“இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். வரவில்லையென்டா அப்படியே காணாமல்போனதாகவே இருக்கட்டும். நீங்கள் விரும்பினால் மாசி 15 வரும்போது காணாமல்போன விசயத்த அவரது நினைவா போடுங்க. நாங்களும் அந்த 15ஆம் திகதி அவர நினைச்சுக்கொண்டு இருக்கிறம். வேறேன்ன செய்ய? நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா தானே அர்த்தம். அப்படியென்டா திதியல்ல கொடுக்கோனும். அந்த நட்டஈட்ட என்ட கையால வேண்டின உடனே நான் இறந்தது மாதிரிதான்.”

15 வருடங்களாக தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்காவின் ஆழ அடுக்குகளில் இறுகிப்போகியிருக்கும் வலியுணர்விது.

சுப்பிரமணியம் ராமச்சந்திரன், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். இவர் காணாமலாக்கப்படும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் நெல்லியடி பிரதேச செய்தியாளராக கடமையாற்றிவந்தார். இவர் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 15 வருடங்களாகின்றன. ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்ட அன்று நடந்த சம்பவங்கள், விசாரணைகள், ஆதாரங்கள், அவர் வழங்கிய செய்திகளின் தன்மை, அவர் பற்றிய விபரங்களை ராமச்சந்திரனின் அக்கா மற்றும் காணாமலாக்கப்பட்ட காலப்பகுதியில் யாழ். தினக்குரல் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த முத்துத்தம்பி வாமதேவன் மாற்றத்துடன் பகிர்ந்துகொண்டனர்.

சுப்பிரமணியம் ராமச்சந்திரன் பற்றிய ஆவணப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட கட்டுரை: காணாமல்போய் ஒன்பது வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் எங்கே?