“புகையிரத நிலையம் என்பது 24 மணித்தியாலங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு நிறுவனம். அங்கே 24 மணித்தியாலமும் பணியில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, பெண்ணொருவருக்கு புகையிர நிலையமொன்றில் பணியாற்ற முடியாது, அதுவும் மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் உள்ள புகையிரத நிலையங்களில் பெண்கள் பணியாற்றுவதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. சமூக செயற்பாட்டாளர் என்ற ரீதியில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது, மிகவும் தூரத்தில் அமைந்துள்ள, மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் சிங்கம், புலி போன்ற மிருகங்களிடமிருந்து ஆபத்து என்றால் அது ஆண்களுக்கும்தான் இருக்கிறது. ஒரு ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டும் யானை மிதித்துக் கொல்லப்போவதில்லை. புலியும் அப்படித்தான்” என்று கூறுகிறார் சமூக செயற்பாட்டாளரான வீரசிங்கம்.

ரயில்வே திணைக்களத்தில் 106 ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வெற்றிடத்துக்காக பொருத்தமானவர்களை தெரிவுசெய்வதற்காக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் கல்வித் தகைமைக்கு மேலதிகமாக வேறு தகுதிகள் எனும் பிரிவில் “ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படையில் சட்டத்தின் முன்னால் பெண்கள் சமமாக நடத்தப்படுவதற்காகக் காணப்படும் அடிப்படை உரிமை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் வித்தியாசமாக நடத்தப்படக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதென மனித உரிமை செயற்பட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை சவாலுக்கு உட்படுத்தி தங்களுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாகக் தெரிவித்து இரு பெண்கள் உயர் நீதிமன்றல் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் வீரசிங்கம் தெவித்த கருத்தை கீழே பார்க்கலாம்.