யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தெற்கில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. ஆட்சி மாற்றத்தின் பிறகு இம்முறை கடந்த 5 வருடங்களைப் போலில்லாமல் வித்தியாசமாக யுத்த வெற்றி தெற்கில் கொண்டாடப்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த வெற்றி தினம்’ என்ற நாமத்தில் கொண்டாடாமல் ‘படை வீரர் நினைவு தினம்’ என்ற பெயரில் மே 19 இராணுவ அணிவகுப்புடன் யுத்த வெற்றி தினமாக மாத்தறையில் நடத்தினர். இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. மறுபக்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ தனது பரிவாரங்களுடன் தனியாக தனது பழைய நாமத்துடன் கொண்டாடினார். இன்னொரு பக்கம் ஜாதிக ஹெல உறுமய.

தெற்கில் வருடா வருடம் கொண்டாடப்பட்டுவரும் யுத்த நிறைவு தினம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மன உளைச்சலை கொண்டுவந்துகொண்டிருக்கிறது. யுத்தம் நிறைவுறும்போது என்னென்ன பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தார்களோ அவை இன்னும் பின்தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், தெற்கின் பார்வையில், நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு, தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் தொந்தரவின்றி மக்கள் தங்களுடைய உறவுகளுடன் கூடி வாழ்கின்றனர்.

ஆகவே, 6 வருடங்கள் கடந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது கருத்துக்களை பதிவுசெய்ய ‘மாற்றம்’ முடிவு செய்தது. அங்கு மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை. சந்தித்த அத்தனை பேரும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் அனுபவித்துவரும் துன்பியல் வாழ்க்கையை புகைப்படக் கட்டுரையாக இங்கு பதிவுசெய்துள்ளோம்.

புகைப்படக் கட்டுரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

360 டிகிரி கோணத்தில் முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதி.

 

360 டிகிரி கோணத்தில் 26 வருடங்களுக்குப் பிறகு மீள்குடியேற்றப்பட்ட வீமன்காமம் கிராமம்.