கௌரவ கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு

ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

ஜனாதிபதி செயலகம்,

காலிமுகத்திடம்

கொழும்பு 01

 

பிரதி:

கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ

புத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர்,

பிரதமர் அலுவலகம்

58, சேர் எர்னஸ்டி டி சில்வா வீதி,

கொழும்பு 07

 

எம்.கே. பந்துல ஹரிச்சந்திர,

செயலாளர்,

புத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு,

8ஆவது மாடி, செத்சிரிபாய (கட்டடம் 1)

பத்தரமுல்லை

 

தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளரை பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில் நிபுணர்களாகிய நாம் கண்டிக்கிறோம்.

கௌரவ ஜனாதிபதி அவர்களே,

கலாநிதி நதீரா ரூபசிங்கவை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர்  பதவியிலிருந்து நீக்குவதற்கு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தை கீழே கையெழுத்திட்டிருக்கும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில் நிபுணர்களாகிய நாங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். கலாநிதி ரூபசிங்க நீக்கப்படுவதற்கான காரணத்தை உத்தியோகபூர்வமாக அமைச்சு தெரிவிக்காமை குறித்தும் எமது கவனத்தைச் செலுத்தியுள்ளோம்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்று சென்றதன் பின்னரே கலாநிதி ரூபசிங்க தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் அமர்த்தப்பட்டார். தனது பணிக்காலத்தில் கறைபடியாத கையுடன் சேவையாற்றி வந்த இவர், இந்த நாட்டில் ஒரு முக்கியமான பொதுநிறுவனமாக சுவடிகள் திணைக்களத்தை நிலைநிறுத்தவேண்டும் என்ற வலுவான புரிதலைக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் புதிய அறிவுற்பத்திகளில் ஈடுபடுவதற்கு திணைக்களம் முக்கியமான பங்கை வகிக்கவுள்ளது. வெறுமனே சுவடிகள் காப்பக திணைக்களம் பிரதிநிதித்துவத்தை மட்டும் செய்யாமல், மிகவும் பலமான கலாச்சார மற்றும் கல்வி நிறுவனமாக, உள்ளக செயன்முறைகளை நவீனமாக்குவது, ஊழியர்களின் திறனை வலுப்படுத்துவது, இந்த நாட்டில் அனைத்து சமூகத்தினரையும் ஈடுபடுத்துவதற்கான செயல்முறை ஒன்றை இதயசுத்தியுடன் மேற்கொள்வது தொடர்பில் கலாநிதி ரூபசிங்கவின் எதிர்கால நோக்கு மற்றும் அறிவு அவசியமானது என்பதே எங்களது உறுதியான கருத்து.

கலாநிதி ரூபசிங்கவை நீக்குவதற்காக நடவடி​க்கைகளை எடுப்பதன் மூலம் திணைக்களத்தின் செயல்பாடுகளை வழிநடத்துவதற்காக இடம்பெற்றுவரும் முக்கியமான கொள்கை உருவாக்க முயற்சிகள் மற்றும் தற்போது இடம்பெற்றுவரும் விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் போன்றன எதிர்காலத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடும். குறைந்த தொழில்நுட்ப அறிவுகொண்ட அரசாங்க அதிகாரிகள், திணைக்களத்தில் பணியாற்றும் நிபுணர்களை நீக்குவதன் மூலம் நூற்றாண்டு காலம் பழமையான ஆவணங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிப்பார்களேயானால் திணைக்களத்தை ஒருபோதும் அபிவிருத்தி செய்யவோ, வலுப்படுத்தவோ முடியாமல் போகும். இவ்வாறான தன்னிச்சையான, பொறுப்பற்ற மற்றும் பாரிய விளைவை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் தேசிய காப்பக பாரம்பரியத்தை நேரடியாக அச்சுறுத்துவதோடு, அதற்கு நாம் எமது கண்டத்தை வெளியிடவேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக கலாநிதி ரூபசிங்க நிறைவேற்றிய பிரதான இலக்குகள் மீது அவதானத்தைச் செலுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

 1. திணைக்களத்தின் பிரதான கட்டடத்தை நவீனமாக்குவதைக் கருத்தில் கொண்டு, மத்திய பகுதியில் குளிரூட்டல், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் உயர் பாதுகாப்பு முறைகளை புதுப்பித்து நிறுவுவதற்காக ஒரு பில்லியன் ரூபா பெறுமதியில் பணிகளைத் தொடங்குதல்.
 2. 1885ஆம் ஆண்டிலிருந்து உலகில் இருந்துவரும் பழைமையான காப்பக சட்டத்திற்குப் பதிலாக இன்றைய காலத்துக்கேற்ப புதிய சட்டத்தை உருவாக்குதல்.
 3. கட்டடத்தை திருத்தும் நோக்குடன் புதிய இடத்தில் ஆவணங்களை சேமித்து வைப்பதற்காக பெருந்தொகையான ஆவணங்களை சுத்தம் செய்தமை மற்றும் மீண்டும் அவற்றை கவர்களில், அமிலம் அற்ற பெட்டிகள் சேகரித்து வைத்தமை.
 4. பல வருடங்களாக அனுமதி வழங்கப்படாமலிருந்த ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு ஒப்புதலைப் பெற்றுக்கொண்டமை மற்றும் மேற்பார்வை மட்டத்தில் சிரேஷ்ட பதவிநிலைகளுக்கான நேர்க்காணல்களை மேற்கொண்டமை.

மேல் உள்ளவற்றைக் கவனத்தில் கொண்டு கலாநிதி ரூபசிங்கவை நீக்குவதற்கான முயற்சியை உடனடியாக நிறுத்துவதோடு, அவருடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவை வழங்குமாறு அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கிறோம். அரசாங்க அதிகாரிகளின் கட்டுப்பாடு மற்றும் இடையூறு இன்றி திணைக்களத்துக்கு, அதன் ஊழியர்களுக்கு கடமைகளைச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். எம்முடைய நாட்டின் கூட்டு நினைவுகளைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள திணைக்களத்துடன் அரசாங்கத்துக்குள்ள தொடர்பை கட்சி அரசியல் பலத்தைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதே எமது கருத்தாகும். துறைசார் நிபுணத்துவம் கொண்ட, சமத்துவம் மற்றும் ஒழுக்கநெறியைக் கொள்கைகளாகக் கொண்டவர்களாலேயே இந்தப் பணியை மேற்கொள்ள முடியும்.

நாங்கள் அனைவரும் கலாநிதி ரூபசிங்கவுக்கு ஆதரவாக நிற்கிறோம். தற்போதைய நிலையை உடனடியாக சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

கையெழுத்திட்டவர்கள்

 1. Dilum Alagiyawanna
  2. Liyanage Amarakeerthi
  3. Crystal Baines
  4. Dr. Malathi de Alwis
  5. Venerable Professor Mahinda Deegalle—Bath Spa University
  6. Dr. Siran U. Deraniyagala—Retd. Director-General of Archaeology (1992-2001), Archaeological Department of Sri Lanka
  7. Desamanya Vidya Jyothi Ashley de Vos
  8. Visaka Dharmadasa
  9. Geethika Dharmasinghe—PhD Candidate, Cornell University
  10. Ruki Fernando
  11. Sajini Fernando—Attorney-at-Law
  12. Dr. Udan Fernando
  13. Prof. Savitri Goonesekere
  14. Sanjana Hattotuwa—Founding Editor, Groundviews.org
  15. Samal Hemachandra
  16. A. Jafferjee
  17. Dr. Janaki Jayawardena—Dept. of History, University of Colombo
  18. Ramya Chamalie Jirasinghe—Author and Researcher
  19. Anushka Kahandagamage, Reading for MPhil/PhD in Sociology, South Asian University, New Delhi
  20. Dilkie Liyanage
  21. S. Marcelline
  22. Dr. Chinthaka Prageeth Meddegoda—University of Visual and Performing Arts
  23. Nigel Nugawela—Archivist
  24. Gananath Obeyesekere—Professor Emeritus, Princeton University
  25. Dr. Ranjini Obeyesekere—Retired Professor, Princeton University
  26. Johann. A. Peiris
  27. Iromi Perera
  28. Deborah Philip
  29. Harshana Rambukwella—Open University of Sri Lanka
  30. Dr. Kavan Ratnatunga—Research Scientist
  31. Dr. Michael Roberts—Adjunct Associate Professor, University of Adelaide
  32. Dr. Sumanthri Samarawickrama
  33. Dr. Jagath P. Senaratne
  34. Mrs. K. Stephan
  35. Sandun Thudugala—Social Activist
  36. Tanuja Thurairajah
  37. Praveen Tilakaratne
  38. Thakshala Tissera
  39. Senel Wanniarachchi
  40. Jagath Weerasinghe—former Director, Postgraduate Institute of Archaeology, and Director Archaeology, Sigiriya World Heritage Site of CCF
  41. Shamara Wettimuny—University of Oxford
  42. Prof. Nira Wickramasinghe—Leiden University
  43. Subha Wijesiriwardena—Women and Media Collective
  44. Mrs. P. Wimalaratne-van der Geest
  45. Dr. Dileepa Witharana

கடிதத்தை ஆங்கிலத்தில் படிக்க