போர் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம்.

கடந்த அரச காலத்தின் போது, மனக்காயத்துக்கான சிகிச்சைகள் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்ததாகக் கூறும் தயா சோமசுந்தரம், சில அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மறைமுகமாக செய்யவேண்டி வந்ததாகவும் கூறுகிறார்.

மனக்காயத்தை ஆற்றுவதற்கான நடவடிக்கையில், மக்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களை சொல்ல நேரும்போது, அந்தத் தகவல்கள் கசிந்து, அவை போர்க்குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இருந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர்.

“மற்றது போரில் தோல்விகண்டவர்களுக்கு ஏன் வெற்றிபெற்றவர்கள் உதவவேண்டும் என்ற மனப்பான்மையும் அவர்களுக்கு இருந்தது” என்கிறார் பேராசிரியர்.

தனியே மனக்காயத்துக்கு மட்டும் சிகிச்சை வழங்காமல், அவர்களது வாழ்வாதார தேவைகள், அடிப்படைத் தேவைகளைக் கவனத்தில் எடுத்து ஆழிப்பேரலையின் பின்னர் செய்ததைப் போன்று ஒரு முழுமையான, பரந்துபட்ட செயற்பாட்டை முன்னெடுத்தால் கூடுதலான நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறுகிறார் பேராசிரியர் தயா சோமசுந்தரம்.

முழுமையான நேர்க்காணலை கீழே காணலாம்.