மூலம், மேலதிகமானதும், விரிவானதுமான தகவலை வழங்குவதற்கு சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும்.
- காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் விருப்பங்களையும் கரிசனைக்கெடுத்து சாதாரண குற்றவியல் வழக்குகளில் (இரகசியத்தன்மை, அனாமதேயத்தன்மை மற்றும் ஒவ்வொரு வழக்கு என்ற அடிப்படை மீது சாத்தியமான விதத்தில் விலக்கீட்டுரிமையின் உறுதிமொழிகளுடன் கூட) பயன்படுத்தப்படுகின்றது போன்ற ஊக்குவிப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் சார்த்துரைக்கப்பட்ட குற்றமிழைத்தவர்களிடமிருந்தும், குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்தும் வெளிப்படுவதற்கு தகவலை ஊக்குவித்தல்.
- ஆரம்பநிலையிலான குற்றமிழைத்த நிறுவனங்களின் அங்கம் சாராத சுதந்திரமான நேரடிச் சாட்சிகளிடமிருந்து தகவலை வேண்டுதல்.
- நாட்டின் பலதரப்பட்ட பகுதிகளின் மனித புதைக்குழிகளுக்கும், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் DNA மற்றும் சட்ட மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தல்.
- கடந்த காலத் தவறுகளையும், இது வரையிலான நடைமுறையின் ஒளிவுமறைவின்மையின் பற்றாக்குறையையும் கரிசனைக்கெடுத்து, உத்தேசமான காணாமல்போகச்செய்யப்பட்டோர் அலுவலகத்தை நிறுவுதலும், அதற்குப் பங்களித்தலும். சில கரிசனைகள் பின்வருமாறு இருக்கலாம்:
- காணாமல்போனோர் அலுவலகம், கண்காணிப்புக் கட்டமைப்புகள் உட்பட அதன் தொழிற்பாடுகளையும் அமைப்பதில் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களின் ஆகக்கூடுதலான இருத்தல். இதுவரையிலான கலந்துரையாடல்களின்போது அவர்களைத் தவிர்த்தமை தவறானது என்பதுடன், அது உடனடியாகவே சீரமைக்கப்படவும் வேண்டும்.
- இலங்கையில் காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியல்படுத்துவதும், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான சமவாயத்தை ஏற்றுக்கொள்வதும் காணாமல்போனோர் அலுவலகத்தைத் தாபிக்கும் சட்டவாக்கம் இயற்றப்படுவதற்கு முன் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தல்.
- உண்மையைக்கண்டறிதல் மீது ஆரம்பநிலையாக நோக்கினைக் கொண்டுள்ள அதேவேளை, குற்றவியல் நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளநிகழாதிருப்பதற்கான உத்தரவாதங்கள் ஆகியனவற்றைப் பின்தொடர்ந்து செல்வதை அதன் பணி எவ்வாறு வசதிப்படுத்தும் என்பதையிட்டு கலந்துரையாடுதல்.
- காணாமல்போனோர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச முகவராண்மைகள் முன்னேற்றமடைவதையும், ஏதேனும் வழியில் உண்மையையும், நீதியையும் நோக்காகக் கொண்டு செல்வதை தடைசெய்யாதிருப்பதையும் உறுதிப்படுத்தல்.
- உள்ளடக்கப்படக்கூடிய (கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல்போகச்செய்தல்கள், காணாமல்போதல் போன்ற தெளிவான வரைவிலக்கணம் மீதான அடிப்படையில்) குற்றங்களின் விரிவெல்லையை வரையறுத்தல்.
- காணாமல்போகச்செய்யப்பட்ட (அது நடந்த திகதிக்கு அக்கறையின்றி சகல காணாமல்போகச்செய்தல்களை நோக்கி) திகதி மீதான அடிப்படையில் சம்பவங்களின் கரிசனையைக் கட்டுப்படுத்தாதிருத்தல்.
- காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கும் கட்டமைப்பு மற்றும் வேறுபட்ட அலகுகள் (சட்ட மருத்துவம், DNA வங்கி, புலன்விசாரணைகள், உளவியல் சமூக ஆதரவு, பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல்).
- அதில் யார் இருப்பார்? முழுமையான தலைமைத்துவம், குறிப்பான அலகுகளில் தலைமைத்துவம், கவனக்குறைவு, பணியாளர் போன்ற விடயங்களில் யார் நியமனங்களைச் செய்வார்கள்?
- காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்களால் உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஆகக்கூடுதலான சர்வதேசத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத்துவம்.
- முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களிலிருந்து (உதாரணம்: பரணகம ஆணைக்குழு, மஹாநாம திலகரத்ன ஆணைக்குழு, LLRC போன்ற) நடந்து கொண்டிருக்கும் வழக்குகளை இடமாற்றுவதற்கான சாத்தியமான வழிகள்.
- மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், பொலிஸிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினதும் மற்றும் விசேடமாக ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களினதும், மேல் நீதிமன்றங்களினதும் மற்றும் உயர் நீதிமன்றங்களினதும் முன் விசாரணையில் உள்ள வழக்குகளினதும் அதன் மீதான முடிவுகளையும், முன்னேற்றத்தையும் கையாளுதல்.
- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடைமுறையிலான தரவுத்தளத்தை முழுமையாக்குதலும் அத்துடன் இசைவாக்குதலும்.
- தரவுத்தளத்தின் பாதுகாப்பு
- ஏதேனும் ஆவணங்களையும், பொருட்களையும் வேண்டுதல் மற்றும் பறிமுதல் செய்தல், யாரேனும் நபர்களை ஆஜர்படுத்துதல், முன்கூட்டிய அறிவித்தலின்றி தனிப்பட்ட அல்லது பொது இடங்களுக்கு வருகைதரல், சடலத்தைத் தோண்டியெடுத்தல், அதன் பணியுடன் ஒத்துழைக்காத நிறுவனங்களையும், நபர்களையும் கையாளுதல் போன்றவற்றுக்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும்.
- அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு ஆதரித்துவாதாடுதல். காணாமல்போகச்செய்தல்களைக் குற்றவியலாக்குதல், காணாமல்போகச்செய்தல்களுக்கு எதிரான ஐ.நா. சமவாயத்தை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதன் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கக் கூடிய வகையில் காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குதல்.
- பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துதலும், பொதுமக்களிடமிருந்து அதிகளவு ஆதரவை ஈட்டுதலும். விசேடமாக சிங்களவர் (இதில் பாரிய வகிபங்கொன்றை பிரதான நீரோட்ட ஊடகங்கள் ஆற்றவேண்டும்).
- பணம். நன்கொடை நிதிப்படுத்தலுக்கு அப்பால் ஊக்கத்துடன் இயங்குதலை எம்மால் நிலைநிறுத்த முடியுமா? நிதிப்படுத்தலை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? உதாரணம்: மாதமொன்றுக்கு காணாமல்போகச்செய்யப்பட்டோரின் பெருமளவு குடும்பங்கள் ஈட்டுகின்ற தொகையை விட செலவு இருக்கும் போது, ஒரு நாளைக்காக ஹோட்டல் அறை ஒன்றுக்கு செலவழிப்பது சரியா (காணாமல்போகச்செய்தல்கள் மீது கூட்டமொன்றில் பங்கெடுப்பதற்காக)? உள்நாட்டுப் பொருளாதாரங்களைத் தூண்டுவதன் மூலம் பொருளாதார நீதி, போராட்டங்களுக்கு தமது நடைமுறையிலான ஆதரவின் நெடுகிலும் நிலைத்திருக்கும் தொழிலைத் தோற்றுவித்தல், கருத்தரங்குகள் மற்றும் அத்தகைய முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக நன்கொடையாளரின் கவனத்தை ஈட்டுதல். தனியார் துறையும் பங்களிக்க முடியும். ஆனால், நடைமுறையிலான பொருளாதார சமமின்மைகளை அது அதிகரிக்காது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரங்களைச் சேதமாக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவற்றின் தொடர்பு குறித்து கவனமாக நோக்கப்பட வேண்டும்.
[1] உதாரணத்திற்கு, http://groundviews.org/2015/11/11/disappearances-in-sri-lanka-and-the-visit-of-the-un-working-group-on-disappearances/ http://groundviews.org/2014/08/30/disappearances-and-the-struggle-for-truth-and-justice/, http://groundviews.org/2013/08/30/sri-lankas-disappeared-visit-navi-pillay-and-another-commission-of-inquiry/, http://groundviews.org/2011/11/07/destroying-monuments-for-those-killed-disappeared-the-catholic-church-and-the-sri-lankan-government/ மற்றும் http://www.una.org.uk/magazine/autumn-2012-and-winter-2012-special/one-every-five-days-ruki-fernando-disappearances-sri-la
[2] உதாரணத்திற்கு, http://groundviews.org/2016/02/15/where-is-journalist-subramanium-ramachandran-9-years-after-he-disappeared/ , http://groundviews.org/2015/08/20/9-years-after-disappearance-of-fr-jim-brown-mr-vimalathas/ , http://groundviews.org/2015/02/11/pattani-razeek-no-justice-5-years-after-abduction-and-killing/kw;Wk; http://groundviews.org/2013/01/23/11073/
[3] http://groundviews.org/2013/01/23/11073/
[4] http://groundviews.org/2015/02/11/pattani-razeek-no-justice-5-years-after-abduction-and-killing/