படம் | Colombogazette
நேற்று கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உத்தயோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ஜனாதிபதி தெரிவித்தார் என செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனைக் கீழ் காணலாம்.
#LLRC பரிந்துரைகளில் 30% அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திரு. பான் கீ மூன் அவர்களுக்கு @PresRajapaksa விளக்கமளித்தார். #SriLanka #CICA
— LLRC Action (@LLRCAction) May 22, 2014
கடந்த பெப்ரவரி மாதம் 2014ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை கீழ் காணலாம்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளில் 85 வீதமானவற்றை அரசு அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்துக்கு முன்பு 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரேஷ்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க,
ஏற்கனவே 99 வீதமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமுல்படுத்தியுள்ளதுடன், இதனைக் கொண்டு ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள அமெரிக்க ஆதரவு பிரேணைக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் 50 வீதமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார். இங்கு காணலாம்.
ஆக, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது குறித்து பொய் பிரசார நடவடிக்கைகளில் நாட்டின் ஜனாதிபதி உட்பட அரசின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதை இதன் மூலம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாடுகளின், அமைப்புகளின் இராஜதந்திரிகளின் முன் இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் தமிழர் பிரச்சினையில் அரசின் உண்மையான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு காணக்கூடியதாக இருக்கிறது. அத்தோடு, தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் உள்ள அக்கறையும், ஆர்வமும் இதன் மூலம் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கலுக்கு தலைமை தாங்குவதற்காக ஜ.நா. செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.
ஆக, ஜனாதிபதி தெரிவித்துள்ள 30 வீதமான அமுலாக்கலை உண்மையானது என எடுத்துக்கொள்ளலாமா அல்லது?
நன்றி: Groundviews